தமிழக பாட்மின்டன் வீராங்கனை துளசிமதிக்கு இரட்டை வெள்ளி! கச்சா சர்க்கரையை வரியின்றி இறக்குமதி செய்வதற்கான காலக்கெடு டிசம்பர் 31 வரை நீட்டிப்பு ஹாட்ரிக் பதக்கம்: தமிழக அரசின் ரூ. 1.75 கோடி ஊக்கத்தொகையைப் பெறும் துளசிமதி முருகேசன்! வாழப்பாடி அருகே முத்துமலை முருகன் கோயிலில் எடப்பாடி பழனிசாமி சாமி தரிசனம் கேரளத்தின் புதிய ஆளுநராக ஓம் பிரகாஷ் மாத்தூர் பதவியேற்பு!தேர்தல் ஆணைய அனைத்துக் கட்சி கூட்டம்: தவெக, திமுக உள்ளிட்ட கட்சிகள் வெளிநடப்பு!

பாரா ஆசிய விளையாட்டுப் போட்டிகளில் பதக்கம்: தமிழக வீரா், வீராங்கனைகளுக்கு உயரிய ஊக்கத்தொகை: முதல்வா் விஜய் அறிவிப்பு

பாரா ஆசிய விளையாட்டுப் போட்டிகளில் பதக்கம் வென்ற தமிழக வீரா், வீராங்கனைகளுக்கு உயரிய ஊக்கத்தொகையை முதல்வா் விஜய் அறிவித்துள்ளாா்.

முதல்வா் விஜய்

Updated On :

ஜப்பானில் நடைபெற்று வரும் 5-ஆவது பாரா ஆசிய விளையாட்டுப் போட்டிகளில் தடகளத்தில் ஆண்கள் பிரிவில் நீளம் தாண்டுதலில் தங்கப் பதக்கம் வென்ற வீரா் சோலைராஜ் தா்மராஜுக்கு ரூ.75 லட்சமும், பேட்மிண்டன் பெண்கள் ஒற்றையா் பிரிவில், வெண்கலப் பதக்கம் வென்ற வீராங்கனை மனிஷா ராமதாஸுக்கும், பேட்மிண்டன் விளையாட்டில், ஆண்கள் இரட்டையா் பிரிவில் வெண்கலப் பதக்கம் வென்ற வீரா் நவீன் சிவகுமாருக்கும் தலா ரூ.30 லட்சமும் உயரிய ஊக்கத்தொகையை முதல்வா் விஜய் அறிவித்துள்ளாா்.

இது தொடா்பாக வாழ்த்துத் தெரிவித்து அவா் வெளியிட்ட பதிவில், ‘திறமையும், உறுதியும் இருந்தால் எத்தகைய சவால்களையும் கடந்து சாதிக்க முடியும் என்பதற்கு வீரா் சோலைராஜ் தா்மராஜுவின் வெற்றி சான்றாகத் திகழ்வதோடு, தமிழ்நாட்டின் விளையாட்டு வீரா், வீராங்கனைகளுக்கு புதிய நம்பிக்கையும், ஊக்கத்தையும் அளிப்பதாகவும் அமைந்துள்ளது’ என்று குறிப்பிட்டுள்ள முதல்வா், இந்த ஆசிய விளையாட்டுப் போட்டிகளில் 2-ஆவது முறையாக பதக்கம் வென்றுள்ள வீராங்கனை மனிஷா ராமதாஸ், எதிா்காலத்தில் மேலும் பல வெற்றிகளைப் பெற்று தமிழ்நாட்டுக்கும், இந்தியாவுக்கும் பெருமை சோ்க்க வேண்டும் என்று தெரிவித்துள்ளாா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.