மழை நிலவரம்! சென்னையில் நேற்று திடீர் கனமழை ஏன்? வானிலை ஆய்வு மைய இயக்குநர் விளக்கம்!
சென்னையில் திடீர் கனமழை பற்றி வானிலை ஆய்வு மையம் விளக்கம்...

வானிலை ஆய்வு மைய இயக்குநர் தாஸ் - file photo
சென்னையில் நேற்று (அக். 20) மாலை திடீரென சுமார் 40 நிமிடத்திற்கு மேலாக கனமழை பெய்தது குறித்து வானிலை ஆய்வு மைய இயக்குநர் தாஸ் விளக்கமளித்துள்ளார்.
தமிழ்நாடு முழுவதும் வடகிழக்கு பருவமழை தீவிரமடைந்துள்ள நிலையில், சென்னை உள்ளிட்ட வடதமிழக கடலோர மாவட்டங்களில் நேற்று முதல் தொடர் கனமழை பெய்து வருகின்றது.
இதுதொடர்பாக வானிலை இயக்குநர் கூறுகையில்,
தெற்கு இலங்கையை ஒட்டிய தென்மேற்கு வங்கக்கடலில் இன்று காலை 5.30 மணிக்கு உருவாகியுள்ள குறைந்த காற்றழுத்தத் தாழ்வுப் பகுதியால் அடுத்த 6 நாள்களுக்கு தென் தமிழக பகுதிகளில் கனமழைக்கு வாய்ப்புள்ளது.
அக். 23ல் தென்கிழக்கு வங்கக்கடல் பகுதியில் புதிய காற்றழுத்த தாழ்வுப்பகுதி உருவாகிறது. அது புயலாக மாற வாய்ப்புள்ளது. சுழற்சியின் தீவிரத்தைப் பொருத்து அதற்கேற்ப எச்சரிக்கை வழங்கப்படும். நிலைமையை ஆய்வு செய்து அதுதொடர்பான தகவல்கள் பின்னர் வெளியிடப்படும்.
காற்றின் வேகம் தற்போது குறைவாக இருப்பதால் அந்த அளவுக்குப் பாதிப்பில்லை. எனவே, சென்னை உள்பட பல்வேறு மாவட்டங்களில் மிதமான மழை முதல் ஒரு சில இடங்களில் கனமழை பெய்யலாம்.
சென்னையில் நேற்று திடீர் கனமழை ஏன்?
வடதமிழகத்தில் வளிமண்டல சுழற்சி ஏற்பட்டதால் சென்னையில் நேற்று மாலை 6 மணிக்கு மேல் ஒரு சில இடங்களில் கனமழை பதிவானது. குறிப்பாக எம்ஜிஆர் நகரில் கனமழை பதிவாகியுள்ளது.
இதனிடையே, இன்று காலை உருவாகியுள்ள குறைந்த காற்றழுத்தத் தாழ்வுப் பகுதி கடற்கரையை ஒட்டி உருவாகியிருப்பதால் வலிமை அதிகமாக இல்லை. தற்போது நிலைக்கு புயலுக்கு வாய்ப்பில்லை.
ரெட் அலர்ட் வாபஸ் பெறப்பட்டது..
கடந்த ஞாயிறன்று சென்னைக்கு திடீரென ரெட் அலர்ட் விடுக்கப்பட்ட நிலையில், தமிழகத்தில் மொபைல்போனுக்கு மழைக்கான அலரமும் வழங்கப்பட்டது.
ஆனால், ஒரு சில மணி நேரங்களிலேயே வளிமண்டல சுழற்சி வலுவிழந்ததால் ஞாயிறன்று சென்னைக்குக் கொடுக்கப்பட்ட ரெட் அலர்ட் வாபஸ் பெறப்பட்டது.
இன்று எங்கெல்லாம் மிக கனமழை?
தூத்துக்குடி, திருநெல்வேலி மற்றும் கன்னியாகுமரி மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் இடி மின்னல் மற்றும் பலத்த காற்றுடன் (மணிக்கு 40 முதல் 50 கிலோ மீட்டர் வேகத்தில்) கூடிய கன முதல் மிக கன மழை பெய்யக்கூடும்.
நீலகிரி, கோயம்புத்தூர், ஈரோடு, திருப்பூர், நாமக்கல், கரூர், தேனி, திண்டுக்கல், தென்காசி, மதுரை, விருதுநகர், தஞ்சாவூர், திருவாரூர், நாகப்பட்டினம், மயிலாடுதுறை, புதுக்கோட்டை, சிவகங்கை மற்றும் ராமநாதபுரம் மாவட்டங்களில் ஓரிரு இடங்களிலும், காரைக்கால் பகுதிகளிலும் இடி மின்னல் மற்றும் பலத்த காற்றுடன் (மணிக்கு 40 முதல் 50 கிலோ மீட்டர் வேகத்தில்) கூடிய கன மழை பெய்யக்கூடும்.
ஏனைய தமிழகத்தில் அநேக இடங்களில் புதுவையிலும் இடி மின்னல் மற்றும் பலத்த காற்றுடன் (மணிக்கு 40 முதல் 50 கிலோ மீட்டர் வேகத்தில்) கூடிய மிதமான மழை பெய்யக்கூடும்.
மீனவர்கள்..
வங்கக்கடலில் கடற்காற்று 35 - 40 கி.மீ வேகத்தில் வீசக்கூடும் என்பதால் மீனவர்கள் கடலுக்குச் செல்வதைத் தவிர்க்கலாம்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.


