செஞ்சி அருகே சிறுமி மாயமான வழக்கு: சிபிசிஐடிக்கு மாற்றம்!நாதக வேட்பாளர் கார்த்திகா கைதை கண்டித்த எதிர்க்கட்சித் தலைவர்களுக்கு நன்றி: சீமான்தமிழ்நாடு காவல்துறையில் தமிழுக்கே இடமில்லையா? - திமுக கேள்வி!போராட்டத்தில் பங்கேற்க ஒவ்வொரு மாணவருக்கும் ரூ. 3,000! - பாஜக குற்றச்சாட்டு!பூந்தமல்லி - வடபழனி மெட்ரோ ரயில் சேவை நேரத்தில் மாற்றம்!நடிகர் டைகர் ஷ்ராஃப் மீது துப்பாக்கிச்சூடு! மேலும் 2 பேர் கைது - இதுவரை 10 பேர்!நீதிமன்றக் காவலில் இருந்த சிஜேபி தலைவர்கள் அசுதோஷ், சௌரவ் விடுதலை!மழைநீர் சேமிப்பு விழிப்புணர்வு! தொடக்கி வைத்தார் முதல்வர் விஜய்!அக். 23 முதல் சென்னை சென்ட்ரல் - அரக்கோணம் இடையே குளிர்சாதன மின்சார ரயில்!வாடிக்கையாளர்களின் வங்கி இருப்புத்தொகை பாதுகாப்பாக உள்ளது: எஸ்பிஐ விளக்கம்வங்கி, நிதிப் பங்குகள் சரிவு எதிரொலி: வீழ்ச்சியில் இந்திய பங்குச் சந்தை!!6 வார உச்சத்தில் இந்திய ரூபாய்!

அக்.18 சென்னைக்கு ரெட் அலர்ட் ஏன்? வானிலை ஆய்வு மையம் விளக்கம்

அக்.18 சென்னைக்கு ரெட் அலர்ட் கொடுத்தது ஏன்? என்பது பற்றி வானிலை ஆய்வு மையம் விளக்கம்

தில்லியில் சுழ்ந்த கருமேகங்கள். ஆங்காங்கே லேசான, தூறல் மழை முதல் கனமழை பெய்ய வாய்ப்புள்ளதாகவும் வானிலை ஆய்வு மையம் கணிப்பு.

கரு மேகக் கூட்டங்கள்

Updated On :

சென்னைக்கு ஞாயிற்றுக்கிழமை கொடுத்த சிவப்பு எச்சரிக்கை பிறகு திரும்பப் பெறப்பட்டது ஏன் என்பது குறித்து சென்னை வானிலை ஆய்வு மையம் விளக்கம் கொடுத்துள்ளது.

தென் மண்டல வானிலை ஆய்வு மை இயக்குநர் துரை, இன்று பிற்பகலில் செய்தியாளர்களை சந்தித்தார்.

அப்போது, அவரிடம் சென்னைக்கு ரெட் அலர்ட் கொடுக்கப்பட்டது குறித்து கேட்கப்பட்டபோது, அக். 18ஆம் தேதி ஞாயிற்றுக்கிழமை வட தமிழக பகுதிகளில் வளிமண்டல சுழற்சி ஏற்பட்டது. அதனால் கனமழை பெய்யும் என எதிர்பார்க்கப்பட்டது. ஆனால், அது வலிமை குறைந்ததால் கனமழை வரவில்லை.

அது மட்டுமல்லாமல், அதற்கு முந்தைய நாள் கனமழை இருந்தது. எனவே, அடுத்த நாளும் கனமழை இருந்தாலும் சிவப்பு எச்சரிக்கை கொடுக்கலாம். எங்களுடைய விதிமுறைப்படி, அதற்கு முந்தைய நாள் கனமழை பெய்து, அடுத்த நாளும் கனமழை பெய்தால் சிவப்பு எச்சரிக்கை விடுக்கப்படலாம். எனவே, ஞாயிற்றுக்கிழமை கனமழை கண்காணிக்கப்பட்ட நிலையில் சிவப்பு எச்சரிக்கை கொடுக்கப்பட்டது என்றார்.

மேலும் அவர் பேசுகையில், குறைந்த காற்றழுத்த தாழ்வுப் பகுதி வடக்கு நோக்கி நகர்ந்தால் தமிழகத்தில் அவ்வளவு பாதிப்பு இருக்காது. காற்றழுத்த தாழ்வுப் பகுதி புயலாக மாற வாய்ப்பு உள்ளது.

நவம்பரில் வடகிழக்கு பருவமழை இயல்பைவிட அதிகளவில் பெய்ய வாய்ப்புள்ளது. வடகிழக்குப் பருவமழை தற்போது இயல்பை விட 12 சதவிகிதம் அதிகம் பெய்துள்ளது.

வடகிழக்குப் பருவமழையின் இயல்பு அளவு 44 செ.மீ. ஆகும். அக். 1 முதல் 21ஆம் தேதி வரை பதிவான மழையின் அளவு 11.1 செ.மீ.. எனவே இயல்பான மழையை விட 12 சதவிகிதம் அதிகம் உள்ளது என்று தெரிவித்துள்ளார்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.