வானிலை: தமிழகத்தில் 24 மணி நேரத்தில் பெய்த மழை அளவு! மங்களக்குடியில் அதிகபட்சம்!
தமிழகத்தில் 24 மணி நேரத்தில் பெய்த மழை அளவு குறித்து...

மழை - படம்: ANI
தமிழகத்தில் கடந்த 24 மணி நேரத்தில் (காலை 8.30 மணி வரையிலான) பெய்த மழை நிலவரத்தைப் பார்க்கும்போது, ராமநாதபுரம் மாவட்டம் மங்கலக்குடியில் அதிகபட்சமாக 90 மி.மீ. மழை பதிவாகியுள்ளது.
சுமார் 5.8 கி.மீ. உயரம் வரை வட தமிழக கடலோர பகுதிகளுக்கு அப்பால் உள்ள தென்மேற்கு வங்கக்கடல் பகுதிகளின் மேல் ஒரு வளிமண்டல சுழற்சி நிலவுகிறது.
சுமார் 1.5 கி.மீ. முதல் 3.1 கி.மீ. உயரம் வரை வட தமிழக கடலோர பகுதிகளுக்கு அப்பால் உள்ள தென்மேற்கு வங்கக்கடல் பகுதிகளின் மேல் நிலவும் வளிமண்டல சுழற்சியிலிருந்து வடமேற்கு வங்கக்கடல் பகுதிகள் வரை ஒரு காற்றழுத்த தாழ்வுப் பாதை (Trough) நிலவுகிறது.
இதன் காரணமாக, தமிழகத்தில் பெரும்பாலான மாவட்டங்கள் மற்றும் புதுவையிலும் இடி மின்னல் மற்றும் பலத்த காற்றுடன் மழை பெய்தது.
தமிழகத்தில் கடந்த 24 மணி நேரத்தில் (காலை 8.30 மணி வரையிலான) பெய்த மழை அளவு:
அமராவதி புதூர் (சிவகங்கை மாவட்டம்), மங்களக்குடி (ராமநாதபுரம் மாவட்டம்), பேராட்டுக்கோட்டை (சிவகங்கை மாவட்டம்) தலா 9. மி.மீ. மழை பதிவு.
திருவாடானை (ராமநாதபுரம் மாவட்டம்), தலைஞர் (நாகப்பட்டினம் மாவட்டம்), வடபாதிமங்கலம் (திருவாரூர் மாவட்டம்) தலா 8 மி.மீ. மழைப் பொழிவு.

தோலம்பாளையம் (கோயம்புத்தூர் மாவட்டம்), பிரிஞ்சிமூலை (நாகப்பட்டினம் மாவட்டம்), கடம்பக்குடி (ராமநாதபுரம் மாவட்டம்), தேவகோட்டை ஏஆர்ஜி (சிவகங்கை மாவட்டம்) தலா 7 மி.மீ. மழை பதிவு.
தஞ்சை பாபநாசம் (தஞ்சாவூர் மாவட்டம்), தேவகோட்டை (சிவகங்கை மாவட்டம்), ராமநாதபுரம் (ராமநாதபுரம் மாவட்டம்), திருப்பத்தூர் (சிவகங்கை மாவட்டம்), மானாமதுரை (சிவகங்கை மாவட்டம்), சித்தம்பட்டி (மதுரை மாவட்டம்) தலா 6 மி.மீ. மழை பதிவாகியுள்ளது.
Summary
Looking at the rainfall in Tamil Nadu in the last 24 hours (till 8.30 am), the maximum rainfall of 90 mm was recorded in Mangalakudi in Ramanathapuram district.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.


