வானிலை எச்சரிக்கை! அக். 23ல் உருவாகிறது புதிய காற்றழுத்த தாழ்வுப்பகுதி!
தென் கிழக்கு வங்கக்கடலில் புதிய காற்றழுத்தத் தாழ்வு பற்றி..

புதிய காற்றழுத்த தாழ்வுப்பகுதி - file photo
தென் கிழக்கு மற்றும் அதை ஒட்டிய கிழக்கு மத்திய வங்கக்கடல் பகுதியில் அக். 23-ஆம் தேதி புதிய காற்றழுத்த தாழ்வு பகுதி உருவாக வாய்ப்புள்ளது.
தமிழ்நாட்டில் அக். 15-ஆம் தேதி வடகிழக்குப் பருவமழை, தமிழ்நாடு, கேரளம், புதுவையில் தொடங்கியதாக இந்திய வானிலை ஆய்வு மையம் அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது.
இதன் காரணமாக, சென்னை உள்பட பல்வேறு மாவட்டங்களில் ஆங்காங்கே மிதமான மழை முதல் கனமழை வரை பரவலாக பெய்து வருகின்றது. ஒரு சில மாவட்டங்களில் வடகிழக்குப் பருவமழை தீவிரமடைந்துள்ளது.
இதனிடையே, தென்மேற்கு அரபிக்கடலில் நிலவிய ஆழ்ந்த காற்றழுத்தத் தாழ்வுப்பகுதி வலுப்பெற்ற ஆழ்ந்த காற்றழுத்தத் தாழ்வுப் பகுதியாக, அதே பகுதியில் நிலைகொண்டுள்ளது.
அடுத்த 12 மணி நேரத்தில் ஆழ்ந்த காற்றழுத்தத் தாழ்வுப் பகுதியானது மேற்கு-வடமேற்கு திசையில் நகரக்கூடும் என்று கணிக்கப்பட்டுள்ளது.
இந்தப் புயல் சின்னம் நாளை (அக். 21) காற்றழுத்தத் தாழ்வுப் பகுதியாக வலுவிழந்து, அக். 22-ல் சோமாலியா கடற்கரை நோக்கி நகரும் என்று இந்திய வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
இந்த நிலையில், அக். 23-ல் தென் கிழக்கு மற்றும் அதை ஒட்டிய கிழக்கு மத்திய வங்கக்கடல் பகுதியில் புதிய காற்றழுத்தத் தாழ்வு உருவாக உள்ளது. இந்த காற்றழுத்தத் தாழ்வானது தாய்லாந்து வளைகுடா பகுதி மற்றும் மியான்மரில் வளிமண்டல மேலடுக்கு சுழற்சி நிலவுகிறது.
வளிமண்டல மேலடுக்கு சுழற்சி நாளை காலைக்குள் வடக்கு அந்தமான் கடல் பகுதியில் தாக்கத்தை ஏற்படுத்தும். இதன் தாக்கத்தால் தென் கிழக்கு மற்றும் அதை ஒட்டிய கிழக்கு மத்திய வங்கக் கடலில் காற்றழுத்தத் தாழ்வுப்பகுதி உருவாகக்கூடும்.
புதிய காற்றழுத்தத் தாழ்வுப்பகுதி மேற்கு - வட மேற்காக நகர்ந்து மேலும் வலுப்பெறக் கூடும் என வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.


