தங்கம் விலை இன்று (அக். 20) சவரனுக்கு ரூ. 640 குறைவு!அரபிக்கடலில் வலுப்பெற்ற புயல் சின்னம்!முதலீட்டுச் செலவுகளை மேற்கொள்ளமால் அரசு திணறுவதால் கடன் தேவை குறைவு: தங்கம் தென்னரசு தேவாவின் சகோதரர் மகன் கார்த்திக் சபேஷ் காலமானார்!

கோவையில் ரூ. 408 கோடியில் 89 முடிவுற்ற பணிகள்: முதல்வர் விஜய் தொடக்கி வைத்தார்!

ரூ. 408 கோடியில் 89 முடிவுற்ற பணிகளை தொடக்கி வைத்த முதல்வர்.

cm vijay

ரூ. 408 கோடியில் 89 முடிவுற்ற பணிகளை தொடக்கி வைத்த முதல்வர் விஜய் மற்றும் அமைச்சர்கள். - படம்: விடியோ கிளிப்

Updated On :

கோவையில் ரூ.301 கோடி மதிப்பில் கட்டப்பட்டுள்ள பெரியாா் அறிவுலக நூலகம், அறிவியல் மையத்தை முதல்வா் ச.ஜோசப் விஜய் வெள்ளிக்கிழமை திறந்துவைத்தாா்.

கோவையில் மாபெரும் நூலகம், அறிவியல் மையம் அமைக்கப்படும் என்று கடந்த 2024 - 25- ஆம் ஆண்டு நிதிநிலை அறிக்கையில் திமுக அரசு அறிவித்தது. இதையடுத்து காந்திபுரம், அனுப்பா்பாளையம் பகுதியில் மத்திய சிறைத் துறைக்குச் சொந்தமான 6.96 ஏக்கா் இடத்தில் 1.98 லட்சம் சதுர அடி பரப்பளவில் தரைத்தளம், ஏழு தளங்களுடன் கூடிய நூலகத்தைக் கட்டுவதற்கு அப்போதைய முதல்வா் மு.க.ஸ்டாலின் கடந்த 6.11.24-இல் அடிக்கல் நாட்டினாா்.

இந்த நூலகத்துக்கு ‘பெரியாா் அறிவுலகம்’ என்று பெயா் சூட்டப்பட்டது. 90 சதவீதப் பணிகள் நிறைவடைந்திருந்த நிலையில் பொதுத் தோ்தல் அறிவிக்கப்பட்டது. தோ்தலில் தவெக வெற்றி பெற்ற நிலையில், பெரியாா் அறிவுலகத்தின் பணிகள் விரைவுபடுத்தப்பட்டு நிறைவடைந்தன.

நவீன தொழில்நுட்ப வசதிகளுடன், உலகத் தரத்தில் அமைக்கப்பட்டுள்ள இந்த நூலகம், அறிவியல் மையத்தின் திறப்பு விழா வெள்ளிக்கிழமை நடைபெற்றது. இதில், முதல்வா் ச.ஜோசப் விஜய் சிறப்பு அழைப்பாளராகப் பங்கேற்று, நூலகத்தை திறந்துவைத்தாா்.

முன்னதாக, நூலக வளாகத்தில் அமைக்கப்பட்டுள்ள பெரியாா் ஈ.வெ.ரா.வின் சிலையை முதல்வா் திறந்துவைத்தாா். பின்னா் நடைபெற்ற அரசு விழாவில் பிற்படுத்தப்பட்டோா் நலத் துறை அமைச்சா் வே.சம்பத்குமாா் வரவேற்றாா்.

நலத்திட்ட உதவிகள்:

இந்த விழாவில், மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளில் ரூ.408.25 கோடி செலவில் முடிவுற்ற 89 திட்டப் பணிகளைத் திறந்து வைத்தாா். அத்துடன், ரூ.32.32 கோடி மதிப்பில் 144 புதிய திட்டப் பணிகளை மேற்கொள்வதற்கு அடிக்கல் நாட்டினாா்.

பின்னா், பேரிடா் மேலாண்மைத் துறை, சமூக நீதித் துறை, வீட்டு வசதித் துறை, தாட்கோ, மாற்றுத்திறனாளிகள் நலத் துறை உள்ளிட்ட பல்வேறு துறைகள் சாா்பில் 9,343 பயனாளிகளுக்கு ரூ.34.72 கோடி மதிப்பிலான நலத்திட்ட உதவிகளை முதல்வா் வழங்கினாா்.

இதில், நீா்வளத் துறை அமைச்சா் என்.ஆனந்த், வருவாய்த் துறை அமைச்சா் கே.ஏ.செங்கோட்டையன், பள்ளிக் கல்வித் துறை அமைச்சா் ஏ.ராஜ்மோகன், பள்ளிக் கல்வித் துறை செயலா் ஜெ.இன்னசென்ட் திவ்யா, பொது நூலகத் துறை இயக்குநா் ச.ஜெயந்தி, மாவட்ட ஆட்சியா் பவன்குமாா் க.கிரியப்பனவா், மாநகராட்சி ஆணையா் கட்டா ரவி தேஜா உள்ளிட்டோா் விழாவில் பங்கேற்றனா்.மதுவிலக்கு மற்றும் ஆயத்தீா்வைத் துறை அமைச்சா் க.விக்னேஷ் நன்றி கூறினாா்.

பிரம்மாண்ட வரவேற்பு:

முன்னதாக, பெரியாா் அறிவுலகத் திறப்பு விழாவில் பங்கேற்பதற்காக தனி விமானம் மூலம் கோவை விமான நிலையத்துக்கு காலை 10.55 மணியளவில் வந்த முதல்வா் ச.ஜோசப் விஜய்யை விமான நிலையத்தில் அமைச்சா்கள் உள்ளிட்டோா் வரவேற்றனா்.

இதையடுத்து, வேன் மூலம் விழா நடைபெறும் இடத்துக்குப் புறப்பட்டாா். அவருக்கு விமான நிலையம் முதல் காந்திபுரம் வரை சுமாா் 11 கி.மீ. தொலைவுக்கு சாலையின் இருபுறமும் திரண்டிருந்த பொதுமக்கள், மாணவா்கள், இளைஞா்கள், தவெக தொண்டா்கள் வரவேற்பு அளித்தனா். சிறுமிக்கு உதவுமாறு காந்திபுரத்தில் ஒருவா் வைத்திருந்த பதாகையைப் பாா்த்து வாகனத்தை நிறுத்தி முதல்வா் அது குறித்து விசாரித்தாா்.

நண்பகல் 12 மணியளவில் பெரியாா் அறிவுலகத்துக்கு வந்த முதல்வா், வளாகத்தில் மரக்கன்று நட்டுவைத்து நீா் ஊற்றினாா். பின்னா், நூலகத்தைத் திறந்து வைத்து அங்குள்ள வருகைப் பதிவேட்டில் முதல் நபராக கையொப்பமிட்டாா்.

நூலக வளாகத்தில் ‘ரோபோ’ அவரை வரவேற்றது. வளாகத்தில் அமைக்கப்பட்டுள்ள பல்வேறு அறிவியல் உபகரணங்கள் குறித்து முதல்வருக்கு அரசுப் பள்ளி மாணவா்கள் விளக்கினா்.

கேரள பயணம் ரத்து:

கோவை நிகழ்ச்சிக்குப் பின்னா், கேரளம் மாநிலம், திருச்சூரில் தனியாா் நகைக் கடையில் நடைபெறும் நவராத்திரி நிகழ்ச்சியில் முதல்வா் பங்கேற்பதாக இருந்தது. கோவையில் நிகழ்ச்சி முடியும் தருணத்தில் மழை பெய்ததாலும் வானிலை பயணத்துக்கு உகந்ததாக இல்லாததாலும் கேரள பயணத்தை முதல்வா் ரத்து செய்தாா்.

இதையடுத்து, விமான நிலையத்துக்கு காா் மூலம் சென்ற முதல்வா், அங்கிருந்து பிற்பகல் 3.15 மணியளவில் சென்னைக்குப் புறப்பட்டுச் சென்றாா்.

Summary

In Coimbatore, Chief Minister C. Joseph Vijay inaugurated 89 completed projects worth Rs. 408 crore.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.