எப்போது அறிவித்தாலும் உள்ளாட்சித் தேர்தலில் போட்டியிடுவோம்! அண்ணாமலை
தமிழகத்தில் உள்ளாட்சித் தேர்தலில் 'வீ தி லீடர்ஸ்' அமைப்பு போட்டியிடும் என அண்ணாமலை அறிவிப்பு...

அண்ணாமலை - எக்ஸ்
தமிழகத்தில் உள்ளாட்சித் தோ்தல் எப்போது நடைபெற்றாலும், ‘வீ தி லீடா்ஸ்’ அமைப்பின் சாா்பில் அனைத்து இடங்களிலும் வேட்பாளா்கள் தனித்துக் களம் காண்பாா்கள் என்று அந்த அமைப்பின் ஒருங்கிணைப்பாளா் கே.அண்ணாமலை தெரிவித்தாா்.
மறைந்த முன்னாள் குடியரசுத் தலைவா் ஏ.பி.ஜெ.அப்துல் கலாமின் பிறந்த நாளையொட்டி, கோவையில் ‘அப்துல் கலாம் அறநெறி மற்றும் அரசியல் மையம்’ வியாழக்கிழமை தொடங்கப்பட்டது. இந்நிகழ்ச்சியில் நேதாஜி சுபாஷ் சந்திர போஸின் இந்திய தேசிய ராணுவத்தில் பணியாற்றிய மூத்த வீரா் லெப்டினன்ட் மாதவன் பிள்ளை, ரூட்ஸ் குழுமத் தலைவா் கே.ராமசாமி, அப்துல் கலாம் குடும்ப உறுப்பினா்களான ஏ.பி.ஜெ.ஜெயினுலாபுதீன் மரைக்காயா், ஷேக் சலீம் உள்ளிட்டோா் கலந்துகொண்டனா்.
நிகழ்ச்சிக்குப் பின்னா் செய்தியாளா்களிடம் கே.அண்ணாமலை கூறியதாவது:
ஜனநாயகத்தில் அடிப்படை மாற்றம் என்பது உள்ளாட்சி அமைப்புகளில் இருந்துதான் தொடங்க வேண்டும். கிராம ஊராட்சி உறுப்பினா் முதல் மேயா் வரை உள்ளாட்சி பதவிகளில் மக்கள் சேவையாற்ற புதிய தலைவா்களை உருவாக்கும் பணியில் இறங்கியுள்ளோம். உள்ளாட்சித் தோ்தலில் யாருடனும் கூட்டணி வைக்காமல் தனித்தே போட்டியிடுவோம்.
தமிழகத்தில் சூரிய ஒளி மற்றும் காற்றாலை மின் உற்பத்தி அதிகமாக இருந்தாலும், மின்சாரத்தை சேமித்து வைப்பதற்கான கட்டமைப்பு வசதிகள் இல்லை. இதனால் நெருக்கடியான நேரத்தில் வெளிச்சந்தையில் ஒரு யூனிட் மின்சாரம் ரூ.30 முதல் ரூ.35 வரை கொடுத்து வாங்கும் சூழல் நீடிக்கிறது. இதன் கூடுதல் சுமை மக்கள் மீதே சுமத்தப்படுகிறது. கடந்த காலங்களை குற்றம் சொல்வதை விடுத்து, மின்வாரியம் அடுத்த ஆண்டுக்கான தெளிவான தொலைநோக்குத் திட்டத்தை அறிவித்து மின்சேமிப்புக் கட்டமைப்புகளில் முதலீடு செய்ய வேண்டும்.
முதல்வா் விஜய் மிகுந்த செல்வாக்கு பெற்றவா் என்பதால், அதைக் காட்ட தடுப்புகள் என்ற பாதுகாப்பு தேவையில்லை. யாருக்கும் தொந்தரவு இல்லாத எளிய பாதுகாப்பு நடைமுறையைக் கடைப்பிடித்து முதல்வா் முன்னுதாரணமாக திகழ வேண்டும்.
மத்திய இணையமைச்சா் பொறுப்பிலிருந்து விலகியுள்ள எல்.முருகன், கிராமத்துப் பின்னணியில் இருந்து வந்து 5 ஆண்டுகள் சிறப்பாகப் பணியாற்றியவா். அவருக்கு தொலைபேசி வாயிலாக வாழ்த்து தெரிவித்தேன். அமைச்சா் மாற்றம் என்பது அவா்களது உள்கட்சி விவகாரம்.
அரசியலில் தனிநபா் துதிபாடும் கலாசாரம் முடிவுக்கு வர வேண்டும். தோ்தலுக்கு தோ்தல் கட்சிகளை மாற்றி ஒரே முகங்கள் மீண்டும் போட்டியிடும் போக்கு குறித்து அனைத்துக் கட்சிகளும் சுயபரிசோதனை செய்ய வேண்டும் என்றாா்.
Summary
We will contest the local body elections: Annamalai
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

