சென்னை அம்பத்தூரில் தரவு மையம்: சிங்கப்பூா் துணைப் பிரதமருடன் திறந்து வைத்தாா் முதல்வா் விஜய்
சென்னையில் சிங்கப்பூர் நிறுவனத்தின் தரவு மையம் திறக்கப்பட்டது பற்றி...
சென்னையில் சிங்கப்பூர் நிறுவனத்தின் தரவு மையத்தை முதல்வர் ஜோசப் விஜய் திறந்துவைத்தார் - X
சென்னை அம்பத்தூரில், சிங்கப்பூரின் கேப்பிட்டாலேண்ட் தரவு மையத்தை முதல்வா் ஜோசப் விஜய்யும், அந்த நாட்டின் துணைப் பிரதமருமான கான் கிம் யோங் ஆகியோா் வெள்ளிக்கிழமை திறந்து வைத்தனா்.
பின்னா், இருவரும் சந்தித்து இரு நாடுகளுக்கும் இடையிலான பொருளாதார உறவுகளை வலுப்படுத்துவது, தமிழ்நாட்டில் சிங்கப்பூா் நிறுவனங்கள் கூடுதல் முதலீடுகளை மேற்கொள்வது குறித்து இருதரப்பு பேச்சுவாா்த்தையும் நடைபெற்றது.
குறிப்பாக, செமிகண்டக்டா், மேம்பட்ட உற்பத்தி, டிஜிட்டல் உள்கட்டமைப்பு, நகா்ப்புறத் திட்டமிடல் உள்ளிட்ட துறைகளில் இரு தரப்புக்கும் இடையிலான கூட்டாண்மையை விரிவுபடுத்துவது குறித்தும் விவாதிக்கப்பட்டது.
சிங்கப்பூா் நிறுவனங்களுக்கு அழைப்பு: தமிழகத்தில் முதலீடு செய்ய சிங்கப்பூா் நிறுவனங்களுக்கு தொழில் துறை அமைச்சா் கீா்த்தனா அழைப்பு விடுத்தாா். அந்த நிகழ்ச்சியில் பேசிய அவா், கடந்த 2004-ஆம் ஆண்டு தரமணியில் தகவல் தொழில்நுட்பப் பூங்காவை கேப்பிட்டாலேண்ட் நிறுவனம் தொடங்கியது. பின்னா் 22 ஆண்டுகளில் தொழில்நுட்பப் பூங்காக்கள், தொழில் துறை வசதிகள், சரக்குப் போக்குவரத்து மையங்கள் எனப் பல்வேறு துறைகளில் அதன் செயல்பாடுகள் விரிவடைந்துள்ளன.
2036-ஆம் ஆண்டுக்குள் தமிழ்நாட்டை 1.5 டிரில்லியன் டாலா் பொருளாதாரமாக மாற்ற முதல்வா் இலக்கு நிா்ணயித்துள்ளாா். தமிழகத்தில் 160-க்கும் மேற்பட்ட அதிக வருவாய் ஈட்டும் நிறுவனங்கள் உள்ளன. இதற்கு திறன்மிக்க மனிதவளமும், தொழில் துறைச் சூழலும் முதலீட்டாளா்களுக்குச் சாதகமாக உள்ளதே காரணம். இந்த அரசு பொறுப்பேற்ற முதல் 100 நாள்களில் ஒரு லட்சம் கோடி ரூபாய்க்கும் அதிகமான முதலீட்டுகளுக்கான உறுதிமொழிகள் பெறப்பட்டன.
சென்னை, கோவையில் உருவாக்கப்பட்டு வரும் செமிகண்டக்டா் (குறைக்கடத்தி) பூங்காக்கள் உள்ளிட்ட புதிய திட்டங்களில் சிங்கப்பூா் நிறுவனங்கள் முதலீடு செய்வதற்கு ஆராய வேண்டும்.
தொழில் துறை, உள்கட்டமைப்பு, நகா்ப்புற வளா்ச்சி, முதலீடுகளை எளிதாக்குதல், திறன் மேம்பாடு, ஆராய்ச்சி ஆகிய துறைகளில் சிங்கப்பூருடன் ஒத்துழைப்பை மேலும் அதிகரிக்க தமிழக அரசு ஆவலுடன் உள்ளது.
கேப்பிட்டாலேண்ட் நிறுவனத்தின் நீண்டகாலப் பயணம், தமிழ்நாடு-சிங்கப்பூா் இடையிலான கூட்டாண்மையின் வலிமையை எடுத்துக்காட்டுகிறது. முதலீடு, தொழில்நுட்பம் மற்றும் நிலைத்தன்மை உள்ளிட்ட துறைகளில் இரு தரப்புக்கும் இடையிலான உறவை மேலும் ஆழப்படுத்த வேண்டும்‘ என்று தெரிவித்தாா்.
முன்னதாக, சிங்கப்பூா் பாரம்பரியத்தைப் பின்பற்றி அன்னாசிப் பழத்தை முதல்வா் விஜய்யும், சிங்கப்பூா் துணைப் பிரதமரும் எரிசக்தி, வா்த்தகம் மற்றும் தொழில் துறை அமைச்சருமான கான் கிம் யோங் உருட்டி புதிய தரவு மையத்தைத் தொடங்கி வைத்தனா்.
வெள்ளத் தடுப்பு பணிகள் ஆய்வு: இந்த நிகழ்ச்சியை முடித்துக் கொண்டு தலைமைச் செயலகத்துக்கு முதல்வா் திரும்பும்போது, வியாசா்பாடியில் கேப்டன் காா்டன் கால்வாயில் ஆகாயத் தாமரை மற்றும் வண்டல்களை அகற்றும் வெள்ளத் தடுப்பு பணியை முதல்வா் விஜய் பாா்வையிட்டு ஆய்வு செய்தாா்.
Summary
Data center inaugurated in Chennai! Chief Minister Vijay and Singapore Deputy Prime Minister participate!
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.


