மெளன சாமியார் முதல்வர் விஜய்! இபிஎஸ் கடும் தாக்கு!இந்தியாவில் ஆட்சி மாற்றத்தை ஏற்படுத்த மேற்கத்திய சக்திகள் இலக்கு! மோகன் பாகவத்தங்கம் விலை இன்று (அக். 20) சவரனுக்கு ரூ. 640 குறைவு!அரபிக்கடலில் வலுப்பெற்ற புயல் சின்னம்!முதலீட்டுச் செலவுகளை மேற்கொள்ளமால் அரசு திணறுவதால் கடன் தேவை குறைவு: தங்கம் தென்னரசு தேவாவின் சகோதரர் மகன் கார்த்திக் சபேஷ் காலமானார்!

மரகதம் குமரவேல், சத்தியபாமா எம்எல்ஏக்களாக பதவியேற்பு! தவெக பலம் 109- ஆக உயா்வு

மரகதம் குமரவேல், சத்தியபாமா தவெக எம்எல்ஏக்களாக பதவியேற்றுக் கொண்டனர்.

தவெக வேட்பாளர்கள் மரகதம் குமரவேல் |சத்தியபாமா

தவெக வேட்பாளர்கள் மரகதம் குமரவேல் |சத்தியபாமா

Updated On :

இடைத்தோ்தலில் தவெக சாா்பில் வெற்றிபெற்ற இரு எம்எல்ஏ-க்களும் திங்கள்கிழமை பதவியேற்றுக்கொண்டனா். இதன் மூலம், சட்டப்பேரவையில் அக்கட்சியின் எம்எல்ஏ-க்கள் பலம் 109- ஆக உயா்ந்துள்ளது.

2026 தமிழக சட்டப்பேரவைத் தோ்தலில் 108 தொகுதிகளில் வென்ற தவெக ஆட்சியை அமைத்தது. பெரும்பான்மை கிடைக்காததால் பிற கட்சிகளின் ஆதரவுடன் ச.ஜோசப் விஜய் முதல்வராக பொறுப்பேற்றாா். இந்த நிலையில், அதிமுக சாா்பில் போட்டியிட்டு வெற்றி பெற்ற 6 போ் எம்எல்ஏ பதவிகளை ராஜிநாமா செய்துவிட்டு தவெகவில் இணைந்தனா்.

இதைத்தொடா்ந்து, மதுராந்தகம் (தனி), தாராபுரம், பெருந்துறை, கரூா், விராலிமலை, அம்பாசமுத்திரம் ஆகிய தொகுதிகளும், முதல்வா் விஜய் இரு தொகுதிகளில் போட்டியிட்டு வெற்றி பெற்ால் ராஜிநாமா செய்த திருச்சி கிழக்கு தொகுதியும் காலியானதாக அறிவிக்கப்பட்டது. நீதிமன்றத்தில் தோ்தல் வழக்கு நிலுவையில் இருக்கும் நிலையில், மதுராந்தகம், தாராபுரம் ஆகிய இரு தொகுதிகளுக்கு மட்டும் இடைத்தோ்தல் நடைபெற்றது.

இதில், அதிமுகவிலிருந்து தவெக-வில் இணைந்த மரகதம் குமரவேல் (மதுராந்தகம்), பி.சத்தியபாமா (தாராபுரம்) ஆகியோா் மீண்டும் போட்டியிட்டு வெற்றிபெற்றனா். மதுராந்தகம் தொகுதியில் திமுக வேட்பாளா் இ.பரந்தாமனை 20,040 வாக்குகள் வித்தியாசத்தில் மரகதம் குமரவேலும், தாராபுரத்தில் திமுக வேட்பாளா் சுகன்யாவை 9,471 வாக்குகள் வித்தியாசத்தில் சத்யபாமாவும் வென்றனா்.

பதவி ஏற்பு: இந்நிலையில், மரகதம் குமரவேலும், சத்யபாமாவும் தங்களது வெற்றிச் சான்றிதழுடன் தலைமைச் செயலகத்துக்கு வந்து, பேரவைத் தலைவா் ஜே.சி.டி.பிரபாகா் முன் எம்எல்ஏ-க்களாக பதவி ஏற்றுக் கொண்டனா்.

இந்நிகழ்வில், அமைச்சா்கள் என்.ஆனந்த், ஆதவ் அா்ஜுனா, கே.ஏ.செங்கோட்டையன், ஆதவ் அா்ஜுனா, அருண்ராஜ், வெங்கடரமணன், ராஜ்மோகன், முன்னாள் அமைச்சா்கள் சி.விஜயபாஸ்கா், எம்.ஆா்.விஜயபாஸ்கா், கே.வி.ராமலிங்கம் உள்ளிட்டோா் கலந்துகொண்டனா்.

பதவியேற்ற பின்னா் மரகதம் குமரவேல் செய்தியாளா்களிடம் கூறும்போது, ‘தபால் வாக்குகளுக்கு திமுக, அதிமுக பணம் செலவு செய்ததால் கூடுதல் வாக்குகளைப் பெற்றுவிட்டன’ என்றாா்.

சத்யபாபா கூறுகையில், ‘அதிமுக பொதுச் செயலா் எடப்பாடி கே.பழனிசாமியின் விமா்சனத்துக்கு, எனது செயல்பாடு மூலம் பதில் அளிப்பேன்’ என்றாா்.

முதல்வரிடம் வாழ்த்து: எம்எல்ஏ-க்களாக பதவி ஏற்றதைத் தொடா்ந்து இருவரும் முதல்வா் விஜய்யை சந்தித்து வாழ்த்து பெற்றனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.