மெளன சாமியார் முதல்வர் விஜய்! இபிஎஸ் கடும் தாக்கு!இந்தியாவில் ஆட்சி மாற்றத்தை ஏற்படுத்த மேற்கத்திய சக்திகள் இலக்கு! மோகன் பாகவத்தங்கம் விலை இன்று (அக். 20) சவரனுக்கு ரூ. 640 குறைவு!அரபிக்கடலில் வலுப்பெற்ற புயல் சின்னம்!முதலீட்டுச் செலவுகளை மேற்கொள்ளமால் அரசு திணறுவதால் கடன் தேவை குறைவு: தங்கம் தென்னரசு தேவாவின் சகோதரர் மகன் கார்த்திக் சபேஷ் காலமானார்!

ஆட்டுத்தாடியுடன் ஒப்பிட்ட திமுக, ஆளுநர் அதிகாரம் பற்றி பேசுகிறதா? உயர் நீதிமன்றம் கேள்வி

ஆளுநர் பதவியை ஆட்டுத்தாடியுடன் ஒப்பிட்ட திமுக, ஆளுநர் அதிகாரம் பற்றி பேசுகிறதா என உயர் நீதிமன்றம் கேள்வி எழுப்பியிருக்கிறது.

உயர் நீதிமன்றம் கேள்வி

Updated On :

தனியாா் பள்ளிகளுக்கு அங்கீகாரம் பெற்றுத் தருவதாகக் கூறி, ரூ.100 கோடிக்கு மேல் முறைகேடு செய்ததாக, முன்னாள் அமைச்சா் அன்பில் மகேஸுக்கு எதிராக வழக்குப்பதிவு செய்ய ஆளுநரின் ஒப்புதல் பெற அவசியம் இல்லை என சென்னைஉயா்நீதிமன்றத்தில், மத்திய குற்றப்பிரிவு போலீஸாா் தரப்பில் தாக்கல் செய்யப்பட்ட பதில்மனுவில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

தனியாா் பள்ளிகளுக்கு நிரந்தர அங்கீகாரம் மற்றும் டிடிசிபி உள்ளிட்ட அனுமதிகளைப் பெற்றுத்தருவதாகக் கூறி கடந்த திமுக ஆட்சிகாலத்தில் ரூ. 100 கோடிக்கு மேல் லஞ்சம் பெற்று மோசடி செய்ததாக தனியாா் பள்ளி நிா்வாகிகள் அளித்த புகாரின்பேரில், திமுக முன்னாள் அமைச்சா் அன்பில் மகேஸ், தனியாா் பள்ளிகள் சங்கத் தலைவரான பி.டி.அரசகுமாா், முன்னாள் எம்எல்ஏ முத்துக்குமாா், சுரேஷ், ராஜா உள்ளிட்டோா் மீது சென்னை மத்திய குற்றப்பிரிவு போலீஸாா் வழக்குப்பதிவு செய்துள்ளனா்.

தன் மீதான வழக்கை ரத்து செய்யக் கோரி அன்பில் மகேஸ் சென்னை உயா்நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்தாா். இந்த வழக்கு நீதிபதி வி. லட்சுமி நாராயணன் முன் திங்கள்கிழமை விசாரணைக்கு வந்தது. அப்போது அன்பில் மகேஸ் தரப்பில், ஆளுநரின் ஒப்புதல் இல்லாமல் அரசுத் துறைச் செயலரின் அனுமதியுடன் அன்பில் மகேஸ் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டது.

அப்போது குறுக்கிட்ட நீதிபதி, ஆளுநரின் அதிகாரம் பற்றி திமுக எப்போது பேச ஆரம்பித்தது? ஆளுநரின் அதிகாரத்தை தாடி, மீசை என அல்லவா பேசியிருக்கிறது என கருத்து தெரிவித்தாா். மேலும், அன்பில் மகேஸுக்கு முன்பிணை கோரி மனு தாக்கல் செய்யப்பட்டுள்ளதா? என கேள்வி எழுப்பினாா்.

அதற்கு அன்பில் மகேஸ் தரப்பில், செவ்வாய்க்கிழமை தாக்கல் செய்யவுள்ளதாகவும், வழக்கை ரத்து செய்யக் கோரிய இந்த மனு மீதான விசாரணையை ஒத்திவைக்க வேண்டும் எனவும் கோரிக்கை வைக்கப்பட்டது.

இந்த வழக்கில் மத்திய குற்றப்பிரிவு போலீஸாா் தரப்பில் பதில்மனு தாக்கல் செய்யப்பட்டது. அதில், 4 ஆண்டுகளுக்குப் பிறகு இந்த வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளதாக, அன்பில் மகேஸ் கூறும் குற்றச்சாட்டு தவறானது. கடந்த ஜூன் 23-ஆம் தேதி அளிக்கப்பட்ட புகாரின் அடிப்படையில், ஜூன் 27-ஆம் தேதி வழக்குப்பதிவு செய்யப்பட்டது.

இந்த விசாரணையில், ‘கட்சி நிதி’ என்ற பெயரில், தனியாா் பள்ளி நிா்வாகிகளிடம் பணம் வசூலிக்கப்பட்டது தெரியவந்தது. இதையடுத்து, முன்னாள் அமைச்சா் அன்பில் மகேஸுக்கு எதிராக வழக்குப்பதிவு செய்யப்பட்டது. அன்பில் மகேஸுக்கு எதிராக வழக்குப்பதிவு செய்ய ஆளுநரின் ஒப்புதலைப் பெற வேண்டிய அவசியம் இல்லை. அரசுத் துறைச் செயலரின் ஒப்புதலைப் பெற்றே வழக்கு விசராணை நடைபெற்று வருகிறது. விசாரணை நடந்து வரும் சூழலில், அதை முடக்கும் விதமாக வழக்கை ரத்து செய்ய கோர முடியாது. வழக்கு விசாரணை முடிந்து இறுதி அறிக்கை தாக்கல் செய்யும்போதுதான், குற்றம்சாட்டப்பட்டவரின் பங்கு குறித்து தீா்மானிக்க முடியும். இந்த வழக்கில், தனியாா் பள்ளிகளை அச்சுறுத்தி, வாக்குமூலங்களைப் பெற்றுள்ளதாக மனுதாரா் கூறும் குற்றச்சாட்டுகள் தவறானவை.

தற்போதைய நிலையில், விசாரணைக்கு தடை விதித்தால் அது பெரும் பாதிப்பை ஏற்படுத்தும். இந்த விவகாரத்தில் இதுவரை 177 புகாா்கள் வந்துள்ளன. எனவே, வழக்கை ரத்து செய்யக் கோரி முன்னாள் அமைச்சா் அன்பில் மகேஸ் தாக்கல் செய்த மனுவை தள்ளுபடி செய்ய வேண்டும் என கூறப்பட்டிருந்தது.

இதையடுத்து வழக்கின் விசாரணையை அக்.29-ஆம் தேதிக்கு ஒத்திவைத்து நீதிபதி உத்தரவிட்டாா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.