தங்கம் விலை இன்று (அக். 20) சவரனுக்கு ரூ. 640 குறைவு!அரபிக்கடலில் வலுப்பெற்ற புயல் சின்னம்!முதலீட்டுச் செலவுகளை மேற்கொள்ளமால் அரசு திணறுவதால் கடன் தேவை குறைவு: தங்கம் தென்னரசு தேவாவின் சகோதரர் மகன் கார்த்திக் சபேஷ் காலமானார்!

அறிவிக்கப்படாத நெருக்கடிநிலை: மு.க. ஸ்டாலின்

எஸ்ஐஆர்க்கு எதிராக போராடியவர்கள் கைது செய்யப்பட்ட விவகாரத்தில் மு.க. ஸ்டாலின் வெளியிட்டுள்ள எக்ஸ் தளப் பதிவு பற்றி...

M.K. Stalin

முதல்வர் ஸ்டாலின் - கோப்புப் படம்

Updated On :

நாட்டில் அறிவிக்கப்படாத நெருக்கடிநிலை உள்ளதாக திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.

இதுகுறித்து அவர் தனது எக்ஸ் தளத்தில், மக்களின் வாக்குரிமையைப் பாதுகாக்கப் போராடியதற்காக முன்னாள் முதல்வர்களான பனராயி விஜயன், அரவிந்த் கேஜரிவால், மமதா பேனர்ஜி, மாணிக் சர்க்கார், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் தேசிய பொதுச் செயலாளர் எம்.ஏ. பேபி மற்றும் பல்வேறு மாணவர் அமைப்புகளின் தலைவர்களை ஒன்றிய பா.ஜ.க. அரசு தடுப்புக் காவலில் அடைத்துள்ளது. ஆனால், தேசத் துரோகச் செயலுக்காக நீதிமன்ற விசாரணையை எதிர்கொள்ள வேண்டிய தலைமைத் தேர்தல் ஆணையர் ஞானேஷ் குமார், Z+ பாதுகாப்புடன் சுதந்திரமாக உலா வருகிறார்!

இது எவ்வளவு பெரிய வெட்கக்கேடு!

SIR-க்குப் பின்னணியில் உள்ள சதி முழுமையாக அம்பலமாகிவிட்டது. இனியும் அதை மறைக்க முடியாது! தில்லியைப் பூட்டி வைப்பதாலோ, இணையச் சேவையைத் துண்டிப்பதாலோ, அரசியல் தலைவர்களைத் தடுப்புக் காவலில் வைப்பதாலோ இந்திய இளைஞர்களின் எழுச்சியை அடக்க முடியாது. ஒட்டுமொத்த நாட்டையும் எத்தனை நாள்களுக்குத்தான் ஒன்றிய அரசால் முடக்கி வைத்திருக்க முடியும்?

இதற்கிடையில், தமிழ்நாட்டில் உள்ள மூடர்கூடத் த.வெ.க. அரசு, தனது தில்லி எஜமானர்களைத் திருப்திப்படுத்தத் துடிக்கிறது. அதற்காக, #SIR-க்கு எதிராகவும் ஞானேஷ் குமார் பதவி விலகக் கோரியும் போராடும் செயற்பாட்டாளர்களைத் தடுப்புக் காவலில் வைத்துள்ளது.

தடுப்புக் காவலில் வைக்கப்பட்டுள்ள அனைவரும் உடனடியாக விடுவிக்கப்பட வேண்டும். ஞானேஷ் குமார் பதவிநீக்கம் செய்யப்பட வேண்டும். SIR நிறுத்தப்பட வேண்டும். இந்திய மக்களுக்குத் துரோகம் இழைத்த அனைவரும் உரிய விசாரணையை எதிர்கொள்ள வேண்டும்! என்று தெரிவித்துள்ளார்.

Summary

There is an undeclared emergency in the country, stated DMK President M.K. Stalin.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.