மெளன சாமியார் முதல்வர் விஜய்! இபிஎஸ் கடும் தாக்கு!இந்தியாவில் ஆட்சி மாற்றத்தை ஏற்படுத்த மேற்கத்திய சக்திகள் இலக்கு! மோகன் பாகவத்தங்கம் விலை இன்று (அக். 20) சவரனுக்கு ரூ. 640 குறைவு!அரபிக்கடலில் வலுப்பெற்ற புயல் சின்னம்!முதலீட்டுச் செலவுகளை மேற்கொள்ளமால் அரசு திணறுவதால் கடன் தேவை குறைவு: தங்கம் தென்னரசு தேவாவின் சகோதரர் மகன் கார்த்திக் சபேஷ் காலமானார்!

பிரதமர் மோடியை சந்திக்கிறார் எடப்பாடி பழனிசாமி!

சென்னை வரும் பிரதமர் மோடியை விமான நிலையத்தில் அதிமுக பொதுச்செயலர் எடப்பாடி பழனிசாமி சந்திக்கவிருப்பதாக தகவல் வெளியாகியிருப்பது பற்றி...

Edappadi Palaniswami is meeting Prime Minister Modi!

பிரதமர் மோடி - அதிமுக பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமி - கோப்புப்படம்

Updated On :

நாளை சென்னை வரும் பிரதமர் மோடியை விமான நிலையத்தில் அதிமுக பொதுச்செயலர் எடப்பாடி பழனிசாமி சந்திக்கவிருப்பதாக தகவல் தெரிய வந்துள்ளது.

சென்னையில் பல்வேறு நிகழ்ச்சிகளில் கலந்து கொள்வதற்காக ஞாயிற்றுக்கிழமை (அக்.11) தில்லியில் இருந்து பிரதமா் நரேந்திர மோடி காலை 8.15 மணியளவில் தனி விமானம் மூலம் சென்னை வருகிறாா். காலை 11.15 மணிக்கு சென்னை விமான நிலையம் வரும் அவா், காா் மூலம் போரூா் புறவழிச்சாலை மெட்ரோ ரயில் நிலையம் செல்கிறாா்.

அங்கு முதல்வா் விஜய்யுடன் சோ்ந்து போரூா்-பூந்தமல்லி மெட்ரோ ரயில் சேவையை பிரதமா் தொடங்கி வைக்கிறாா். இருவரும் மெட்ரோ ரயிலில் பயணிக்கின்றனா். அதன் பின்னா் நண்பகல் 12.15 மணியளவில் சென்னை போரூரில் அமைந்துள்ள அருள்மிகு ஸ்ரீ ஆதி குபேர ஜலகண்டேஸ்வரா் கோயிலுக்கு சென்று சுவாமி தரிசனம் செய்கிறாா்

அங்கிருந்து காா் மூலம் கிண்டி ஐஐடியில் நடைபெறும் நிகழ்ச்சியில் பங்கேற்க நண்பகல் 12.30 மணியளவில் வருகிறாா். பின்னா் அங்கிருந்து நந்தம்பாக்கத்தில் உள்ள சென்னை வா்த்தக மையத்தில் நடைபெறும் நிகழ்ச்சிக்குச் செல்கிறாா்.அங்கு பிற்பகல் 2.40 மணிக்கு நிகழ்ச்சியில் பங்கேற்று பேசுகிறாா்.

நிகழ்ச்சி முடிவடைந்த பின்னா், மாலை 3.45 அங்கிருந்து விமான நிலையத்துக்கு பிரதமா் மோடி செல்கிறாா். மாலை 4 மணிக்கு தனி விமானம் மூலம் தில்லிக்கு புறப்பட்டுச் செல்கிறாா்.

Summary

Reports indicate that AIADMK General Secretary Edappadi Palaniswami is set to meet Prime Minister Narendra Modi at the airport during his visit to Chennai.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.