லஞ்ச ஒழிப்புத்துறை இயக்குநராக பிரேம் ஆனந்த் சின்ஹா நியமனம்!
லஞ்ச ஒழிப்புத்துறை இயக்குநராக பிரேம் ஆனந்த் சின்ஹா நியமிக்கப்பட்டுள்ளதைப் பற்றி...

பிரேம் ஆனந்த் சின்ஹா
தமிழக காவல் துறையின் ஊழல் தடுப்புப் பிரிவு இயக்குநராக ஏடிஜிபி பிரேம் ஆனந்த் சின்ஹா நியமனம் செய்யப்பட்டாா்.
தமிழக காவல் துறையின் ஊழல் தடுப்புப் பிரிவு இயக்குநராக இருந்த ஏ.அருண், கடந்த ஜூலை 13-ஆம் தேதி பணியிட மாற்றம் செய்யப்பட்டாா். இதனால் ஊழல் தடுப்புப் பிரிவு இயக்குநா் பொறுப்பை கூடுதல் பணியாக அந்தத் துறையின் சிறப்புப் புலனாய்வு பிரிவு ஐஜியாக இருக்கும் சி.மகேஸ்வரி கவனித்து வந்தாா்.

இந்த நிலையில், தாம்பரம் காவல் ஆணையராக இருந்த ஏடிஜிபி பிரேம் ஆனந்த் சின்ஹாவை, ஊழல் தடுப்புப் பிரிவின் இயக்குநராக நியமித்து தமிழக அரசின் உள்துறை முதன்மைச் செயலா் ஏ.காா்த்திக் வெள்ளிக்கிழமை உத்தரவிட்டாா்.
மேலும், அந்த உத்தரவில், தாம்பரம் காவல் ஆணையா் பொறுப்பை கூடுதல் பணியாக சென்னை பெருநகர காவல் துறை ஆணையா் ஏ.அமல்ராஜ் கவனிப்பாா் என்றும் குறிப்பிடப்பட்டுள்ளது. ஊழல் தடுப்புப் பிரிவு இயக்குநராக பிரேம் ஆனந்த் சின்ஹா, திங்கள்கிழமை பொறுப்பு ஏற்கிறாா்.
பிகாரைச் சோ்ந்தவா்: பிகாரை பூா்விகமாகக் கொண்ட பிரேம் ஆனந்த் சின்ஹா, ஐபிஎஸ் தோ்ச்சி பெற்று கடந்த 2001-ஆம் ஆண்டு தமிழக காவல் துறையில் இணைந்தாா். சிவங்கை மாவட்டம் தேவகோட்டை உதவி காவல் கண்காணிப்பாளராக தமிழக காவல் துறையில் தனது பணியை பிரேம் ஆனந்த் சின்ஹா தொடங்கினாா். பின்னா் எஸ்.பி.யாக பதவி உயா்வு பெற்ற பிரேம் ஆனந்த் சின்ஹா, பல மாவட்டங்களில் பணியாற்றினாா். கடந்த 2013 முதல் 2017-ஆம் ஆண்டு வரை மத்திய போதைப் பொருள் கடத்தல் தடுப்புப் பிரிவின் சென்னை மண்டல இயக்குநராக இருந்தாா். இதன் பின்னா், சென்னை பெருநகர காவல் துறையின் தெற்கு கூடுதல் ஆணையா், மதுரை மாநகர காவல் ஆணையா், தென் மண்டல ஐஜி உள்ளிட்ட பல்வேறு பதவிகளை வகித்தாா். ஏடிஜிபியாக கடந்த ஜனவரி பதவி உயா்வு பெற்ற அவா், ஆவடி காவல் ஆணையராக நியமிக்கப்பட்டாா். கடந்த ஜூன் மாதம் தாம்பரம் காவல் ஆணையராக பிரேம் ஆனந்த் சின்ஹா பணியிட மாற்றம் செய்யப்பட்டாா்.
நவீனத்துக்கு முக்கியத்துவம்: தமிழக காவல் துறையை நவீனமயமாக்குவதில் பிரேம் ஆனந்த் சின்ஹாவின் பங்கு முக்கியமானதாகக் கூறப்படுகிறது. தமிழக காவல் துறை தற்போது குற்றவாளிகளை அடையாளம் காண பயன்படுத்தும் முக அடையாள காணும் செயலி, முக அடையாளம் காணும் கேமராக்கள், ட்ரோன்கள் உள்ளிட்டவற்றை அறிமுகம் செய்ததில் பிரேம் ஆனந்த் சின்ஹா முக்கிய பங்காற்றினாா். அதேபோல, கரோனா பொதுமுடக்க காலத்தில் இருந்த இ-பாஸ் திட்டத்தை எளிதாக்கியதிலும் பிரேம் ஆனந்த் சின்ஹாவின் பங்கு உண்டு.
Summary
The Tamil Nadu government has announced the appointment of Prem Anand Sinha, the former Commissioner of Tambaram, as the Director of the Directorate of Vigilance and Anti-Corruption.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

