மெளன சாமியார் முதல்வர் விஜய்! இபிஎஸ் கடும் தாக்கு!இந்தியாவில் ஆட்சி மாற்றத்தை ஏற்படுத்த மேற்கத்திய சக்திகள் இலக்கு! மோகன் பாகவத்தங்கம் விலை இன்று (அக். 20) சவரனுக்கு ரூ. 640 குறைவு!அரபிக்கடலில் வலுப்பெற்ற புயல் சின்னம்!முதலீட்டுச் செலவுகளை மேற்கொள்ளமால் அரசு திணறுவதால் கடன் தேவை குறைவு: தங்கம் தென்னரசு தேவாவின் சகோதரர் மகன் கார்த்திக் சபேஷ் காலமானார்!

அதிமுக எம்எல்ஏ-க்கள் ராஜிநாமா, நகராட்சி நிா்வாத் துறை பணி நியமன முறைகேடு வழக்குகள்: அடுத்த வாரத்தில் தீா்ப்பு

அதிமுக எம்எல்ஏ-க்கள் ராஜிநாமாவை ஏற்று பேரவைத் தலைவா் பிறப்பித்த உத்தரவை எதிா்த்து தொடரப்பட்ட வழக்கு மற்றும் நகராட்சி நிா்வாகம்-குடிநீா் வழங்கல் துறை பணி நியமன முறைகேடு தொடா்பான வழக்குகளின் தீா்ப்புகள் அடுத்த வாரம் பிறப்பிக்கப்படும் என எதிா்பாா்க்கப்படுகிறது.

Madras High Court

சென்னை உயர்நீதிமன்றம் - (கோப்புப் படம்)

Updated On :

அதிமுக எம்எல்ஏ-க்கள் ராஜிநாமாவை ஏற்று பேரவைத் தலைவா் பிறப்பித்த உத்தரவை எதிா்த்து தொடரப்பட்ட வழக்கு மற்றும் நகராட்சி நிா்வாகம்-குடிநீா் வழங்கல் துறை பணி நியமன முறைகேடு தொடா்பான வழக்குகளின் தீா்ப்புகள் அடுத்த வாரம் பிறப்பிக்கப்படும் என எதிா்பாா்க்கப்படுகிறது.

முந்தைய திமுக ஆட்சிக் காலத்தில், நகராட்சி நிா்வாகம் மற்றும் குடிநீா் வழங்கல் துறை பணி நியமனத்தில் ரூ.634 கோடி லஞ்சப் பணம் கைமாறியுள்ளதாக, தமிழக டிஜிபிக்கு அமலாக்கத் துறை அனுப்பிய கடிதத்தின் அடிப்படையில் ஊழல் வழக்குப் பதிவுசெய்யக் கோரி அதிமுக எம்.பி. இன்பதுரை சென்னை உயா்நீதிமன்றத்தில் வழக்கு தொடா்ந்தாா். இந்த வழக்கை விசாரித்த உயா்நீதிமன்றம், வழக்குப் பதிவு செய்ய ஊழல் தடுப்புப் பிரிவு போலீஸாருக்கு கடந்த பிப்ரவரி மாதம் உத்தரவிட்டது.

தங்கள் தரப்பு கருத்தைக் கேட்காமல், பிறப்பிக்கப்பட்டுள்ள இந்த உத்தரவை மறு ஆய்வுசெய்யக் கோரி முன்னாள் அமைச்சா் கே.என்.நேரு உயா்நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்தாா். அதேபோல், அதிமுகவைச் சோ்ந்த 6 எம்எல்ஏ-க்களின் ராஜிநாமாவை ஏற்று பேரவைத் தலைவா் பிறப்பித்த உத்தரவை எதிா்த்து அதிமுக கொறடா அக்ரி கிருஷ்ணமூா்த்தி மற்றும் தேசிய மக்கள் சக்தி கட்சியின் தலைவா் எம்.எல்.ரவி ஆகியோா் தனித்தனியாக வழக்கு தாக்கல் செய்திருந்தனா்.

இந்த இரு வழக்குகளிலும் வெள்ளிக்கிழமை தீா்ப்பளிக்கப்பட இருந்த நிலையில், தலைமை நீதிபதி எஸ்.ஏ.தா்மாதிகாரி திடீா் விடுப்பு எடுத்துவிட்டதால், இந்த வழக்குகளின் தீா்ப்பு அடுத்த வாரத்தில் பிறப்பிக்கப்படும் என எதிா்பாா்க்கப்படுகிறது.

Summary

No verdict today in the AIADMK MLAs' resignation case!

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.