இந்தியாவில் ஆட்சி மாற்றத்தை ஏற்படுத்த மேற்கத்திய சக்திகள் இலக்கு! மோகன் பாகவத்தங்கம் விலை இன்று (அக். 20) சவரனுக்கு ரூ. 640 குறைவு!அரபிக்கடலில் வலுப்பெற்ற புயல் சின்னம்!முதலீட்டுச் செலவுகளை மேற்கொள்ளமால் அரசு திணறுவதால் கடன் தேவை குறைவு: தங்கம் தென்னரசு தேவாவின் சகோதரர் மகன் கார்த்திக் சபேஷ் காலமானார்!

சத்யபாமாவை உருவ கேலி செய்து பேசிய விவகாரம்: திருச்சியில் மு.க.ஸ்டாலின் மீது தவெக மகளிர் அணி புகார்

தவெக வேட்பாளர் சத்யபாமாவை உருவ கேலி செய்து பேசிய, முன்னாள் முதல்வரும் திமுக தலைவருமான மு.க. ஸ்டாலின் மீது அளிக்கப்பட்டுள்ள புகார் குறித்து...

DMK Chief M.K. Stalin body-shamed TVK candidate Sathyabhama

தவெக வேட்பாளர் சத்யபாமாவை உருவ கேலி செய்த மு.க. ஸ்டாலின்

Updated On :

தாதாரபுரம் தொகுதி இடைத்தேர்தல் பிரசாரத்தில் தவெக வேட்பாளர் சத்யபாமாவை, முன்னாள் முதல்வரும் திமுக தலைவருமான மு.க. ஸ்டாலின் உருவ கேலி செய்து பேசியது சர்ச்சையை ஏற்படுத்திய நிலையில், அவருக்கு எதிராக தவெக மகளிர் அணியினர் திருச்சியில் ஐந்து காவல் நிலையங்களில் புகார் அளித்துள்ளதாகக் காவல்துறை தெரிவித்துள்ளது.

திருச்சி காவல்துறையின் தகவலின்படி, ஸ்ரீரங்கம், தில்லை நகர் மற்றும் அரசு மருத்துவமனை காவல் நிலையங்கள் உள்ளிட்ட இடங்களில் இந்தப் புகார்கள் அளிக்கப்பட்டுள்ளன.

தாராபுரம் இடைத்தேர்தல் பிரசாரத்தின் போது, ​​தவெக வேட்பாளர் பி. சத்தியபாமா குறித்து ஸ்டாலின் இழிவான மற்றும் அவமதிக்கும் வகையிலான கருத்துகளைத் தெரிவித்ததாகப் புகார்களில் குற்றம் சாட்டப்பட்டுள்ளது.

இந்தப் புகார்களின் அடிப்படையில், சம்பந்தப்பட்ட காவல் நிலையங்களில் சமூக சேவைப் பதிவேடு (சிஎஸ்ஆர்) ரசீதுகள் வழங்கப்பட்டுள்ளதாகக் காவல்துறை தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

தாராபுரத்தில் திமுக வேட்பாளர் சுகன்யாவை ஆதரித்து பிரசாரத்தில் மு.க. ஸ்டாலின் பேசுகையில், தவெக வேட்பாளர் சத்யபாமாவை பெட்டி பாமா, பல்டி பாமா எனக் கடுமையாக விமர்சித்தார்.

அதுமட்டுமின்றி, அந்த உருவத்தை வைத்துக்கொண்டு அவரால் எப்படி பல்டி அடிக்க முடிந்தது என உருவ கேலி செய்தார் மு.க. ஸ்டாலின்.

மு.க. ஸ்டாலினின் பேச்சுக்குக் கண்டனம் தெரிவித்து, தேர்தல் ஆணையம், டிஜிபி, சென்னை காவல் ஆணையர், தேர்தல் நடத்தும் அலுவலர் ஆகியோரிடம் தவெக வழக்குரைஞர் அணி புகார் மனு அளித்துள்ளனர். மேலும், பெண் வேட்பாளரை உருவ கேலி செய்து இழிவுப்படுத்திய மு.க. ஸ்டாலின் மீது நடவடிக்கை எடுக்கப்பட வேண்டும் எனவும் வலியுறுத்தினர்.

சத்தியபாமா குறித்து திமுக தலைவர் மு.க. ஸ்டாலின் தெரிவித்ததாகக் கூறப்படும் விமரிசனங்களுக்கு தவெக தலைவர் விஜய், அவர் மீது கடுமையான விமர்சனங்களை தெரிவித்திருந்தார்.

தமிழ்நாட்டில், செங்கல்பட்டு மாவட்டத்தில் உள்ள மதுராந்தகம் (தனி) தொகுதி மற்றும் திருப்பூர் மாவட்டத்தில் உள்ள தாராபுரம் (தனி) தொகுதி ஆகியவற்றில் இடைத்தேர்தல்கள் புதன்கிழமை நடந்து முடிந்தன.

தாராபுரத்தில் திமுக வேட்பாளர் சுகன்யா, அதிமுக வேட்பாளர் பானுமதி, இந்திய கம்யூனிஸ்ட் கட்சி வேட்பாளர் லட்சுமணன் மற்றும் நாம் தமிழர் கட்சியின் வேட்பாளர் கார்த்திகா ஆகியோரை எதிர்த்து தவெக வேட்பாளர் பி. சத்தியபாமா போட்டியிடுகிறார்.

TVK Women's Wing has lodged complaints against former Tamil Nadu Chief Minister and DMK President M.K. Stalin at five police stations in Tiruchirappalli city

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.