வாக்காளர் பட்டியலில் பெயர் சேர்ப்பு: அக்.1-இல் 18 வயது நிறைவடைந்தோருக்கு வாய்ப்பு
தமிழ்நாட்டில் இளம், முதல்முறை வாக்காளர்கள் பெயர் சேர்க்க சிறப்பு முகாம்கள் நடைபெறுவது குறித்து...

வாக்காளர் பட்டியலில் பெயர் சேர்க்க அக். 10-ல் முகாம் - X | Chief Electoral Officer Tamil Nadu
நமது சிறப்பு நிருபர்
புதிதாக வாக்காளர் பட்டியலில் பெயர் சேர்க்க விரும்புவோருக்கு இந்திய தேர்தல் ஆணையம் வாய்ப்பளித்துள்ளது. இதன்படி தகுதியுள்ள இளம் வாக்காளர்கள் இந்த வாய்ப்பைப் பயன்படுத்தி தங்களது பெயரை வாக்காளர் பட்டியலில் இணைத்துக்கொள்ளலாம்.
இது தொடர்பாக தலைமை தேர்தல் ஆணைய இணையதளத்தில் இடம்பெற்றுள்ள தகவல்களின்படி, 01.10.2026 அன்று அல்லது அதற்கு முன்னர் 18 வயது பூர்த்தியடைந்த அனைவரும் விண்ணப்பிக்கலாம்.
வாக்காளர் பட்டியலில் பெயர் சேர்க்க படிவம்-6 மற்றும் அதனுடன் கூடிய உறுதிமொழிப் படிவத்தைப் பூர்த்தி செய்து வழங்க வேண்டும்.
தகுதியானவர்கள் இணையவழியிலோ அல்லது வாக்காளர் மையங்கள் வழியாக நேரிலும் விண்ணப்பிக்கலாம். பூர்த்தி செய்யப்படாத வெற்றுப் படிவங்கள் வாக்குச்சாவடி நிலை அலுவலர்களிடம் (பிஎல்ஓ) கிடைக்கும்.
தமிழகத்தில் அக். 10-இல் சிறப்பு முகாம்: 18 வயது நிரம்பிய முதல்முறை வாக்காளர்கள் தங்கள் பெயரை வாக்காளர் பட்டியில் சேர்க்க வரும் அக். 10-ஆம் தேதி மாவட்டந்தோறும் சிறப்பு முகாம்கள் நடத்தப்படும் என்று தமிழக தலைமைத் தேர்தல் அதிகாரி அர்ச்சனா பட்நாயக் அறிவித்துள்ளார்.
இந்த முகாம்களில் வாக்காளர் பட்டியலில் பெயர்கள் விடுபட்டவர்களும் தங்கள் பெயர்களைச் சேர்த்துக் கொள்ளலாம் என்றும் அதிகாரிகள் தெரிவித்தனர்.
இது தொடர்பாக தமிழக தலைமைத் தேர்தல் அதிகாரி அர்ச்சனா பட்நாயக் புதன்கிழமை வெளியிட்ட அறிவிப்பு:
கல்லூரிகளில் செயல்படும் தேர்தல் கல்வியறிவுக் குழுக்களின் சேவைகள் மூலம் அக்டோபர் 7, 8, 9 ஆகிய தேதிகளில் முதல்முறை வாக்காளர்களாக தகுதிப் பெற்றவர்களை வாக்காளர் பட்டியலில் சேர்க்கப்படுகிறார்கள்.
மேலும், இளம் மற்றும் முதல்தலைமுறை வாக்காளர்களாகத் தகுதிப் பெற்றவர்களை வாக்காளர் பட்டியலில் சேர்க்க மாவட்டங்களில் வரும் அக். 10-ஆம் தேதி சிறப்பு முகாம்கள் நடத்தப்படும். இதற்காக நகர்ப்புறம் மற்றும் பெருநகரங்களில் சிறப்பு கவனம் செலுத்தப்படும் என்று அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
Summary
Special drive on Oct. 10 to include names in the voters' list
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.


