இந்தியாவில் ஆட்சி மாற்றத்தை ஏற்படுத்த மேற்கத்திய சக்திகள் இலக்கு! மோகன் பாகவத்தங்கம் விலை இன்று (அக். 20) சவரனுக்கு ரூ. 640 குறைவு!அரபிக்கடலில் வலுப்பெற்ற புயல் சின்னம்!முதலீட்டுச் செலவுகளை மேற்கொள்ளமால் அரசு திணறுவதால் கடன் தேவை குறைவு: தங்கம் தென்னரசு தேவாவின் சகோதரர் மகன் கார்த்திக் சபேஷ் காலமானார்!

டிஎன்பிஎஸ்சி குரூப் 4 தேர்வுக்கான அறிவிப்பு வெளியானது! விண்ணப்பிக்கத் தயாரா?

டிஎன்பிஎஸ்சி குரூப் 4 தேர்வுக்கான அறிவிப்பு வெளியானது குறித்து...

கோப்புப் படம்

Updated On :

தமிழகத்தில் லட்சக்கணக்கானோர் எதிர்பார்த்து காத்திருந்த குரூப் 4 தேர்வுக்கான அறிவிப்பை டிஎன்பிஎஸ்சி வெளியிட்டுள்ளது. இத்தேர்வு மூலமாக கிராம நிர்வாக அலுவலர், இளநிலை உதவியாளர், தட்டச்சர் உள்ளிட்ட 46 பதவிகளில் 6,574 காலிப் பணியிடங்கள் நிரப்பப்படவுள்ளன.

தமிழக அரசின் பல்வேறு துறைகள் மற்றும் அரசு பொதுத் துறை நிறுவனங்களின் பணியாளர்கள் டிஎன்பிஎஸ்சி வாயிலாக தேர்வு செய்யப்பட்டு பணியமர்த்தப்படுகின்றனர். 2026-ஆம் ஆண்டுக்கான டிஎன்பிஎஸ்சி ஆண்டு அட்டவணையில் இடம்பெற்றுள்ள 6 தேர்வுகளில் 5 தேர்வுகளுக்கான அறிவிப்புகள் வெளியிடப்பட்டு அவற்றில் மூன்று தேர்வுகள் நடத்தி முடிக்கப்பட்டுள்ளன. இரு தேர்வுகள் விரைவில் நடத்தப்படவுள்ளன. கடைசியாக இடம்பெற்றுள்ள குரூப்-4 தேர்வுக்கான அறிவிப்பு அக்.6-ஆம் தேதி வெளியிடப்படும் என அட்டவணையில் குறிப்பிடப்பட்டிருந்தது. அதன்படி ஒருங்கிணைந்த குரூப் 4 தேர்வுக்கான அறிவிப்பை டிஎன்பிஎஸ்சி செயலர் பானோத் ம்ருகேந்தர் லால் செவ்வாய்க்கிழமை இரவு வெளியிட்டார்.

நவ.5 வரை விண்ணப்பிக்கலாம்: அதன்படி இத்தேர்வுக்கு செவ்வாய்க்கிழமை (அக். 6) முதல் நவ. 5-ஆம் தேதி வரை இணையவழியில் (www.tnpsc.gov.in) விண்ணப்பிக்கலாம். விண்ணப்பங்களில் திருத்தம் மேற்கொள்ள நவ.9 முதல் நவ.11 வரையிலான நாள்களில் வாய்ப்பு வழங்கப்படும். இதையடுத்து, எழுத்துத் தேர்வு அடுத்த ஆண்டு ஜன.10-ஆம் தேதி காலை 9.30 மணி முதல் நண்பகல் 12.30 மணி வரை நடைபெறும். கூடுதல் விவரங்கள் மேற்கண்ட இணையதள முகவரியில் வெளியிடப்பட்டுள்ளது. இந்த குரூப் 4 தேர்வு மூலமாக இளநிலை உதவியாளர், தட்டச்சர், சுருக்கெழுத்து தட்டச்சர், கிராம நிர்வாக அலுவலர், வருவாய் உதவியாளர், பில் கலெக்டர், வனக் காவலர் உள்ளிட்ட 46 பதவிகளில் 6,574 காலிப் பணியிடங்கள் நிரப்பப்படவுள்ளன. தேர்வுக் கட்டணத்தை யுபிஐ பரிவர்த்தனை மூலமாகவும் செலுத்தலாம் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

குரூப்- 4 தேர்வைப் பொருத்தவரை பெரும்பாலான பதவிகளுக்கு அடிப்படை கல்வித் தகுதி பத்தாம் வகுப்பு தேர்ச்சியாகும். ஒரு சில பதவிகளுக்கு மட்டுமே பட்டப் படிப்பு கல்வித் தகுதியாக நிர்ணயிக்கப்பட்டுள்ளது. தட்டச்சர், சுருக்கெழுத்து தட்டச்சர் பதவிகளுக்கு அடிப்படை கல்வித் தகுதியுடன் கூடுதலாக தொழில்நுட்பத் தேர்விலும் தேர்ச்சி பெற்றிருக்க வேண்டியது அவசியம்.

கடந்த ஆண்டு 13.89 லட்சம் பேர்: குரூப் 4 தேர்வுக்கான அடிப்படைக் கல்வித் தகுதி பத்தாம் வகுப்பு என்ற போதிலும் முதுநிலைப் பட்டதாரிகளும், பட்டதாரிகளும் அதிக எண்ணிக்கையில் விண்ணப்பிக்கின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது. கடந்த 2022-ஆம் ஆண்டு குரூப் 4 தேர்வுக்கு 7,500-க்கும் மேற்பட்ட காலிப் பணியிடங்களுக்கு 22 லட்சத்து 3 ஆயிரம் பேரும், 2024-ஆம் ஆண்டு 6,244 பணியிடங்களுக்கு 20 லட்சத்து 37 ஆயிரத்து 94 பேரும், கடந்த ஆண்டு 13 லட்சத்து 89 ஆயிரம் பேரும் போட்டியிட்டனர். கடந்த 2025-ஆம் ஆண்டு விண்ணப்பித்தவர்களில் 11.36 லட்சம் பேர் மட்டுமே தேர்வெழுதினர். இந்த ஆண்டு குரூப் 4 தேர்வுக்கு சுமார் 15 லட்சம் பேர் விண்ணப்பிக்கலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.

Summary

The notification for the TNPSC Group 4 exam was released on Tuesday (Oct. 6).

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.