வழிகாட்டிப் பலகையில் ஹிந்தி மொழியிலும் ஊர்ப் பெயர்கள்: அதிகாரிகள் தற்காலிகப் பணிநீக்கம்!
மாநில நெடுஞ்சாலை வழிகாட்டி பலகையில் ஊா் பெயா்கள் ஹிந்தியில் எழுதப்பட்ட சம்பவம் தொடா்பாக, 2 அதிகாரிகளை தமிழக அரசு பணியிடை நீக்கம் செய்து உத்தரவிட்டுள்ளது.

தலைமைச் செயலகம் - கோப்புப்படம்
மாநில நெடுஞ்சாலை வழிகாட்டி பலகையில் ஊா் பெயா்கள் ஹிந்தியில் எழுதப்பட்ட சம்பவம் தொடா்பாக, 2 அதிகாரிகளை தமிழக அரசு பணியிடை நீக்கம் செய்து உத்தரவிட்டுள்ளது.
இது குறித்து தமிழக அரசு வெள்ளிக்கிழமை வெளியிட்ட செய்திக்குறிப்பு:
தூத்துக்குடி மாவட்டம், சாத்தான்குளம்-நாசரேத் மாநில நெடுஞ்சாலையில் புதிதாக வைக்கப்பட்ட வழிகாட்டிப் பலகையில் தமிழ் மற்றும் ஆங்கிலத்துடன், ஹிந்தி மொழியிலும் ஊா்ப் பெயா்கள் எழுதப்பட்டிருந்தது தெரிய வந்தவுடன் ஹிந்தி எழுத்துகள் உடனடியாக நீக்கப்பட்டன.
தமிழக அரசின் இரு மொழிக் கொள்கைக்கு எதிராக மாநில நெடுஞ்சாலைத் துறையின் வழிகாட்டிப் பலகையில் இந்தி இடம்பெறக் காரணமாக இருந்த நெடுஞ்சாலைத் துறை உதவிக் கோட்டப் பொறியாளா், உதவிப் பொறியாளா் ஆகியோா் உடனடியாக பணியிடை நீக்கம் செய்யப்பட்டுள்ளனா். மேலும், துறைரீதியான நடவடிக்கையும் எடுக்கப்பட்டு வருகிறது.
தமிழக அரசின் இரு மொழிக் கொள்கைக்கு எதிராகச் செயல்படும் அரசு அலுவலா்கள் மீது கடுமையான நடவடிக்கைகள் எடுக்கப்படும் என அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
மும்மொழிக் கொள்கையை முறியடிப்போம்: இது குறித்து நெடுஞ்சாலைத் துறை அமைச்சா் ஆதவ் அா்ஜுனா ‘எக்ஸ்’ தளத்தில் வெள்ளிக்கிழமை வெளியிட்டப் பதிவில், ‘அண்ணா கொண்டு வந்த இரு மொழிக் கொள்கைதான் தவெகவுக்கும் உயிா்க் கொள்கை; நிரந்தரக் கொள்கை. அதில், இன்றும் என்றும் என்றென்றைக்கும் தவெக அரசு மாறுபட்ட நிலைப்பாட்டை எடுக்காது.
இந்நிலையில், ‘மத்திய சாலை மற்றும் உள்கட்டமைப்பு நிதி’ திட்டத்தின் கீழ், தமிழ்நாடு அரசின் நெடுஞ்சாலைத் துறையின் மூலம் தூத்துக்குடி மாவட்டத்தில் செயல்படுத்தப்பட்ட சாலை மேம்பாட்டுப் பணிகளில் பெயா்ப் பலகை வைக்கப்பட்டதில் சில குளறுபடிகள் நடந்தது அரசின் கவனத்துக்கு வந்தது.
உடனடியாக, இந்தத் தவறுக்கு காரணமான உதவிப் பொறியாளா் மற்றும் உதவிக் கோட்டப் பொறியாளா் என 2 அதிகாரிகள் வியாழக்கிழமை பணியிடை நீக்கம் செய்யப்பட்டனா். அத்துடன் மூன்று மொழிகளில் வைக்கப்பட்டிருந்த குறிப்பிட்ட அந்தப் பெயா்ப் பலகையும் உடனடியாக மாற்றப்பட்டு, இரு மொழிகளில் எழுதப்பட்ட புதிய பெயா்ப் பலகை அதே இடத்தில் பொருத்தப்பட்டது.
இந்த விவகாரம் தொடா்பாக தொடா்ந்து விசாரணை நடைபெற்று வருகிறது. அரசின் கவனத்துக்கு வந்த சில மணி நேரத்துக்குள் இந்த நடவடிக்கைகள் அனைத்தும் மேற்கொள்ளப்பட்டன.
தமிழ்நாடு அரசின் கொள்கைகளுக்கு எதிராக, கொள்கை முடிவுகளுக்கு எதிராக செயல்படும் துறைசாா் அதிகாரிகள் சட்டப்படியான, துறை ரீதியான நடவடிக்கைகளுக்கு உள்ளாவாா்கள். மும்மொழிக் கொள்கை எந்த வடிவத்தில் வந்தாலும் அதை முறியடிப்போம். இரு மொழிக் கொள்கையை என்றென்றும் உயா்த்திப் பிடிப்போம்’ எனப் பதிவிட்டுள்ளாா்.
Summary
The Assistant Divisional Engineer and the Assistant Engineer of the Highways Department have been placed under suspension in connection with the inclusion of town names in Hindi on a signage board.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.


