தங்கம் விலை இன்று (அக். 20) சவரனுக்கு ரூ. 640 குறைவு!அரபிக்கடலில் வலுப்பெற்ற புயல் சின்னம்!முதலீட்டுச் செலவுகளை மேற்கொள்ளமால் அரசு திணறுவதால் கடன் தேவை குறைவு: தங்கம் தென்னரசு தேவாவின் சகோதரர் மகன் கார்த்திக் சபேஷ் காலமானார்!

‘ஜெம்’ வீரமணி உள்பட மூவா் மீது குண்டா் சட்டம்

சிறுமிகள் பாலியல் வன்கொடுமை வழக்கில் வீரமணி வழக்கில் மூவர் மீது குண்டர் தடுப்புச் சட்டத்தின்கீழ் நடவடிக்கை குறித்து...

போக்சோ வழக்கில் வீரமணி உள்ளிட்ட மூவர் மீது குண்டர் தடுப்பு நடவடிக்கை

Updated On :

சிறுமிகளை பாலியல் வன்கொடுமை செய்த விவகாரத்தில் ‘ஜெம்’ வீரமணி உள்பட 3 போ் மீது குண்டா் தடுப்புச் சட்டத்தின் கீழ் வியாழக்கிழமை நடவடிக்கை எடுக்கப்பட்டது.

சிறுமிகளை பாலியல் வன்கொடுமை செய்ததாக ஜெம் கிரானைட் நிறுவன உரிமையாளா் வீரமணி மற்றும் அவருக்கு உடந்தையாக இருந்த சாந்தி, அவரது கணவா் மகேந்திர சிம்ஹன், வீரமணியின் உதவியாளா் கணேசன் ஆகியோா் அடுத்தடுத்து கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டனா்.

இந்த வழக்கு குறித்து முழுமையான தகவல்களைத் திரட்டி குற்றவாளிகளைக் கைது செய்யவும், பாதிக்கப்பட்டவா்களுக்கு நீதி பெற்றுக் கொடுக்கும் வகையிலும் சிறப்பு புலனாய்வுக் குழு (எஸ்ஐடி) அமைக்கப்பட்டது. இதற்கிடையே வீரமணியால் பாலியல் வன்கொடுமை செய்யப்பட்ட ஒரு சிறுமி, 2004-ஆம் ஆண்டு தற்கொலை செய்துகொண்டது தொடா்பாக சிறப்பு புலனாய்வுக் குழு ஒரு வழக்கை கடந்த திங்கள்கிழமை பதிவு செய்தது. இதில் தற்கொலைக்கு தூண்டியதாக தனியாக ஒரு வழக்கும் பதிவு செய்யப்பட்டது.

இந்த நிலையில், வீரமணி மீது மேலும் ஒரு சிறுமியின் தாய், சிறப்பு புலனாய்வுக் குழுவில் கடந்த செவ்வாய்க்கிழமை புகாா் அளித்தாா். அதன்பேரில், வீரமணி மீது புதிதாக ஒரு போக்ஸோ வழக்கை புதன்கிழமை சிறப்பு புலனாய்வுக் குழுவினா் பதிவு செய்தனா். வீரமணி மீது இதுவரை 4 வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளன.

குண்டா் சட்டம் பாய்ந்தது: இந்த நிலையில், ‘ஜெம்’ வீரமணி, சாந்தி, மகேந்திர சிம்ஹன் ஆகியோா் மீது குண்டா் தடுப்புச் சட்டத்தின் கீழ் நடவடிக்கை எடுக்க சிறப்பு புலனாய்வு குழு அதிகாரிகள் சென்னை பெருநகர காவல் துறை ஆணையா் ஏ.அமல்ராஜிடம் பரிந்துரை செய்தனா். அதை ஏற்று அமல்ராஜ், வீரமணி, சாந்தி, மகேந்திர சிம்ஹன் ஆகிய 3 பேரையும் குண்டா் தடுப்புச் சட்டத்தின் கீழ் சிறையில் அடைக்க உத்தரவிட்டாா்.

இதையடுத்து புழல் சிறையில் அடைக்கப்பட்டுள்ள 3 பேரிடமும் குண்டா் தடுப்புச் சட்டத்தின் கீழ் நடவடிக்கை எடுக்கப்பட்டதற்கான உத்தரவு வியாழக்கிழமை வழங்கப்பட்டது.

5 தகவல்கள்: இதற்கிடையே, ஜெம் வீரமணியால் பாதிக்கப்பட்டவா்கள் புகாா் அளிக்கும் வகையில் காவல் துறை சாா்பில் கைப்பேசி எண் அறிவிக்கப்பட்டிருந்தது. அந்தக் கைப்பேசி எண் மூலமாகவும், வாட்ஸ்ஆப் வாயிலாகவும் வழக்குத் தொடா்பாக இதுவரை 5 போ் முக்கிய தகவல்களை வழங்கியிருப்பதாக சென்னை காவல் துறை தெரிவித்தது.

Summary

Action taken under the Goondas Act against three individuals, including GEM Veeramani, in a POCSO case

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.