ராஜீவ் காந்தி நினைவிடத்தில் மரியாதை செலுத்திய டி.கே. சிவகுமார்!வங்கதேசத்தின் புதிய அதிபராக மிர்சா ஃபக்ரூல் ஆலம்கீர் தேர்வு!வங்கதேசத்தின் புதிய அதிபராக மிர்சா ஃபக்ரூல் ஆலம்கீர் தேர்வு! ஜார்க்கண்ட் தேர்வுகள் ரத்து உத்தரவு நிறுத்திவைப்பு! உயர் நீதிமன்றம்அமைச்சர் மரிய வில்சனுடன் சமரச பேச்சுக்கு விருப்பமில்லை! சகோதரர் தரப்பு திட்டவட்டம்!

நாளை அமைச்சராகப் பதவியேற்கிறார் ஷாஜகான்!

அமைச்சராக ஷாஜகான் பதவியேற்கவுள்ளது குறித்து..

IUML

நாளை அமைச்சராகப் பதவியேற்கிறார் ஷாஜகான்! - படம்: கோப்புப்படம்

Published On :21 மே 2026, 6:01 pm IST

பாபநாசம் தொகுதி இந்திய யூனியன் முஸ்லிம் லீக் கட்சியின் எம்.எல்.ஏ. ஷாஜகான் நாளை(மே 22) அமைச்சராகப் பதவியேற்கிறார்.

முதல்வர் சி. ஜோசப் விஜய் தலைமையிலான தமிழக அமைச்சரவையில் இந்திய யூனியன் முஸ்லிம் லீக் கட்சியும் இணைந்துள்ளது.

தவெக அரசு பெருந்தன்மையுடன் அமைச்சரவையில் சேர அழைப்பு விடுத்தது, அதனை ஏற்றுக் கொண்டு பாபநாசம் தொகுதி எம்எல்ஏ ஷாஜகான் அமைச்சராவார் என்றும், எதிர்காலத்தில் இந்திய யூனியன் முஸ்லிம் லீக் கட்சிக்கு இரண்டு அமைச்சர்கள் ஒதுக்கினால் நன்றாக இருக்கும் என்றும் இந்திய யூனியன் முஸ்லிம் லீக் கட்சியின் தேசியத் தலைவர் காதர் மொகிதீன் தெரிவித்துள்ளார்.

தமிழக அமைச்சரவையில் பாபநாசம் தொகுதி இந்திய யூனியன் முஸ்லிம் லீக் கட்சியின் எம்.எல்.ஏ. ஷாஜகானை சேர்க்குமாறு இந்திய யூனியன் முஸ்லிம் லீக் கட்சியின் பொதுச் செயலர் முகம்மது அபூபக்கர், நவாஸ்கனி எம்.பி. ஆகியோர் பரிந்துரை கடிதத்தை முதல்வர் விஜய்யிடம் அளித்தனர்.

இந்த நிலையில், பாபநாசம் தொகுதி இந்திய யூனியன் முஸ்லீம் லீக் கட்சியின் எம்.எல்.ஏ. ஷாஜகான் நாளை(மே 22) அமைச்சராகப் பதவியேற்கிறார்.

Summary

Shahjahan, the Indian Union Muslim League MLA from the Papanasam constituency, will take oath as a Minister tomorrow (May 21).

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.