தில்லியில் பிரிக்ஸ் மாநாடு: ஈரான் வெளியுறவு அமைச்சர் அராக்சி இந்தியா வந்தடைந்தார்தமிழக அரசின் தலைமை வழக்கறிஞராக விஜய் நாராயண் நியமனம்!தமிழக அரசின் தலைமை வழக்கறிஞராக விஜய் நாராயண் நியமனம்!கர்நாடகம்: கல்வி நிறுவனங்களில் ஹிஜாப் அணிவதற்கான தடை நீக்கம்6 சர்வதேச விமான சேவைகள் தற்காலிகமாக ரத்து - ஏர் இந்தியாகண்களிலும் காதுகளிலும் பொறாமைப் புகை! திமுகவை விமர்சித்த விஜய்!நீட் தேர்வு தேவையில்லை; ரத்து செய்க: முதல்வர் ஜோசப் விஜய்அதிமுகவுடன் கூட்டணியமைக்க தவெக தயாராக இருந்தது: சி.வி. சண்முகம்மே 16-ல் தொடங்குகிறது தென்மேற்கு பருவமழை! வெற்றியின் வீச்சு கொளத்தூரில் பார்த்தும்கூடவா புரியவில்லை? - முதல்வர் விஜய்திமுகவுடன் கூட்டணி; கனவில்கூட வரக்கூடாது: சசிகலா

தமிழ் செய்திகள்

/

தமிழ்நாட்டை காப்பாற்றும் விஜய் என்னை காப்பாற்ற மாட்டாரா? எம்.எல்.ஏ. காமராஜ்

நம்பிக்கை வாக்கெடுப்பில் தவெகவுக்கு காமராஜ் ஆதரவு தெரிவித்திருப்பது பற்றி...

News image

எம்.எல்.ஏ. காமராஜ் - TNDIPR

Updated On :14 மணி நேரங்கள் முன்பு

தமிழ்நாடு முதல்வர் ஜோசப் விஜய் என்னை காப்பாற்றுவார் என்று அமமுகவில் இருந்து நீக்கப்பட்ட மன்னார்குடி எம்.எல்.ஏ. காமராஜ் தெரிவித்தார்.

தமிழ்நாடு சட்டப்பேரவையில் முதல்வர் ஜோசப் விஜய் தலைமையிலான அரசின் மீது நம்பிக்கை வாக்கெடுப்பு தீர்மானம் இன்று காலை முன்மொழியப்பட்டது.

இந்த தீர்மானத்தின் மீது மன்னார்குடி எம்.எல்.ஏ. காமராஜ் பேசியதாவது:

“தமிழ்நாடு முதல்வர் ஜோசப் விஜய்யின் தவெக அரசுக்கு நேற்றும் ஆதரவு தெரிவித்தேன், இன்றும் தெரிவிக்கிறேன், நாளையும் தெரிவிப்பேன். 5 ஆண்டுகாலமும் தவெக அரசுக்கு ஆதரவாக இருப்பேன்.

தவெகவுக்கு ஆதரவு தெரிவித்த காரணத்துக்காக ஒரு இயக்கத்தில் இருந்து வெளியேற்றப்பட்டுள்ளேன். தமிழ்நாடு மக்கள் அனைவரையும் காப்பாற்றும் முதல்வர் விஜய், என்னை காப்பாற்ற மாட்டாரா?

முதல்வராக விஜய் பதவியேற்ற 4 நாள்களில் திருச்சியில் ஒரே நாளில் 300 ரெளடிகள் சரணடைந்துள்ளனர். தமிழ்நாட்டில் போதைப் பொருள்கள் புழக்கம், கட்டப் பஞ்சாயத்து, ரெளடிகள் அட்டூழியம் அனைத்தும் அழிந்துவிட்டது.” எனக் குறிப்பிட்டார்.

தமிழக வெற்றிக் கழகத்துக்கு ஆதரவு தெரிவித்ததற்காக அம்மா மக்கள் முன்னேற்றக் கழகத்தில் இருந்து மன்னார்குடி எம்.எல்.ஏ. காமராஜை நீக்குவதாக அக்கட்சியின் பொதுச் செயலாளர் டிடிவி தினகரன் நேற்று உத்தரவிட்டிருந்தார்.

Summary

"Won't Vijay, who saves Tamil Nadu, save me?" — MLA Kamaraj

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.