தமிழ்நாடு சட்டப்பேரவையில் பெரும்பான்மையை நிரூபிக்க தவெக தலைவர் விஜய்க்கு வாய்ப்பளிக்க வேண்டும் என ஜம்மு - காஷ்மீர் முதல்வர் ஓமர் அப்துல்லா கோரிக்கை விடுத்துள்ளார்.
தமிழக சட்டப்பேரவைத் தேர்தலில் 108 தொகுதிகளில் வெற்றி பெற்று தனிப்பெரும் கட்சியாக தவெக உருவெடுத்துள்ளது. தமிழ்நாட்டில் ஆட்சியமைக்க தமிழக ஆளுநர் ராஜேந்திர விஸ்வநாத் ஆர்லேகரை தவெக தலைவர் விஜய் புதன்கிழமை (மே 6) சந்தித்து உரிமை கோரினார்.
அப்போது, தமிழ்நாட்டில் ஆட்சியமைக்க 118 எம்.எல்.ஏ.க்களின் பட்டியலை வழங்க வேண்டும் என்று விஜய்யிடம் ஆளுநர் கூறியதாகத் தெரிவிக்கப்பட்டது. இந்த நிலையில், வியாழக்கிழமை (மே 7) காலை மீண்டும் தவெக தலைவர் விஜய் ஆளுநரைச் சந்த பிறகு, ஆளுநர் தரப்பில் அறிக்கை ஒன்று வெளியிடப்பட்டது.
இதனைத் தொடர்ந்து, 118 எம்எல்ஏக்களின் பட்டியலை தவெக தலைவர் விஜய் வழங்க வேண்டும் என்று ஆளுநர் தரப்பில் திட்டவட்டமாக மீண்டும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதுகுறித்து பேசிய ஓமர் அப்துல்லா, “முன்னாள் பிரதமர் ஏ.பி. வாஜ்பாய் 13 நாள்களுக்கு அரசாங்கத்தை அமைத்தபோது இது நடந்தது. அவர் தனது பெரும்பான்மை பலத்தைக் காட்டுவதற்காக இந்தியக் குடியரசுத் தலைவர் காத்திருக்கவில்லை. குடியரசுத் தலைவர் அவரை அழைத்தார். 13 நாள்களுக்கு அரசாங்கம் நடைபெற்றது. ஆனால் வாஜ்பாயிடம் பெரும்பான்மை பலம் இல்லாதபோது, அவரே ராஜிநாமா செய்தார்.
முதலில் விஜய் ஆட்சியமைக்க அனுமதிக்கப்பட வேண்டும். பின்னர், சட்டப்பேரவையில் பெரும்பான்மையை நிரூபிக்க அவருக்கு வாய்ப்பளிக்க வேண்டும். அப்படி நிரூபித்தால் விஜய் பதவியில் தொடர்வார். இல்லையேல், ராஜிநாமா செய்வார்” எனத் தெரிவித்தார்.
Summary
Jammu and Kashmir Chief Minister Omar Abdullah has requested that Taveka leader Vijay be given an opportunity to prove his majority in the Tamil Nadu Legislative Assembly.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.
தொடர்புடையது

விஜய்க்கு ஆதரவு? சில மணி நேரத்தில் முடிவு எடுக்கப்படும்: மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட்

ஆடு, புலி, புல்லுக்கட்டு சவால்...
புதிய அத்தியாயத்தின் தொடக்கம்! விஜய்க்கு கீர்த்தி சுரேஷ் வாழ்த்து!

விஜய்க்கு ஜனநாயகன் தயாரிப்பு நிறுவனம் வாழ்த்து!
விடியோக்கள்

விஜய் முதல்வராக முடியுமா ? | TVK Vijay | TN CM | MK Stalin | Edapadi Palaniswamy
தினமணி செய்திச் சேவை

என்ன சொல்லி மிரட்டினாலும்... PM SHRI குறித்து அன்பில் மகேஸ் அட்வைஸ்
இணையதளச் செய்திப் பிரிவு

”நாளை முடிவு செய்யப்பட்டும்!”: தவெகவுக்கு ஆதரவளிப்பது குறித்து திருமா | VCK | TVK
இணையதளச் செய்திப் பிரிவு

Podcast | தவெக ஆட்சியமைப்பதில் சிக்கல்: பின்னணி என்ன? | News and Views | Epi - 32 |
தினமணி செய்திச் சேவை

