அமமுக எம்எல்ஏவை காணவில்லை: டிடிவி தினகரன் குற்றச்சாட்டு விஜய்யை ஆட்சி அமைக்க அழைக்கக் கோரி உச்சநீதிமன்றத்தில் மனு!தவெகவுக்கு இந்திய யூனியன் முஸ்லிம் லீக் கட்சி ஆதரவு இல்லை!கம்யூனிஸ்ட் கட்சிகளுக்கு நேரில் நன்றி தெரிவித்தார் விஜய்! ஆளுநரைச் சந்தித்து ஆட்சி அமைக்க உரிமை கோரினார் விஜய்!புதிய அரசு அமைய ஆளுநர் நடவடிக்கை எடுக்க வேண்டும்! மு.க. ஸ்டாலின்மேற்கு வங்க முதல்வராகிறார் சுவேந்து அதிகாரி! 2 துணை முதல்வர்கள்? தவெக ஆட்சியமைக்க மார்க்சிய கம்யூனிஸ்ட் கட்சியும் ஆதரவு! தவெகவுக்கு இந்திய கம்யூனிஸ்ட் ஆதரவு!
/

தவெகவிடம் இருந்து எந்த கடிதமும் வரவில்லை! மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட்

மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாநிலச் செயலர் பெ. சண்முகம் பேட்டி

News image

மாா்க்சிஸ்ட் மாநிலச் செயலா் பெ. சண்முகம் - கோப்புப்படம்

Updated On :6 மே 2026, 12:14 pm IST

தவெகவிடம் இருந்து எந்த கடிதமும் வரவில்லை என்றும் திமுக கூட்டணியில் தொடர்வதாகவும் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாநிலச் செயலர் பெ. சண்முகம் கூறியுள்ளார்.

தமிழக சட்டப்பேரவைத் தேர்தலில் தவெக 108 இடங்களில் வெற்றி பெற்றுள்ள நிலையில் தனிப்பெரும்பான்மை இல்லாததால் சில கட்சிகளின் ஆதரவுடன் தவெக ஆட்சியமைக்க வாய்ப்புள்ளதாகக் கூறப்படுகிறது.

தவெகவுக்கு காங்கிரஸ் ஆதரவளிக்க வேண்டும் என விஜய் தன்னிடம் கேட்டதாக அக்கட்சியின் பொதுச்செயலாளர் கே.சி. வேணுகோபால் நேற்று தெரிவித்திருந்தார். இதுதொடர்பாக தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி இன்று தனது முடிவை அறிவிக்கிறது.

விசிக, இந்திய கம்யூனிஸ்ட், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சிகளிடம் ஆதரவு கோரி தவெக தரப்பில் கடிதம் அனுப்பப்பட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகின.

இந்நிலையில் தவெகவிடம் இருந்து எந்த கடிதமும் வரவில்லை என்று மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் கட்சியின் மாநிலச் செயலர் பெ. சண்முகம் கூறியுள்ளார்.

சென்னையில் திமுக தலைவர் மு.க. ஸ்டாலினுடனான சந்திப்புக்குப் பின்னர் செய்தியாளர்களுடன் பேசிய அவர்,

"தவெகவிடம் இருந்து இதுவரை எந்த கடிதமும் வரவில்லை. மதச்சார்பற்ற சக்திகளின் ஒற்றுமையில் சிபிஎம் உறுதியாக இருக்கிறது. திமுக கூட்டணியில் தொடர்கிறோம். தவெகவிடம் இருந்து கடிதம் வந்தால் பேசிவிட்டுச் சொல்கிறோம்" என்றார்.

Summary

There is no letter coming from tvk: CPIM

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.