ராஜீவ் காந்தி நினைவிடத்தில் மரியாதை செலுத்திய டி.கே. சிவகுமார்!வங்கதேசத்தின் புதிய அதிபராக மிர்சா ஃபக்ரூல் ஆலம்கீர் தேர்வு!வங்கதேசத்தின் புதிய அதிபராக மிர்சா ஃபக்ரூல் ஆலம்கீர் தேர்வு! ஜார்க்கண்ட் தேர்வுகள் ரத்து உத்தரவு நிறுத்திவைப்பு! உயர் நீதிமன்றம்அமைச்சர் மரிய வில்சனுடன் சமரச பேச்சுக்கு விருப்பமில்லை! சகோதரர் தரப்பு திட்டவட்டம்!

ஆட்சியை நோக்கி தவெக! அடுத்த இடத்தில் திமுக!

ஆட்சியை நோக்கி தவெக நகர்ந்து வரும் நிலையில் அடுத்த இடத்தில் திமுக நிலைநிறுத்திக் கொண்டுள்ளது.

Leaders

விஜய் - ஸ்டாலின் - பழனிசாமி - File photo

Published On :4 மே 2026, 5:41 pm IST

தமிழ்நாட்டில் சட்டப்பேரவைத் தேர்தலில் பதிவான வாக்குகள் எண்ணப்பட்டு, இதுவரை வெளியான முடிவுகளில் 108 தொகுதிகளில் விஜய்யின் தமிழக வெற்றிக் கழகம் வெற்றி பெற்றுள்ளது.

தமிழக சட்டப்பேரவைக்கு மொத்தமுள்ள 234 தொகுதிகளில் பெரும்பான்மை பெற 118 தொகுதிகளில் வெற்றி பெற வேண்டும் என்ற நிலையில் தனிப்பெரும் கட்சியாக தவெக வென்றுள்ளது.

அடுத்த இடத்தில் திமுக இருந்தாலும்கூட, ஏற்கனவே இரண்டு முறை வென்ற கொளத்தூர் தொகுதியில் முதல்வர் ஸ்டாலினே தோல்வியடைந்திருப்பது திமுகவினருக்கு மட்டுமல்லாமல், திமுகவுக்கு வாக்களித்த பெரும்பாலானோருக்கு அதிர்ச்சியை ஏற்படுத்தியிருக்கிறது.

மூன்றாவது இடத்தில் அதிமுக உள்ளது. தமிழ்நாட்டில் 167 இடங்களில் போட்டியிட்ட அதிமுக 44 இடங்களில் முன்னிலையில் உள்ளது. அதிமுக கூட்டணி பின்னடைவை சந்தித்தபோதும், அதிமுக பொதுச் செயலர் பழனிசாமி எடப்பாடி தொகுதியில் வெற்றி பெற்றுள்ளார்.

பெரம்பூர், திருச்சி கிழக்கு தொகுதிகளில் போட்டியிட்ட தவெக தலைவர் விஜய், இரண்டு தொகுதிகளிலும் வெற்றியைப் பதிவு செய்திருக்கிறார்.

தனிப்பெரும்பான்மை என்ற 118 தொகுதிகளில் வென்று தவெக ஆட்சியைப் பிடிக்குமா? பெரும்பான்மைக்கு ஒரு சில எண்ணிக்கை குறைந்து, மற்ற கூட்டணிகளில் இடம்பிடித்துள்ள காங்கிரஸ் போன்ற கட்சிகளுடன் தவெக பேச்சுவார்த்தை நடத்தி, ஆதரவு பெற்று பெரும்பான்மை பலத்தை உறுதி செய்யுமா என்பது, அடுத்தடுத்து வெளியாகும் வாக்கு எண்ணிக்கை சுற்று முடிவுகளைப் பொருத்தே அமையும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

Summary

DMK is firmly established in the next position as it moves towards power.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.