தேர்தலில் போட்டியிட்ட லாட்டரி மார்ட்டின் குடும்பத்தினர் அனைவரும் வெற்றி பெற்றனர்.
தமிழக சட்டப்பேரவைத் தேர்தலில் லாட்டரி மார்ட்டின் குடும்பத்தைச் சேர்ந்த இருவர் போட்டியிட்டனர். இதேபோன்று புதுச்சேரியில் லட்சிய ஜனநாயகக் கட்சியின் தலைவர் ஜோஸ் சார்லஸ் மார்ட்டின் போட்டியிட்டார்.
புதுச்சேரி காமராஜ் நகர் தொகுதியில் லட்சிய ஜனநாயக கட்சி தலைவர் ஜோஸ் சார்லஸ் மார்ட்டின் 10,205 வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றார்.
இவரின் மருமகன் ஆதவ் அர்ஜுனா, தமிழக வெற்றிக் கழகம் சார்பில் வில்லிவாக்கம் தொகுதியில் போட்டியிட்டு, 17276 வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றார். (மாலை 5.30 மணி நிலவரம்)
மார்ட்டின் அறக்கட்டளையின் நிர்வாக அறங்காவலரும், மார்ட்டின் மனைவியுமான லீமா ரோஸ் மார்ட்டின் அதிமுக சார்பில் லால்குடி தொகுதியில் போட்டியிட்டு வெற்றி பெற்றார்.
Summary
Election result 2026 Lottery Martin's entire family wins!
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.
தொடர்புடையது
கட்சி மாறி வாக்களித்த காங்கிரஸ் எம்.எல்.ஏ.க்கள்... மாநிலங்களவை தேர்தலில் பாஜக ஆதரவு சுயேச்சை வேட்பாளர் வெற்றி!

2016 ராதாபுரம் தேர்தல் வெற்றி விவகாரம்: உச்சநீதிமன்றத்தில் இன்பதுரை மேல்முறையீடு

சொத்துகள் முடக்கத்தை எதிா்த்து மாா்ட்டின், குடும்பத்தினா் வழக்கு: அமலாக்கத் துறை பதிலளிக்க உத்தரவு







