ஈரான் மோசமாக நடந்துகொண்டால் அமெரிக்கா மீண்டும் தாக்குதல் நடத்தும் - டிரம்ப் எச்சரிக்கைஓராண்டில் பயணச்சீட்டு இன்றி ரயிலில் பயணித்ததாக 12.24 லட்சம் வழக்குகள் - ரூ. 65.16 கோடி அபாரதம்தமிழகத்தில் 14 இடங்களில் வெய்யில் சதம்: இன்று பலத்த மழைக்கும் வாய்ப்புஅருணாசலேஸ்வரா் கோயிலில் ஊழியா்கள் - தெலங்கானா பக்தா்கள் இடையே மோதல்: 15 போ் காயம்சென்னையில் உணவு வகைகள் 20% விலை உயா்வு - பி.ஜி. விடுதிகளில் வாடகை உயா்வு - மக்கள் கடும் பாதிப்புதமிழகத்தில் யாா் ஆட்சி? இன்று காலை 8 மணிக்கு வாக்கு எண்ணிக்கை தொடக்கம்இடதுசாரிகளை வீழ்த்தியது போல திரிணமூலை வீழ்த்துவோம்: பாஜக சுவேந்து அதிகாரிவாக்குத் திருட்டுக்கு வாய்ப்பில்லை: மேற்கு வங்க தேர்தல் ஆணையம்வாக்கு எண்ணிக்கை: தயார் நிலையில் மேற்கு வங்கம் - தலைமைத் தேர்தல் அதிகாரிஉலக பத்திரிகை சுதந்திர குறியீட்டு பட்டியலில் இந்தியா தொடர் சரிவு! கார்கே விமர்சனம்
/

சிலிண்டர் விலை உயர்வு! விசிக, கம்யூனிஸ்ட் கட்சிகள் மே 7-ல் ஆர்ப்பாட்டம்

வணிக சிலிண்டர் விலை உயர்வை மத்திய அரசு திரும்பப் பெறக்கோரி, எதிர்க்கட்சிகள் மே 7-ல் கண்டன ஆர்ப்பாட்டம்

News image

வனிக சிலிண்டர் விலை உயர்வு - பிரதிப் படம்

Updated On :3 மே 2026, 10:23 am

வணிக சிலிண்டர் விலை உயர்வை மத்திய அரசு திரும்பப் பெறக்கோரி, எதிர்க்கட்சிகள் மே 7-ல் கண்டன ஆர்ப்பாட்டம் நடத்தவுள்ளன.

வணிக சிலிண்டர் விலை உயர்வைத் திரும்பப் பெறக்கோரியும், ரயில்வே பணியிடக் குறைப்பைக் கைவிடக்கோரியும் வலியுறுத்தி, விடுதலை சிறுத்தைக் கட்சி, இந்திய கம்யூனிஸ்ட், மார்க்சிய கம்யூனிஸ்ட், இந்திய கம்யூனிஸ்ட் (மார்க்சிய லெனினிஸ்ட்) கட்சிகள், மே 7 ஆம் தேதியில் மத்திய அரசின் அலுவலகங்கள் முன்பாக கண்டன ஆர்ப்பாட்டம் நடத்தவிருப்பதாக அறிவித்துள்ளன.

உலகளாவிய எண்ணெய் விலைகளில் ஏற்பட்ட உயர்வைத் தொடர்ந்து, வணிகப் பயன்பாட்டுக்கான சிலிண்டர் விலை அதிரடியாக வெள்ளிக்கிழமை (மே.1) ரூ. 993 உயர்ந்து ரூ. 3,237-க்கு விற்பனையாகிறது.

ஹோட்டல்கள், உணவகங்களில் பயன்படுத்தப்படும் வணிக சிலிண்டர் விலை உயர்ந்துள்ளதால், உணவுப் பொருள்களின் விலை மேலும் அதிகரிக்கும் அபாயம் ஏற்பட்டுள்ளது.

இதனிடையே, சிலிண்டர் விலை உயர்வால் தமிழ்நாட்டில் விடுதிகள் கட்டணத்தை மே 5 முதல் உயர்த்துவதாக விடுதி உரிமையாளர்கள் சங்கம் அறிவித்துள்ளது.

Summary

Cylinder Price Hike: VCK and Communist Parties Stage Protest

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.