தமிழக சட்டப்பேரவைத் தேர்தல் வாக்கு எண்ணிக்கையை நிறுத்த பாஜக கூட்டணிக் கட்சிகள் நிறுத்த முயற்சிப்பதாக அமைச்சர் ஆர்.எஸ். பாரதி கூறியுள்ளார்.
தமிழகத்தில் நாளை நடைபெறவுள்ள வாக்கு எண்ணிக்கையைச் சீர்குலைக்கவும், சட்டம் - ஒழுங்கில் பாதிப்பை ஏற்படுத்தவும் பாஜக முயற்சிப்பதாக தேர்தல் ஆணையத்தில் தலைமைத் தேர்தல் அதிகாரிக்கும், டிஜிபி-க்கும் அமைச்சர் ஆர்.எஸ். பாரதி கடிதம் எழுதியுள்ளார்.
தொடர்ந்து, செய்தியாளர்களுடன் அவர் பேசியதாவது, "தேர்தலில் மு.க. ஸ்டாலின் தலைமையிலான மதச்சார்பற்ற முற்போக்குக் கூட்டணி ஆட்சியமைப்பது உறுதியாகி விட்டது.
இந்த நிலையில், சமூக ஊடகங்களில் வரும் செய்திகளைப் பார்த்தால், நாளை நடைபெறவுள்ள வாக்கு எண்ணிக்கையை நிறுத்த, வாக்கு எண்ணும் மையங்களில் பாஜகவும் அதன் கூட்டணிக் கட்சிகளும் ஏதேனும் செய்ய திட்டமிட்டிருப்பதாக சந்தேகம் ஏற்படுகிறது.
ஆகவே, எந்தப் புகார்கள் வந்தாலும், அவை மீது உடனடியாக நடவடிக்கை எடுக்கப்பட வேண்டும் என தேர்தல் ஆணையத்திடம் கேட்டுக் கொள்கிறோம். ஏனெனில், நடவடிக்கை எடுப்பதாகச் சொல்லி, மாலைவரையில் எதுவும் செய்ய மாட்டார்கள்.
பிரச்னையை ஆரம்பிக்கலாமா? வாக்கு எண்ணிக்கையை நிறுத்தலாமா? என எதை வேண்டுமானாலும் பாஜக செய்யும்.
கடைசி நேரத்தில், அதிகாரத்தை கையில் வைத்துக்கொண்டு, தேர்தல் ஆணையமும் பாஜகவின் 'பி' அணியாக செயல்படுகிறது. இதனைத்தான் நாடு முழுவதுமுள்ள அனைத்து எதிர்க்கட்சிகளும் சொல்கின்றன. சில நேரங்களில், தேர்தல் ஆணையத்தை உச்சநீதிமன்றம்கூட கண்டித்திருக்கிறது. இருப்பினும், திமுக எதையும் சந்திப்பதற்குத் தயாராக இருக்கிறது" என்று அமைச்சர் ஆர்.எஸ். பாரதி தெரிவித்தார்.
Summary
BJP Attempts to Halt Vote Counting: DMK Writes to Election Commission
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது

வாக்கு எண்ணிக்கை: தயார் நிலையில் மேற்கு வங்கம் - தலைமைத் தேர்தல் அதிகாரி
கட்சியில் இணைய அழுத்தம்தான் காரணமா? பாஜக மீது திமுக குற்றச்சாட்டு

வாக்கு சதவிகிதம் அதிகரிப்பா? தலைமைத் தேர்தல் ஆணையரின் நகைச்சுவை: திமுக
திமுக - பாஜக நேரடியாகப் போட்டியிடும் தொகுதிகள் எவை!?
வீடியோக்கள்

சிங் கீதம் டீசர்!
தினமணி செய்திச் சேவை

அம்மா அம்மாதான் பாடல்!
இணையதளச் செய்திப் பிரிவு

தோழர்களை நெறிப்படுத்த மட்டுமே அந்த விடியோ! Thiruma விளக்கம்! | VCK
இணையதளச் செய்திப் பிரிவு

பிளே ஆஃப் செல்ல சிஎஸ்கே இதையெல்லாம் செய்யக் கூடாது? | CSK vs MI | Chennai Super Kings |
தினமணி செய்திச் சேவை


