சென்னையின் மையப் பகுதிகளைவிடவும், அதன் எல்லை மற்றும் புறநகர் சென்னைப் பகுதிகளில் வெள்ளிக்கிழமை தொடர்ந்து இரண்டாவது நாளாக கடும் வெப்பம் பதிவாகி மக்களை கடுந்துயரத்துக்கு ஆளாக்கியிருந்தது.
ஆனால், இது, மே மாதத்தின் கடுமையான வெய்யில் காலத்துக்கான ஆரம்பம் என்று வானிலை ஆய்வாளர்கள் தெரிவித்திருப்பது மேலும் அச்சத்தை ஏற்படுத்துகிறது.
இந்த மாதத்தில் கடுமையான வெப்ப நாள்களும், வெப்பமான இரவு நேரங்களும் வரவிருப்பதாக இந்திய வானிலை ஆய்வு மையமும் எச்சரித்துள்ளது. அதாவது இந்த மாதத்தில் சென்னையில் குறைந்தது 4 முதல் 5 வெப்ப அலை நாள்கள் இருக்கலாம். அதுபோல, இயல்பான அளவை விட சற்று கூடுதலாக மழை பெய்து, வெப்பத்தைக் குறைக்கும் வாய்ப்பும் உள்ளதாக, கடும் போட்டிக்குப் பிறகு ஆறுதல் பரிசு கிடைப்பது போல ஒரு கூடுதல் தகவலும் வெளியாகியிருக்கிறது.
வரும் மாதத்தின் வெய்யில் பற்றிய ஒரு அறிக்கையை இந்திய வானிலை ஆய்வு மையம் வெளியிட்டுள்ளது. அதில், தமிழ்நாடு உள்ளிட்ட நாட்டின் பல பகுதிகளில் வரும் மே மாதத்தில் இயல்பான அளவைவிட, வெப்பம் அதிகரித்துக் காணப்படும். கடற்கரை மாவட்டங்களில், திருவள்ளூர் முதல் ராமநாதபுரம் வரை இந்த மாதத்தில் 4 முதல் ஐந்து வெப்ப அலை நாள்கள் பதிவாகக் கூடும். சில பகுதிகளில் அதிகபட்சமாக 8 வெப்ப அலை நாள்கள் வரை பதிவாகலாம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
மே 5ஆம் தேதி வரை கர்நாடகம், தமிழ்நாடு, ஆந்திரத்தில் வெப்ப அலை வீசும். வெப்ப அலை நாள்கள் என்றால், வெப்ப அளவு 40 டிகிரி செல்சியஸ் அல்லது அதற்கும் மேல் பதிவாகும் என்று கூறப்படுகிறது.
Summary
Summer heat threatens suburban Chennai! Is this just the beginning?
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது

கோடை வெப்பத்தால் பாதிக்கப்பட்டவருக்கு எப்படி உதவ வேண்டும்?

கத்தரி வெய்யில்: என்ன செய்யலாம், எதைத் தவிர்க்கலாம்!

ஹீட் ஸ்ட்ரோக் - அறிகுறிகள் என்ன? தவிர்க்க என்ன செய்ய வேண்டும்?

சப்தமில்லாமல் சதமடித்து சர்ஃப்ரைஸ் கொடுக்கும் வெய்யில்! வேலூரில் 107.96 டிகிரி
வீடியோக்கள்

நாளை தீர்ப்பு ...யாருக்குச் சாதகம் ? | TN Election Results 2026 | DMK | ADMK | NTK | TVK
தினமணி செய்திச் சேவை

வாக்கு எண்ணிக்கை; TVK சார்பில் வைக்கப்பட்ட வேண்டுகோள்கள்! | Aadhav Arjuna | Vijay
இணையதளச் செய்திப் பிரிவு

Thiruma திடீர் விடியோ உண்மைப் பின்னணி ! உடைத்துப் பேசும் ரவீந்திரன் துரைசாமி | VCK
இணையதளச் செய்திப் பிரிவு

"விசிகவினர் சிறப்பாக பணியாற்றவில்லை!" திருமா வெளியிட்ட பரபரப்பு விடியோ!
இணையதளச் செய்திப் பிரிவு



