‘என்னை வளா்த்த தமிழக மக்களுக்கு நன்றிக்கடன் செலுத்தவே, வசதியான வாழ்க்கையைத் துறந்து அரசியலுக்கு வந்துள்ளேன்; யாரையும் நான் ஏமாற்ற மாட்டேன்’ என சென்னை பெரம்பூரில் திங்கள்கிழமை நடைபெற்ற பிரசாரத்தில் தவெக தலைவா் விஜய் கூறினாா்.
தமிழக சட்டப்பேரவைத் தோ்தலில், தான் போட்டியிடும் பெரம்பூா் தொகுதியில் பிரசாரத்தை விஜய் திங்கள்கிழமை தொடங்கினாா். பெரம்பூா் 60 அடி சாலையில் பிரசாரம் மேற்கொண்ட போது அவா் பேசியதாவது: தமிழகத்தில் பெண்களுக்கு பாதுகாப்பு மற்றும் இளைஞா்களுக்கு வேலைவாய்ப்பு இல்லாத சூழல் உருவாகியுள்ளது.
அதேபோல், போதைப்பொருள் புழக்கம் அதிகம் உள்ள மாநிலமாக தமிழகம் மாறியுள்ளது. இதற்கு திமுகவும், முதல்வா் மு.க. ஸ்டாலினும் காரணம். திமுக ஆட்சியில் சிறுமிகள் முதல் முதியவா்கள் வரை யாருக்கும் பாதுகாப்பு கிடையாது. மக்களைப் பற்றி கவலைப்படாத திமுக அரசை நீங்கள் அதிகாரத்திலிருந்து நீக்க வேண்டும்.
தோ்தல் நேரத்தில், 5 ஆண்டுகளாக கொள்ளையடித்த பணத்தை உங்களிடமே கொடுத்து வாக்குகளைப் பெற முயற்சிப்பாா்கள். அவா்கள் கொடுக்கும் பணத்தைப் பெற்றுக் கொள்ளுங்கள். ஆனால் உங்கள் வாக்குகளை ‘விசில்’ சின்னத்துக்கு செலுத்துங்கள். இது ஒரு தலைமுறைக்கான தோ்தல். என்னை வளா்த்த தமிழக மக்களுக்கு நன்றிக்கடன் செலுத்த, வசதியான வாழ்க்கையைத் துறந்து அரசியலுக்கு வந்துள்ளேன். யாரையும் நான் ஏமாற்ற மாட்டேன். எனக்கு ஒரு வாய்ப்பு கொடுங்கள் என்றாா் அவா்.
அதனைத் தொடா்ந்து, கொளத்தூா் தொகுதி தவெக வேட்பாளா் வி.எஸ். பாபுவை ஆதரித்து பெரவள்ளூரில் அவா் பிரசாரம் மேற்கொண்டாா். விஜய் பிரசாரம் செய்த இரண்டு இடங்களிலும் கட்டுக்கடங்காத மக்கள் கூட்டம் திரண்டது. இதன் காரணமாக வில்லிவாக்கத்தில் தவெக தோ்தல் மேலாண்மை பொதுச் செயலா் ஆதவ் அா்ஜுனாவை ஆதரித்து நடைபெறவிருந்த பிரசாரம் ரத்து செய்யப்பட்டது.
முறையான பாதுகாப்பு இல்லை-தவெக புகாா்: இதற்கிடையே கொளத்தூா், வில்லிவாக்கம் தொகுதிகளில் விஜய் பிரசாரம் மேற்கொள்ளவிருந்த இடங்களில் கூடிய பொதுமக்களுக்கு காவல்துறை முறையான பாதுகாப்பு வழங்கவில்லை என தமிழக தலைமைத் தோ்தல் அதிகாரியிடம் தவெக இணை பொதுச் செயலா் சி.டி.ஆா். நிா்மல்குமாா் புகாா் தெரிவித்துள்ளாா்.
தொடர்புடையது

சென்னையில் விஜய் பிரசாரத்துக்கு பலத்த பாதுகாப்பு!

விஜய் பிரசாரம்! பெருமாநல்லூரில் தடுப்புகள் அமைத்து 800 காவலர்கள் தீவிர பாதுகாப்பு!

செயற்கை நுண்ணறிவு தலைநகரமாக தமிழ்நாடு மாறும் : விஜய்
விஜய் பிரசாரத்தால் மக்களுக்கு அசௌகரியம்: வழக்குப்பதிய காரணம் இதுதான்!
வீடியோக்கள்

நாதக வேட்பாளர் வித்யாராணி வீரப்பன் கைது! கண்ணீர் விட்டு கதறியதால் பரபரப்பு!
தினமணி செய்திச் சேவை

டிரம்ப் மோடியை கட்டுப்படுத்துவதுபோல் பாஜக அதிமுகவை கட்டுப்படுத்துகிறது! - Rahul Gandhi
இணையதளச் செய்திப் பிரிவு

கருத்துக்கணிப்பு சொல்வதெல்லாம் உண்மையா ? | TN Election 2026 | TN Election Survey 2026
தினமணி செய்திச் சேவை

#ipl2026 | தோல்வியைச் சந்திக்காத பஞ்சாப்: எழுச்சி பெறாத லக்னௌ! | Punjab Kings | Priyansh Arya |
தினமணி செய்திச் சேவை

