கே.எல்.ராகுல் சதம் வீண்: டெல்லிக்கு எதிராக இமாலய இலக்கை துரத்திப் பிடித்த பஞ்சாப்! ராஜஸ்தானுக்கு எதிரான ஐபிஎல் ஆட்டத்தில் ஹைதராபாத் அணி முதலில் பந்துவீச்சுடெல்லி வீரர் லுங்கி இங்கிடிக்கு தலையில் காயம்! ஆம்புலன்ஸில் அழைத்துச் செல்லப்பட்டார் தெலங்கானா மேலவை உறுப்பினராகிறார் அசாருதீன்: ஆளுநர் ஒப்புதல்!மக்கள் எதிர்பார்த்த விடுதலை மே 4-ல் கிடைக்கும்: நிர்மல் குமார்அதானி நிறுவனத்தின் உண்மையான பெயர் மோதானி: ராகுல் கடும் தாக்குதிமுகவே மீண்டும் ஆட்சி; விஜய்யால் அரசியல் சூழல் மாறும்: திருமாவளவன்நீட் தேர்வுக்கான ஹால் டிக்கெட் வெளியீடு எப்போது? என்டிஏ அறிவிப்பு
/

தமிழக அமைச்சர்களும் தொகுதிகளும்!

தமிழக சட்டப்பேரவைத் தேர்தலில் அமைச்சர்கள் போட்டியிடும் தொகுதிகள் குறித்து...

News image

அமைச்சர்கள் போட்டியிடும் தொகுதிகள் - TN DIPR

Updated On :28 மார்ச் 2026, 11:28 am

தமிழக சட்டப்பேரவைத் தேர்தலில் போட்டியிடும் திமுக வேட்பாளர்களின் பட்டியலை முதல்வர் மு.க. ஸ்டாலின் வெளியிட்டுள்ளார்.

பேரவைத் தேர்தலில் மாநில அமைச்சர்கள் போட்டியிடும் தொகுதிகள்

  • பேரவைத் தலைவர் மு. அப்பாவு - ராதாபுரம்

  • முதல்வர் மு.க. ஸ்டாலின் - கொளத்தூர்

  • துணை முதல்வர், இளைஞர் நலன் மற்றும் விளையாட்டு மேம்பாட்டுத் துறை அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் - சேப்பாக்கம்

  • நீர்வளத் துறை அமைச்சர் துரைமுருகன் - காட்பாடி

  • நகர்ப்புற வளர்ச்சித் துறை அமைச்சர் கே.என்.நேரு - திருச்சி மேற்கு

  • ஊரக வளர்ச்சித் துறை அமைச்சர் இ. பெரியசாமி - ஆத்தூர்

  • பொதுப்பணித் துறை அமைச்சர் எ.வ. வேலு - திருவண்ணாமலை

  • வேளாண்மை - உழவர் நலத் துறை அமைச்சர் எம்.ஆர்.கே. பன்னீர்செல்வம் - குறிஞ்சிப்பாடி

  • வருவாய்த் துறை மற்றும் பேரிடர் மேலாண்மைத் துறை அமைச்சர் கே.கே.எஸ்.எஸ்.ஆர். ராமச்சந்திரன் - அருப்புக்கோட்டை

  • நிதித் துறை அமைச்சர் தங்கம் தென்னரசு - திருச்சுழி

  • சட்டத் துறை அமைச்சர் எஸ். ரகுபதி - திருமயம்

  • வீட்டு வசதித் துறை அமைச்சர் சு. முத்துசாமி - ஈரோடு மேற்கு

  • கூட்டுறவுத் துறை அமைச்சர் கே.ஆர். பெரியகருப்பன் - திருப்பத்தூர்

  • தமிழ் வளர்ச்சி மற்றும் செய்தித் துறை அமைச்சர் மு.பெ. சாமிநாதன் - காங்கேயம்

  • சமூக நலன் - மகளிர் உரிமைத் துறை அமைச்சர் கீதா ஜீவன் - தூத்துக்குடி

  • மீன்வளம் - மீனவர் நலத் துறை மற்றும் கால்நடைப் பராமரிப்புத் துறை அமைச்சர் அனிதா ஆர். ராதாகிருஷ்ணன் - திருச்செந்தூர்

  • போக்குவரத்து மற்றும் மின்சாரத் துறை அமைச்சர் சிவசங்கர் - குன்னம்

  • உணவு மற்றும் உணவுப்பொருள் வழங்கல் துறை அமைச்சர் அர. சக்கரபாணி - ஒட்டன்சத்திரம்

  • சுற்றுலாத் துறை அமைச்சர் ஆர். ராஜேந்திரன் - சேலம் வடக்கு

  • உயர்கல்வித் துறை அமைச்சர் கோவி. செழியன் - திருவிடைமருதூர்

  • மருத்துவம் மற்றும் மக்கள் நலவாழ்வுத் துறை அமைச்சர் மா. சுப்பிரமணியன் - சைதாப்பேட்டை

  • வணிக வரி மற்றும் பதிவுத் துறை அமைச்சர் பி. மூர்த்தி - மதுரை கிழக்கு

  • வனம் மற்றும் கதர் துறை அமைச்சர் ஆர்.எஸ். ராஜகண்ணப்பன் - முதுகுளத்தூர்

  • இந்து சமயம் மற்றும் அறநிலையத் துறை அமைச்சர் பி.கே.சேகர்பாபு - துறைமுகம்

  • சிறுபான்மையினர் நலன் மற்றும் வெளிநாடுவாழ் தமிழர் நலத்துறை அமைச்சர் எஸ்.எம். நாசர் - ஆவடி

  • பள்ளிக்கல்வித் துறை அமைச்சர் அன்பில் மகேஸ் பொய்யாமொழி - திருவெறும்பூர்

  • தொழிலாளர் நலன் - திறன் மேம்பாட்டுத் துறை அமைச்சர் சி.வி. கணேசன் - திட்டக்குடி (தனி)

  • தகவல் தொழில்நுட்பவியல் துறை அமைச்சர் பழனிவேல் தியாகராஜன் - மதுரை மத்தி

  • ஆதிதிராவிடர் நலத் துறை அமைச்சர் மதிவேந்தன் - ராசிபுரம் (தனி)

  • வர்த்தகத் துறை அமைச்சர் டி.ஆர்.பி. ராஜா - மன்னார்குடி

மேலும், அமைச்சர் காந்தியின் மகன் வினோத் காந்தி - ராணிப்பேட்டையிலும், முன்னாள் அமைச்சர் பொன்முடியின் மகன் கௌதம சிகாமணி திருக்கோயிலூரிலும், முன்னாள் அமைச்சர் செந்தில் பாலாஜி கோவை தெற்கு தொகுதியிலும் போட்டியிடுகின்றனர்.

அதுமட்டுமின்றி, திமுகவில் சமீபத்தில் இணைந்த முன்னாள் முதல்வர் ஓ. பன்னீர்செல்வத்துக்கு போடிநாயக்கனூர் தொகுதியும் ஒதுக்கப்பட்டுள்ளது.

PDF
திமுக வேட்பாளர்கள் பட்டியல்
பார்க்க

Summary

Tamilnadu Assembly Election: Constituencies where DMK Ministers are contesting

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.