திமுக சார்பில் வரும் பேரவைத் தேர்தலில் போட்டியிடும் வேட்பாளர்களில் பட்டதாரிகளுக்கு, அதிலும் குறிப்பாக, பொறியியல் தொழில்நுட்பம் சார்ந்த பட்டம் பெற்றவர்களுக்கு முக்கியத்துவம் அளித்து வேட்பாளர் வாய்ப்பு வழங்கப்பட்டுள்ளது.
வரும் பேரவைத் தேர்தலில் திமுக சார்பில் போட்டியிடும் வேட்பாளர்கள் பட்டியலை திமுக தலைவரும், தமிழக முதல்வருமான மு.க. ஸ்டாலின் இன்று (மார்ச் 28) வெளியிட்டார். திமுக வேட்பாளர்களில் 125 பேர் பட்டம் பெற்றவர்கள் என்று முதல்வர் ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.
இந்நிலையில், மொத்தம் அறிவிக்கப்பட்டுள்ள 164 வேட்பாளர்களில் 17-க்கும் மேற்பட்டோர் பொறியியல் (பி.இ., எம்.இ., பி.டெக்., எம்.டெக்.) தொழில்நுட்பம் சார்ந்த துறைகளில் பட்டம் பெற்றவர்களாவர்.
திருவள்ளூர் - வி. ஜி. ராஜேந்திரன்
வில்லிவாக்கம் - கார்த்திக் மோகன்
ஆற்காடு - ஜெ. எல். ஈஸ்வரப்பன்
வானூர் - கௌதம் திராவிடமணி
உளுந்தூர்பேட்டை - ஜி. அர். வசந்தவேல்
கெங்கவல்லி - கு. சின்னதுரை
மேட்டூர் - மிதுன் சக்ரவர்த்தி
அரவக்குறிச்சி - மொஞ்சனூர் ஆர். இளங்கோ
மண்ணச்சநல்லூர் - சீ. கதிரவன்
குன்னம் - சா. சி. சிவசங்கர்
நெய்வேலி - சபா. ராஜேந்திரன்
புவனகிரி - துரை கி. சரவணன்
மதுரை (மத்திய) - பி. டி. ஆர். பழனிவேல் தியாகராஜன்
திருப்பரங்குன்றம் - கிருத்திகா தங்கபாண்டி
திருச்சுழி - தங்கம் தென்னரசு
திருநெல்வேலி - சு. சுப்பிரமணியன்
விருகம்பாக்கம் - பிரபாகர்ராஜா
கோயமுத்தூர் வடக்கு - செந்தமிழ்செல்வன்
முசிறி - என். எஸ். கருணைராஜா
அதேபோல மொத்த வேட்பாளர்களில் 60 பேர் புதுமுகங்களாகக் களமிறக்கப்பட்டுள்ளனர். திமுகவின் இளம் வேட்பாளர் என்ற பெருமை அவினாசி தொகுதியில் போட்டியிடும் டாக்டர் கோகிலா மணிக்கு கிடைத்துள்ளது. அவருக்கு வயது 26.
இந்நிலையில், அவர்கள் அனைவருக்கும் தமிழக சட்டப்பேரவைக்குள் முதல்முறை உறுப்பினர்களாகும் வாய்ப்பு கிடைக்குமா என்பது வாக்கு எண்ணிக்கை நாளான மே. 4-இல் தெரிய வரும்.
Summary
DMK candidates list includes 17 Engineering Graduates and over 60 new candidates
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது

புதுச்சேரி பேரவைத் தேர்தலில் 41% கோடீஸ்வர வேட்பாளர்கள்!

திமுக வேட்பாளர்களில் பட்டம் பெற்றவர்கள் 125 பேர்!
164 தொகுதிகளின் திமுக வேட்பாளர்கள் பட்டியல்! முழு விவரம்

திமுக மாநாட்டிற்குச் சென்ற வேன் விபத்து! 20 பேர் காயம்! | Thanjavur | DMK
வீடியோக்கள்

நாதக வேட்பாளர் வித்யாராணி வீரப்பன் கைது! கண்ணீர் விட்டு கதறியதால் பரபரப்பு!
தினமணி செய்திச் சேவை

டிரம்ப் மோடியை கட்டுப்படுத்துவதுபோல் பாஜக அதிமுகவை கட்டுப்படுத்துகிறது! - Rahul Gandhi
இணையதளச் செய்திப் பிரிவு

கருத்துக்கணிப்பு சொல்வதெல்லாம் உண்மையா ? | TN Election 2026 | TN Election Survey 2026
தினமணி செய்திச் சேவை

#ipl2026 | தோல்வியைச் சந்திக்காத பஞ்சாப்: எழுச்சி பெறாத லக்னௌ! | Punjab Kings | Priyansh Arya |
தினமணி செய்திச் சேவை



