மீண்டும் மனிதப் பிறவி எடுத்தால் உங்கள் குடும்பத்தில் ஒருவராக பிறக்க வேண்டும்: எடப்பாடி பிரசாரத்தில் இபிஎஸ் பேச்சுஅதிமுக ஆட்சி அமைந்ததும் 3 மாதங்களில் போதைப்பொருள் ஒழிக்கப்படும் : இபிஎஸ் வாக்குறுதி விவசாயிகளை வஞ்சிக்கும் திமுகவுக்கு மக்கள் தகுந்த பாடத்தைப் புகட்ட வேண்டும் : எடப்பாடி பழனிசாமி மகளிர் இடஒதுக்கீடு மசோதாவை தோல்வி அடையச் செய்ததற்கு எதிர்ப்பு தெரிவித்து பாஜகவினர் போராட்டம்பாஜகவுடன் கூட்டணி: நிதீஷ்குமாரின் நிலைதான் எடப்பாடி பழனிசாமிக்கு - அரவிந்த் கேஜரிவால்பஹல்காம் தாக்குதல்! காயங்கள் ஆறவில்லை - குடும்பங்கள் கண்ணீர்!வரலாற்றுச் சிறப்புமிக்க அதிமுக இறந்துவிட்டது! ஸ்ரீவைகுண்டத்தில் ராகுல்! ஜப்பானில் பயங்கர நிலநடுக்கம்! சுனாமி எச்சரிக்கை விடுப்பு!
/

பெரம்பூரில் நாளை விஜய்யின் பிரசாரத்திற்கு அனுமதி மறுப்பு!

பெரம்பூரில் விஜய்யின் பிரசாரத்திற்கு அனுமதி மறுப்பு..

News image

கோப்புப் படம் - IANS

Updated On :27 மார்ச் 2026, 11:23 am

சென்னை பெரம்பூரில் தவெக தலைவர் விஜய் நாளை(மார்ச் 28) மேற்கொள்ளவிருந்த பிரசாரத்திற்கு காவல்துறை அனுமதி மறுக்கப்பட்டுள்ளது.

தமிழக சட்டப்பேரவைத் தேர்தல் அறிவிக்கப்பட்ட பிறகு தவெக தலைவர் விஜய் நாளை(மார்ச் 28) முதல் தனது பிரசாரத்தைத் தொடங்கவிருந்தார்.

இந்நிலையில் தவெக தலைவர் விஜய்யின் நாளைய பெரம்பூர் பிரசாரத்திற்கு காவல்துறை அனுமதி மறுத்துள்ளது.

நாளை காலை 10 மணிக்கு பெரம்பூர் எம்கேபி நகர் பேருந்து நிறுத்தம் அருகே பிரசாரத்திற்கு திட்டமிட்டிருந்த நிலையில், அந்த இடத்தில் 3,000 பேர் கூடினால் அசம்பாவிதம் நிகழும் என காவல்துறை அனுமதி மறுக்கப்பட்டுள்ளதாகவும் வேறு இடத்தைத் தேர்வு செய்து காவல்துறையிடம் அனுமதி பெறுமாறு தேர்தல் அதிகாரி அறிவுறுத்தியுள்ளதாகவும் தகவல்கள் தெரிவிக்கின்றன.

ஏற்கெனவே தாமதமாக விண்ணப்பித்ததால் இன்று சென்னை நுங்கம்பாக்கத்தில் நடைபெறவிருந்த தவெக வேட்பாளர்கள் அறிமுகக் கூட்டம் ரத்து செய்யப்பட்டது குறிப்பிடத்தக்கது.

தேர்தல் பொதுக்கூட்டம், பிரசாரத்திற்கு 48 மணி நேரத்திற்கு முன்னதாக ஆன்லைன் மூலமாக மட்டுமே விண்ணப்பிக்க வேண்டும் என்று சென்னை மாவட்ட தேர்தல் அதிகாரி குமரகுருபரன் இன்று காலை இதுதொடர்பாக விளக்கமளித்திருந்தது குறிப்பிடத்தக்கது.

Summary

Permission denied for Vijay's campaign in Perambur tomorrow?

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.