மாணவிக்கு பாலியல் தொல்லை அளித்த வழக்கில் சென்னை அண்ணா பல்கலைக்கழக பேராசிரியர் ஞானவேல் பாபுவை நெல்லை காவல்துறையினர் கைது செய்துள்ளனர்.
சென்னை அண்ணா பல்கலைக்கழகத்தில் நான்காம் ஆண்டு பயிலும் மாணவி ஒருவர், பேராசிரியர் ஒருவர், தனக்கு நேரடியாகவும், செல்போனில் ஆபாசமான குறுஞ்செய்திகளை அனுப்பியும் பாலியல் தொல்லை கொடுத்து வருவதாக நேற்று(வியாழக்கிழமை) சென்னை காவல் ஆணையர் அலுவலகத்தில் புகார் மனு அளித்தார்.
தனது தோழிகள் சிலருக்கும் பாலியல் தொல்லை கொடுத்து வருவதாகவும், இதனை வெளியில் சொன்னால் தொலைத்துவிடுவேன் என மிரட்டுவதாகவும் புகாரில் குறிப்பிட்டுள்ள மாணவி, இதுதொடர்பாக பல்கலைக்கழக கமிட்டியிடமும் புகார் தெரிவித்திருப்பதாகவும் கூறினார்.
இதையடுத்து கோட்டூர்புரம் காவல்துறையினர் இதுகுறித்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
தொடர்ந்து புகாரின் அடிப்படையில் அண்ணா பல்கலைக்கழக பேராசிரியர் ஞானவேல் பாபு இன்று காலை பணியிடை நீக்கம் செய்யப்பட்டார். தொடர்ந்து அவரை நெல்லையில் வைத்து தனிப்படை காவல்துறையினர் இன்று கைது செய்தனர். அவர் நெல்லையில் பதுங்கியிருந்ததாகக் கூறப்படுகிறது.
கைதான அண்ணா பல்கலை. பேராசிரியர் ஞானவேல் பாபு மீது மேலும் 4 மாணவிகள் புகார் அளித்துள்ளதாகத் தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது.
Summary
Anna University professor arrested for sexually harassing student
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது
போக்ஸோ வழக்கில் இளைஞா் கைது

மாணவிக்கு பாலியல் தொல்லை: அண்ணா பல்கலை. பேராசிரியா் கைது

மீண்டும் வெடித்த பாலியல் புகார்: அண்ணா பல்கலை பேராசிரியர் மீது மாணவி பாலியல் புகார்!

அண்ணா பல்கலை மாணவிக்கு போராசியர் பாலியல் தொல்லை: அண்ணாமலை கண்டனம்
வீடியோக்கள்

நாதக வேட்பாளர் வித்யாராணி வீரப்பன் கைது! கண்ணீர் விட்டு கதறியதால் பரபரப்பு!
தினமணி செய்திச் சேவை

டிரம்ப் மோடியை கட்டுப்படுத்துவதுபோல் பாஜக அதிமுகவை கட்டுப்படுத்துகிறது! - Rahul Gandhi
இணையதளச் செய்திப் பிரிவு

கருத்துக்கணிப்பு சொல்வதெல்லாம் உண்மையா ? | TN Election 2026 | TN Election Survey 2026
தினமணி செய்திச் சேவை

#ipl2026 | தோல்வியைச் சந்திக்காத பஞ்சாப்: எழுச்சி பெறாத லக்னௌ! | Punjab Kings | Priyansh Arya |
தினமணி செய்திச் சேவை



