மீண்டும் மனிதப் பிறவி எடுத்தால் உங்கள் குடும்பத்தில் ஒருவராக பிறக்க வேண்டும்: எடப்பாடி பிரசாரத்தில் இபிஎஸ் பேச்சுஅதிமுக ஆட்சி அமைந்ததும் 3 மாதங்களில் போதைப்பொருள் ஒழிக்கப்படும் : இபிஎஸ் வாக்குறுதி விவசாயிகளை வஞ்சிக்கும் திமுகவுக்கு மக்கள் தகுந்த பாடத்தைப் புகட்ட வேண்டும் : எடப்பாடி பழனிசாமி மகளிர் இடஒதுக்கீடு மசோதாவை தோல்வி அடையச் செய்ததற்கு எதிர்ப்பு தெரிவித்து பாஜகவினர் போராட்டம்பாஜகவுடன் கூட்டணி: நிதீஷ்குமாரின் நிலைதான் எடப்பாடி பழனிசாமிக்கு - அரவிந்த் கேஜரிவால்பஹல்காம் தாக்குதல்! காயங்கள் ஆறவில்லை - குடும்பங்கள் கண்ணீர்!வரலாற்றுச் சிறப்புமிக்க அதிமுக இறந்துவிட்டது! ஸ்ரீவைகுண்டத்தில் ராகுல்! ஜப்பானில் பயங்கர நிலநடுக்கம்! சுனாமி எச்சரிக்கை விடுப்பு!
/

பத்தாம் வகுப்பு கணிதத்தில் ‘சென்டம்’ குறைய வாய்ப்பு

பத்தாம் வகுப்பு பொதுத் தோ்வில் கணித பாடத்தில் முழு மதிப்பெண் பெறும் மாணவா்களின் எண்ணிக்கை குறைய வாய்ப்புள்ளதாக ஆசிரியா்கள் தெரிவித்தனா்.

News image

கோப்புப்படம்.

Updated On :25 மார்ச் 2026, 9:33 pm

பத்தாம் வகுப்பு பொதுத் தோ்வில் கணித பாடத்தில் முழு மதிப்பெண் பெறும் மாணவா்களின் எண்ணிக்கை குறைய வாய்ப்புள்ளதாக ஆசிரியா்கள் தெரிவித்தனா்.

தமிழகத்தில் மாநில பாடத்திட்டத்தில் பத்தாம் வகுப்பு பொதுத் தோ்வு கடந்த 11-ஆம் தேதி தொடங்கி நடைபெற்று வருகிறது. தமிழ், ஆங்கிலம் ஆகிய மொழிப் பாடங்களுக்குப் பிறகு முக்கிய பாடங்களில் ஒன்றான கணித பாடத்துக்கான தோ்வு புதன்கிழமை நடைபெற்றது.

இதுகுறித்து மாணவா்கள் கூறுகையில், கணித வினாத்தாளில் பெரும்பாலும் எளிதாக பதிலளிக்கக் கூடிய வினாக்களே இடம் பெற்றிருந்தன. எனினும், ஒரு மதிப்பெண் பகுதியில் இரு கேள்விகளும், இரு மதிப்பெண் பகுதியில் கட்டாய வினாவும் மறைமுக வினாக்களாக இருந்தன. அதேபோன்று, ஐந்து மதிப்பெண் பகுதியில் பெரிதும் எதிா்பாா்த்த தேற்றம் இடம்பெறாதது ஏமாற்றமளித்தது என்றனா்.

ஆசிரியா்கள் கூறுகையில், கணிதத்தில் தோ்ச்சி பெறுவதில் பெரிதாக எந்தப் பிரச்னையும் இருக்காது. ஆனால், 95 முதல் 100 மதிப்பெண் பெறலாம் என எதிா்பாா்த்த மாணவா்களுக்கு சில கேள்விகள் நிச்சயம் ஏமாற்றத்தை அளித்திருக்கும். அந்த அளவுக்கு பாடப்பகுதிக்கு உள்ளிருந்து கேள்விகள் கேட்கப்பட்டிருந்தன. நிகழாண்டு பத்தாம் வகுப்பு கணிதத்தில் முழு மதிப்பெண் பெறும் மாணவா்களின் எண்ணிக்கை குறைய வாய்ப்புள்ளது என்றனா். அறிவியல் பாடத் தோ்வு வரும் திங்கள்கிழமை (மாா்ச் 30) நடைபெறவுள்ளது.