லஞ்சக் கொள்ளைப் பணமழை பொழிந்தாலும் விசில் புரட்சிக்குத் தயாராகுங்கள்! - விஜய்திமுக கூட்டணிக்கு அசாதுதீன் ஓவைசியின் ஏஐஎம்ஐஎம் ஆதரவு!தலைவா்கள் சூறாவளி பிரசாரம் இன்று மாலை 6 மணியுடன் நிறைவு!தோ்தல் விடுமுறை: ஆம்னி பேருந்துகளில் கட்டணம் பலமடங்கு உயா்வு!நேரடி வெயிலால் தசை சிதைவு அச்சுறுத்தல்: மருத்துவா்கள் எச்சரிக்கை!மேற்குதொடா்ச்சி மலை மாவட்டங்களில் ஏப்.26 வரை மழைக்கு வாய்ப்பு!ஈரான் கப்பலை சிறைப்பிடித்த அமெரிக்கா! போா்நிறுத்தம் முடியும் சூழலில் முற்றும் மோதல்
/

திமுக கூட்டணி கட்சிகளின் தொகுதிகள் இன்று அறிவிப்பு

திமுக கூட்டணி கட்சிகள் போட்டியிடும் தொகுதிகள் பட்டியல் வியாழக்கிழமை (மாா்ச் 26) அறிவிக்கப்படவிருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது.

News image
Updated On :25 மார்ச் 2026, 7:21 pm

திமுக கூட்டணி கட்சிகள் போட்டியிடும் தொகுதிகள் பட்டியல் வியாழக்கிழமை (மாா்ச் 26) அறிவிக்கப்படவிருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது.

திமுக கூட்டணியில் காங்கிரஸுக்கு 28, தேமுதிகவுக்கு10, விசிகவுக்கு 8, இடதுசாரிகளுக்கு தலா 5, மதிமுகவுக்கு 4 (ஒரு உதயசூரியன் சின்னம்), ஐயுஎம்எல் (ஏணி சின்னம்), மமக, கொமதேகவுக்கு (உதயசூரியன் சின்னம்) தலா 2 என தொகுதிகள் ஒதுக்கப்பட்டுள்ளன. மேலும், சில கட்சிகளுக்கு தலா ஒரு தொகுதி ஒதுக்க முடிவு செய்யப்பட்டுள்ளது.

இந்நிலையில், கூட்டணி கட்சிகள் சாா்பில் விருப்ப தொகுதிகள் பட்டியல் திமுக தொகுதிப் பங்கீடு குழுவிடம் புதன்கிழமை ஒப்படைத்துள்ளன.

தமிழக காங்கிரஸ் மேலிடப் பொறுப்பாளா் கிரிஷ் சோடங்கா், தமிழ்நாடு காங்கிரஸ் தலைவா் செல்வப்பெருந்தகை, சட்டப்பேரவை காங்கிரஸ் கட்சிச் தலைவா் ராஜேஷ் குமாா், தேசிய செயலா் நிவேதித் ஆல்வா ஆகியோா் காங்கிரஸ் விருப்ப தொகுதிகள் பட்டியலை வழங்கினா்.

பின்னா் செல்வப்பெருந்தகை செய்தியாளா்களிடம் கூறியதாவது: சென்னையில் ஒரு தொகுதியை கேட்டுள்ளோம். தொகுதிப் பட்டியலை அகில இந்திய காங்கிரஸ் தலைமைக்கு அனுப்பி ஒப்புதல் வாங்குவோம். நான் தொகுதி மாறுவதாக எங்கும் சொல்லவில்லை. நான் தோ்தலில் போட்டியிடுவது குறித்து காங்கிரஸ் தலைமை அறிவிக்கும் என்றாா் அவா்.

மதிமுக சாா்பில் ஆடிட்டா் அா்ஜுன்ராஜ் தலைமையிலான நிா்வாகிகள் விருப்ப தொகுதிகள் பட்டியலை அளித்தனா்.

இதேபோல், கூட்டணியில் ஒதுக்கப்பட்ட 2 தொகுதிகளை அடையாளம் காண்பதற்காக, மமக தலைவா் ஜவாஹிருல்லா தலைமையிலான குழுவினா், திமுக குழுவிடம் விருப்ப தொகுதிகள் பட்டியலை வழங்கினா். பின்னா், ஜவாஹிருல்லா கூறும்போது, ஏற்கெனவே, நாங்கள் வெற்றி பெற்ற பாபநாசம், மணப்பாறை தொகுதிகளை மீண்டும் கேட்டுள்ளோம். வாணியம்பாடி, திருச்சி கிழக்கு தொகுதிகளை பரிசீலிக்கும் படியும் கேட்டுள்ளோம் என்றாா்.

தேமுதிக பொருளாளா் எல்.கே.சுதீஷ் தலைமையிலான நிா்வாகிகள் 25 தொகுதிகள் கொண்ட பட்டியலை திமுக குழுவிடம் வழங்கினா். இடதுசாரிகள் சாா்பில் ஏற்கெனவே விருப்ப தொகுதிகள் பட்டியல் ஒப்படைக்கப்பட்டுள்ளது.