மீண்டும் மனிதப் பிறவி எடுத்தால் உங்கள் குடும்பத்தில் ஒருவராக பிறக்க வேண்டும்: எடப்பாடி பிரசாரத்தில் இபிஎஸ் பேச்சுஅதிமுக ஆட்சி அமைந்ததும் 3 மாதங்களில் போதைப்பொருள் ஒழிக்கப்படும் : இபிஎஸ் வாக்குறுதி விவசாயிகளை வஞ்சிக்கும் திமுகவுக்கு மக்கள் தகுந்த பாடத்தைப் புகட்ட வேண்டும் : எடப்பாடி பழனிசாமி மகளிர் இடஒதுக்கீடு மசோதாவை தோல்வி அடையச் செய்ததற்கு எதிர்ப்பு தெரிவித்து பாஜகவினர் போராட்டம்பாஜகவுடன் கூட்டணி: நிதீஷ்குமாரின் நிலைதான் எடப்பாடி பழனிசாமிக்கு - அரவிந்த் கேஜரிவால்பஹல்காம் தாக்குதல்! காயங்கள் ஆறவில்லை - குடும்பங்கள் கண்ணீர்!வரலாற்றுச் சிறப்புமிக்க அதிமுக இறந்துவிட்டது! ஸ்ரீவைகுண்டத்தில் ராகுல்! ஜப்பானில் பயங்கர நிலநடுக்கம்! சுனாமி எச்சரிக்கை விடுப்பு!
/

தே.ஜ. கூட்டணியில் தமாகவுக்கு 5 தொகுதிகள்!

ஒட்டன்சத்திரம், ஈரோடு மேற்கு, ராணிப்பேட்டை, கிள்ளியூர், கும்பகோணம் ஆகிய 5 தொகுதிகளில் தமாக போட்டி...

News image

ஜிகே வாசன் - எக்ஸ்

Updated On :24 மார்ச் 2026, 5:02 pm

தேசிய ஜனநாயகக் கூட்டணியில் தமிழ் மாநில காங்கிரஸுக்கு 5 தொகுதிகள் ஒதுக்கப்பட்டுள்ளன.

ஒட்டன்சத்திரம், ஈரோடு மேற்கு, ராணிப்பேட்டை, கிள்ளியூர், கும்பகோணம் ஆகிய 5 தொகுதிகளில் போட்டியிடவுள்ளது.

சட்டப்பேரவைத் தேர்தலையொட்டி தொகுதிப் பங்கீட்டுப் பேச்சுவார்த்தைக்காக எடப்பாடி பழனிசாமியை தமிழ் மாநில காங்கிரஸ் தலைவர் ஜி.கே. வாசன் இன்று (மார்ச் 24) சந்தித்தார்.

சென்னை பசுமைவழிச் சாலையில் உள்ள எடப்பாடி பழனிசாமி இல்லத்தில், தமிழக பாஜக தேர்தல் பொறுப்பாளர் பியூஷ் கோயல் உள்ளிட்ட தலைவர்கள் முகாமிட்டுள்ள நிலையில் ஜி.கே. வாசனும் வருகை புரிந்தார்.

தமிழக சட்டப்பேரவைத் தேர்தல் ஏப்ரல் 23 ஆம் தேதி நடைபெறவுள்ளது. இதனையொட்டி தொகுதிப் பங்கீட்டுப் பேச்சுவார்த்தையில் அரசியல் கட்சிகள் தீவிரம் காட்டி வருகின்றன.

தேசிய ஜனநாயகக் கூட்டணியில் பாஜக (27), பாமக (அன்புமணி) (18), அமமுக (11) ஆகிய கட்சிகளுக்கு இடங்கள் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளன. தென்னிந்திய ஃபார்வர்டு பிளாக் கட்சிக்கு ஒரு தொகுதி ஒதுக்கப்பட்டுள்ளது.

இதனைத் தொடர்ந்து இக்கூட்டணியில் உள்ள இதர கட்சிகளுக்கான இடங்கள் விரைவில் முடிவு செய்யப்படும் என எடப்பாடி பழனிசாமி அறிவித்திருந்தார்.

இந்நிலையில் தொகுதிப் பங்கீடு தொடர்பாக பேச்சுவார்த்தை நடத்த எடப்பாடி பழனிசாமி இல்லத்துக்கு ஜி.கே. வாசன் வருகை புரிந்தார். ஏற்கெனவே எடப்பாடி பழனிசாமி இல்லத்தில் பியூஷ் கோயல் இருந்த நிலையில், இந்த சந்திப்பில் தமாகவுக்கான தொகுதிகள் உறுதி செய்யப்பட்டுள்ளன.

இந்த சந்திப்புக்குப் பிறகு செய்தியாளர்களுடன் ஜி.கே. வாசன் பேசியதாவது:

''ஒட்டன்சத்திரம், ஈரோடு மேற்கு, ராணிப்பேட்டை, கிள்ளியூர், கும்பகோணம் ஆகிய 5 தொகுதிகளில் தமிழ் மாநில காங்கிரஸ் போட்டியிடவுள்ளது. 5 தொகுதிகளிலும் வெற்றிபெற்று தமிழக மக்களின் மனநிலையை வேட்பாளர்கள் பிரதிபலிப்பார்கள். தேர்தல் ஆணையத்தால் சைக்கிள் சின்னத்தின் சில கோட்பாடுகள் ஏற்றுக்கொள்ளப்படாததால், தாமரை சின்னத்தில் போட்டியிடவுள்ளோம்'' எனப் பேசினார்.

Summary

Tamil Maanila Congress has been allotted 5 seats in the National Democratic Alliance

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.