மீண்டும் மனிதப் பிறவி எடுத்தால் உங்கள் குடும்பத்தில் ஒருவராக பிறக்க வேண்டும்: எடப்பாடி பிரசாரத்தில் இபிஎஸ் பேச்சுஅதிமுக ஆட்சி அமைந்ததும் 3 மாதங்களில் போதைப்பொருள் ஒழிக்கப்படும் : இபிஎஸ் வாக்குறுதி விவசாயிகளை வஞ்சிக்கும் திமுகவுக்கு மக்கள் தகுந்த பாடத்தைப் புகட்ட வேண்டும் : எடப்பாடி பழனிசாமி மகளிர் இடஒதுக்கீடு மசோதாவை தோல்வி அடையச் செய்ததற்கு எதிர்ப்பு தெரிவித்து பாஜகவினர் போராட்டம்பாஜகவுடன் கூட்டணி: நிதீஷ்குமாரின் நிலைதான் எடப்பாடி பழனிசாமிக்கு - அரவிந்த் கேஜரிவால்பஹல்காம் தாக்குதல்! காயங்கள் ஆறவில்லை - குடும்பங்கள் கண்ணீர்!வரலாற்றுச் சிறப்புமிக்க அதிமுக இறந்துவிட்டது! ஸ்ரீவைகுண்டத்தில் ராகுல்! ஜப்பானில் பயங்கர நிலநடுக்கம்! சுனாமி எச்சரிக்கை விடுப்பு!
/

புதுக்கோட்டை: மகனுடன் நிலத் தகராறு.. பெற்றோர் தூக்கிட்டுத் தற்கொலை!

புதுக்கோட்டையில் நிலத்தை விற்பனை செய்தது தொடர்பான தகராறில், பெற்றோர் தூக்கிட்டுத் தற்கொலை செய்ததைப் பற்றி...

News image

தற்கொலை - கோப்புப்படம்

Updated On :24 மார்ச் 2026, 4:21 am

புதுக்கோட்டையில் நிலத்தை விற்பனை செய்தது தொடர்பான தகராறில், பெற்றோர் தூக்கிட்டுத் தற்கொலை செய்த சம்பவம், அந்தப் பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

புதுக்கோட்டை மாவட்டம் ஆலங்குடி வட்டம் பூவரசக்குடி அருகேயுள்ள திருவுடையார்பட்டியைச் சேர்ந்த தம்பதி கருப்பையா (70), லட்சுமி (65). இவர்களுக்கு இரு மகன்கள், இரு மகள்கள் உள்ளனர்.

இரு மகள்களும் திருமணமாகி வெளியூரில் வசித்து வருகின்றனர். மூத்த மகன் சென்னையில் வேலை பார்த்து வருகிறார். இளைய மகன் முருகேசன் உள்ளூர் வசித்து வருகிறார்.

இந்த நிலையில், இளைய மகனான முருகேசன், 7 சென்ட் நிலத்தை விற்பனை செய்துள்ளார். இதுதொடர்பாக பெற்றோருக்கும் முருகேசனும் அடிக்கடி தகராறு ஏற்பட்டுள்ளது.

இவர்களுக்கிடையேயான மோதல் முற்றிய நிலையில், சோகத்தில் இருந்த கருப்பையாவும் லட்சுமியும் செவ்வாய்க்கிழமை (மார்ச் 24) காலை 6.30 மணியளவில், வீட்டின் அருகேயுள்ள மாமரத்தில் தூக்கிட்டுத் தற்கொலை செய்து கொண்டனர்.

முதிய தம்பதிகள் இருவர் தற்கொலை செய்துகொண்டது தொடர்பாக கிடைத்த தகவலின் பேரில், சம்பவ இடத்திற்கு வந்த வல்லத்திராக்கோட்டை காவல் துறையினர், இவரின் உடல்களையும் மீட்டு உடற்கூறாய்வுக்காக அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும், இதுதொடர்பான விசாரணை நடைபெற்று வருகிறது.

நிலத்தை விற்றது தொடர்பாக ஏற்பட்ட தகராறில், அவரது பெற்றோர் தூக்கிட்டுத் தற்கொலை செய்து கொண்டுள்ள துயரச் சம்பவம் அந்தப் பகுதியில் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

Summary

An incident in Pudukkottai, in which parents committed suicide by hanging themselves following a dispute over the sale of land, has caused a sensation in the region.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.