சட்டப்பேரவைத் தேர்தலில் மக்கள் நீதி மய்யம் போட்டியிடவில்லை என அறிவிக்கப்பட்டுள்ளது. மேலும், திமுக கூட்டணிக்கு நிபந்தனையற்ற ஆதரவு அளிப்பதாகவும் தெரிவித்துள்ளது.
அண்ணா அறிவாலயத்தில் இன்று(மார்ச் 24) முதல்வர் மு. க. ஸ்டாலினுடனான சந்திப்புக்குப்பின் செய்தியாளர்களுடன் பேசிய கமல் ஹாசன் தெரிவித்திருப்பதாவது : “திமுக ஆட்சி மலர வேண்டும் என்பதே நான் எடுத்திருக்கும் முடிவு”.
“இப்போது நம்முடைய நாட்டுக்கான ஒரு முக்கியமான போராட்டமாக, அதில் தமிழகம் முன்னணியில் நிற்கிறது. அதற்கு உறுதுணையாக நிற்க வேண்டியதுதான் எனது கடமை என்பதை நான் முடிவு செய்து பல நாள்களாகிவிட்டது. எனக்கு அரசியல் தொழில் அல்ல; கடமை! அப்படித்தான் எல்லோருமே இருக்க வேண்டும். எந்தத் தலைவர் இப்படிப் பண்ணினார் என்றெல்லாம் நான் கேட்கமாட்டேன். ஆனால் நான் செய்திருக்கிறேன், அதுதான் நான் நம்பும் அரசியல் - சுயநலமற்றதாக, கடமையாக இருக்க வேண்டும். எல்லோருக்கும் அது அப்படித்தான் இருக்க வேண்டும் என்று நம்பி வந்தவன் நான். அரசியலில் அதே பயணத்தில் நான் நடந்து கொண்டிருக்கிறேன்.
இந்த முயற்சி, இந்த ஆட்சி தொடர வேண்டும் என்று நினைப்பவர்கள். அது ஒரு தமிழ் குடிமகனின் உரிமை. அந்த நிலையில் நான் எடுத்திருக்கும் முடிவு இது.
என்னுடன் 40 ஆண்டுகளாக, 30, 25 ஆண்டுகளாக... இப்படி தலைமுறை தலைமுறையாக தொடர்ந்து என்னுடன் வந்து கொண்டிருகும் என்னுடைய தொண்டர்கள், ரசிகர்களாக இருந்து தொண்டர்களாக மாறியவர்கள் இன்றும் என்னுடன் இருக்கிறார்கள். என்னுடைய அறிவுரைகளை எல்லாம் கட்டளைகளாக ஏற்றவர்கள்; அரசியலுக்கு நான் வந்தவுடன் கேள்விகள் கேட்டு பதிலும் பெற்று என் பாதையில் தொடர்ந்து என்னுடன் 9 ஆண்டுகளாக அழுத்தமாக நடைபோட்டுக் கொண்டிருக்கிறர்கள். அவர்களுக்கு நன்றி சொல்ல வேண்டும். அப்படிச் சொன்னால் அவர்கள் அந்நியமாக நினைத்துவிடுவார்கள். நன்றி சொல்லிக் கொள்கிறேன். வெற்றி பெற்ற பிறகு ’தோள்களில் தினவு கொஞ்சம் குறைந்திருக்கும்’ அப்போது நாங்கள் எல்லோரையும் பாராட்டுவோம். நன்றி சொல்வோம்.
முதல்வரைச் சந்தித்தபோதும், உங்களை நான் ஆட்சிக்கட்டிலில் மீண்டும் பார்க்கிறேன் என்று வாழ்த்தக்கூட இல்லை. அதுவே எங்கள் எதிர்பார்ப்பு; அதை நீங்கள் நடத்திக்காட்டுங்கள் என்று சொல்லிவிட்டு வந்தேன். ஒரு குடிமகனாக அதை அவர்களிடம் சொல்லிவிட்டு வந்தேன்.
வென்று காட்டுங்கள்; நாங்கள் துணை நிற்கிறோம் என்று அவரிடம் சொன்னேன்.
கண்டிப்பாக, ‘நன்றி’ என்று சொன்ன அவர்களுக்கு, எங்களுக்குள் இருக்கும் அழுத்தமான உறவுக்கு எங்களுக்குச் சொல்ல வேண்டிய அவசியமில்லை என்றாலும்கூட.. எல்லோருக்கும் எதிரே நன்றி சொல்ல வேண்டும் என்று நினைத்த பெருந்தன்மைக்கு நான் என்றுமே தலைவணங்குவேன்.
நாங்கள் அவர்களுடன் நிற்போம். எத்தனை இடங்கள் என்பதையெல்லாம் நான் எண்ணவில்லை. எப்போதும் அதைப்பற்றியெல்லாம் எண்ணியதில்லை. யார் என்ன சொன்னாலும், என் கட்சி உறுப்பினர்களுடன் எல்லாம் கலந்தாலோசித்து எடுத்த முடிவு.
வெளியிலிருந்து நாங்கள் ஆதரவு கொடுப்போம். அழுத்தமான ஆதரவாக இருக்கும். தோளாக இருக்கும். நேர்மைக்கு அக்னிப்பரீட்சை கிடையாது.. நேர்மை தீ போன்றது. அந்தத்தீ பரவட்டும்.
நெருக்கடி தமிழ்நாட்டுக்கே வந்திருக்கிறது; எங்கள் கட்சிக்கு மட்டுமல்ல. என்னை அவர்கள் பெருமரியாதையுடன் நடத்திக்கொண்டிருக்கிறார்கள்; நடத்துவார்கள் என்ற நம்பிக்கையும் இருக்கிறது. ஆகவே நான் இவர்களுடன் நிற்பதை பெருமையாக மட்டுமல்ல கடமையாகவும் நினைக்கிறேன். வெற்றியை நோக்கி நாங்கள் புறப்படுகிறோம்” என்றார்.
Summary
Kamal Haasan would not contest in the upcoming polls
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது

இருமுனைப் போட்டியாக களம் மாறும்! கே. அண்ணாமலை சிறப்பு நேர்காணல்!

சொல்லப் போனால்... நயத்தக்க நாகரிகம் வேண்டாவா?

தேர்தல் பயமும் பதற்றமும் எடப்பாடி பழனிசாமியை ஆட்டிப்படைக்கின்றன: கனிமொழி

வாக்காளரின் பொறுப்பும், கடமையும்...
வீடியோக்கள்

நாதக வேட்பாளர் வித்யாராணி வீரப்பன் கைது! கண்ணீர் விட்டு கதறியதால் பரபரப்பு!
தினமணி செய்திச் சேவை

டிரம்ப் மோடியை கட்டுப்படுத்துவதுபோல் பாஜக அதிமுகவை கட்டுப்படுத்துகிறது! - Rahul Gandhi
இணையதளச் செய்திப் பிரிவு

கருத்துக்கணிப்பு சொல்வதெல்லாம் உண்மையா ? | TN Election 2026 | TN Election Survey 2026
தினமணி செய்திச் சேவை

#ipl2026 | தோல்வியைச் சந்திக்காத பஞ்சாப்: எழுச்சி பெறாத லக்னௌ! | Punjab Kings | Priyansh Arya |
தினமணி செய்திச் சேவை


