தலைவா்கள் சூறாவளி பிரசாரம் இன்று மாலை 6 மணியுடன் நிறைவு!தோ்தல் விடுமுறை: ஆம்னி பேருந்துகளில் கட்டணம் பலமடங்கு உயா்வு!நேரடி வெயிலால் தசை சிதைவு அச்சுறுத்தல்: மருத்துவா்கள் எச்சரிக்கை!மேற்குதொடா்ச்சி மலை மாவட்டங்களில் ஏப்.26 வரை மழைக்கு வாய்ப்பு!ஈரான் கப்பலை சிறைப்பிடித்த அமெரிக்கா! போா்நிறுத்தம் முடியும் சூழலில் முற்றும் மோதல்
/

வெளியே செல்வோர் கவனத்துக்கு! மார்ச் 26 முதல் வெய்யில் கொளுத்தும்!

மார்ச் 26 முதல் வெய்யில் கொளுத்தும் என்பதால் பகலில் வேலை நிமித்தமாக வெளியே செல்வோர் கவனமுடன் இருக்க அறிவுறுத்தல்

News image

கோடை வெய்யில் - file photo

Updated On :24 மார்ச் 2026, 8:20 am

தமிழகம் மற்றும் புதுச்சேரியில், மார்ச் 25 ஆம் தேதி வரை வானிலையில் பெரிய மாற்றங்கள் இருக்காது. ஆனால், மார்ச் 26 முதல் வெய்யில் கொளுத்தும் என்று வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

பிப்ரவரி மாதம் இறுதியில் இருந்தே, மாநிலம் முழுவதும் கோடை வெப்பம் வாட்டத் தொடங்கிவிட்டது. மார்ச் நிறைவுக்குள் ஒரு சில மாவட்டங்களில் வெய்யில் சதமடித்திருக்கவும் வாய்ப்பிருந்தது. ஆனால், வானிலை மாற்றத்தால் சில இடங்களில் ஆலங்கட்டி மழை பெய்து, வானம் மேகமூட்டத்துடன் காணப்பட்டதால், ஒரு சில நாள்களாக வெப்பம் அதிகரிக்காமல் இருந்தது.

இந்த நிலையில், வானிலை ஆய்வு மையம் வெளியிட்டிருக்கும் தகவலில், மார்ச் 25ஆம் தேதி வரை தமிழகத்தின் பெரும்பாலான பகுதிகளில் வெப்பம் இயல்பு நிலையில் இருக்கும். கடந்த 24 மணி நேரத்தில், வட தமிழக பகுதிகளில் இயல்பான அளவை விட 2 - 3 டிகிரி செல்சியஸ் வெப்பநிலை குறைவாகவே காணப்பட்டது.

வழக்கமாகக் காணப்படும் கோடை வெய்யிலிருந்து ஒரு சில நாள்கள் மக்கள் தப்பித்திருந்தனர்.

மார்ச் 26ஆம் தேதிக்குப் பிறகு, வெப்பநிலையானது மெல்ல உயரத் தொடங்கும் என்று வானிலை ஆய்வு மையம் எச்சரித்துள்ளது.

ஒரு சில இடங்களில் இயல்பான அளவை விட வெப்பம் அதிகரிக்கலாம் என்றும், மார்ச் 27 வரை இது தொடரும் என்றும் கூறப்பட்டுள்ளது.

இதனால், பெரும்பாலான இடங்களில் வறண்ட வானிலை நிலவக்கூடும், ஓரிரு இடங்களில் மழை பெய்யலாம் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

சென்னையிலும் வெப்பம் சற்று உயர்ந்து காணப்படும். பகலில் வெப்பநிலையானது 33-34 டிகிரி செல்சியஸ் முதல் 34 - 35 டிகிரி செல்சியஸ் வரை அதிகரிக்கக் கூடும். இரவு நேரங்களில் வெப்பநிலை 25 டிகிரி செல்சியஸ் ஆகவே நீடிக்கும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Summary

People going out for work during the day are advised to be careful as the sun will be scorching from March 26th.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.