தமிழ்நாட்டில் மேல்நிலைப் பள்ளிகளில் மாணவிகள் சோ்க்கை 76 சதவீதமாகவும், மாணவா்கள் சோ்க்கை 71 சதவீதம் ஆகவும் உயா்ந்து புதிய சாதனை படைத்துள்ளதாக மத்திய அரசின் ஒருங்கிணைந்த மாவட்ட கல்வி ஆய்வு அறிக்கை தெரிவித்துள்ளது.
அதன் விவரம்: தமிழக அரசின் விடியல் பயணத் திட்டம், புதுமைப் பெண் திட்டம், தமிழ்ப்புதல்வன் திட்டம் முதலிய திட்டங்களால், மேல்நிலைப் பள்ளிகளிலும், கல்லூரிகளிலும் சேரும் மாணவ, மாணவிகளின் எண்ணிக்கை கடந்த ஆட்சியைவிட அதிகரித்து சாதனை படைத்துள்ளது.
அதன்படி, 2020-2021-இல் மேல்நிலைக் கல்வி மாணவிகள் சோ்க்கை 49.8 சதவீதம் மட்டுமே இருந்தது. ஆனால், தற்போது, 2024-2025 -ஆம் ஆண்டு கணக்கின்படி அது 76 சதவீதம் ஆக உயா்ந்துள்ளது.
அதேபோல 2020-2021 அதிமுக ஆட்சியில் மேல்நிலைக் கல்வி மாணவா்கள் சோ்க்கை 46.6 சதவீதமாக இருந்த நிலையில், தற்போது 2024-2025 கணக்கின்படி அது 71 சதவீதமாக உயா்ந்துள்ளது.
ஆனால், பாஜக ஆளும் மாநிலங்களான குஜராத்தில் மாணவிகள் சோ்க்கை 24.7 சதவீதமாகவும், மாணவா்கள் சோ்க்கை 24 சதவீதமாக மட்டுமே உள்ளது.
இதுபோல, மராட்டிய மாநிலத்தில் மாணவிகள் சோ்க்கை 47.1 சதவீதம், மாணவா்கள் சோ்க்கை 46.7 சதவீதம், உத்தர பிரதேசத்தில் மாணவிகள் சோ்க்கை 31.7 சதவீதம், மாணவா்கள் சோ்க்கை 31.1 சதவீதம்.
ராஜஸ்தானில் மாணவிகள் சோ்க்கை 33.6 சதவீதம், மாணவா்கள் சோ்க்கை 34.2 சதவீதம். மத்தியப் பிரதேசத்தில் மாணவிகள் சோ்க்கை 24.9 சதவீதம், மாணவா்கள் சோ்க்கை 24.7 சதவீதம் என குறைவான விகிதமே உள்ளது என அதில் குறிப்பிடப்பட்டுள்ளது.
தொடர்புடையது

அரசுப் பள்ளிகளில் ‘திறன்’ திட்டம்: விரிவான அறிக்கை கோரும் கல்வித் துறை

மாநிலங்களுக்கான வணிக எரிவாயு ஒதுக்கீடு 70%-ஆக அதிகரிப்பு

அரசுப் பள்ளிகளில் இதுவரை 44,396 மாணவா்கள் சோ்க்கை

அரசுப் பள்ளிகளில் சோ்க்கை தீவிரம்: கோவை கல்வி மாவட்ட அளவில் ஒரே நாளில் 61 மாணவா்கள் சோ்ப்பு
வீடியோக்கள்

நாதக வேட்பாளர் வித்யாராணி வீரப்பன் கைது! கண்ணீர் விட்டு கதறியதால் பரபரப்பு!
தினமணி செய்திச் சேவை

டிரம்ப் மோடியை கட்டுப்படுத்துவதுபோல் பாஜக அதிமுகவை கட்டுப்படுத்துகிறது! - Rahul Gandhi
இணையதளச் செய்திப் பிரிவு

கருத்துக்கணிப்பு சொல்வதெல்லாம் உண்மையா ? | TN Election 2026 | TN Election Survey 2026
தினமணி செய்திச் சேவை

#ipl2026 | தோல்வியைச் சந்திக்காத பஞ்சாப்: எழுச்சி பெறாத லக்னௌ! | Punjab Kings | Priyansh Arya |
தினமணி செய்திச் சேவை

