பட்டுக்கோட்டை - திருத்துறைப்பூண்டி இடையே அதிவேக மின்சார ரயில் இன்று காலை சோதனை ஓட்டம் நடத்தப்பட்டது.
திருத்துறைப்பூண்டியில் இருந்து பட்டுக்கோட்டை - காரைக்குடி ரயில் தடத்தில் மின்மயமாக்கல் பணிகள் நடைபெற்று வருகிறது.
முதற்கட்டமாக திருத்துறைப்பூண்டியில் இருந்து பட்டுக்கோட்டை வரை 50 கிலோ மீட்டர் தொலைவிற்கு மின் மயமாக்கல் பணிகள் நிறைவுற்றது. அதனை தொடர்ந்து பட்டுக்கோட்டையில் இருந்து அதிராம்பட்டினம், முத்துப்பேட்டை, தில்லைவிளாகம், திருத்துறைப்பூண்டி வரை அதிவேக ரயில் சோதனை ஓட்டம் நடைபெற்றது.
இந்த அதி வேக சோதனை ஓட்ட நிகழ்ச்சியில் தெற்கு ரயில்வே முதன்மை தலைமை மின் பொறியாளர் கணேஷ் தலைமையில் ரயில்வே அதிகாரிகள் கலந்து கொண்டனர்.
பட்டுக்கோட்டை ரயில் நிலையத்தில் நடந்த அதிவேக சோதனை ஓட்ட நிகழ்ச்சியில் அதிவேக ரயிலுக்கு ரயில்வே நிர்வாகம் சார்பில் பெரிய மாலை அணிவிக்கப்பட்டது.
அதனைத் தொடர்ந்து ரயில்வே அதிகாரிகள் மற்றும் பயணிகள் அனைவருக்கும் இனிப்பு வழங்கி கொண்டாடினர். அதிவேக மின்சார ரயில் புறப்பட்டு 105 கிலோ மீட்டர் வேகத்தில் சென்று 50 கிலோ மீட்டர் தொலைவில் உள்ள திருத்துறைப்பூண்டியை 34 நிமிடத்தில் சென்றடைந்தது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது

திருத்துறைப்பூண்டி - நாகை அகல ரயில் பாதை பணி விரைவுபடுத்தப்படுமா?

கடலூா் வட்டாரப் போக்குவரத்து அலுவலகத்துக்கு வெடிகுண்டு மிரட்டல்

இரணியல் - நாகா்கோவில் டவுனுக்கு இன்றும், நாளையும் ரயில் சோதனை ஓட்டம்!

புறநகா் மின்சார ரயில்களில் பரிசுப் பொருள்கள் கொண்டு செல்வதைத் தடுக்க கண்காணிப்பு கேமராக்கள்
வீடியோக்கள்

நாதக வேட்பாளர் வித்யாராணி வீரப்பன் கைது! கண்ணீர் விட்டு கதறியதால் பரபரப்பு!
தினமணி செய்திச் சேவை

டிரம்ப் மோடியை கட்டுப்படுத்துவதுபோல் பாஜக அதிமுகவை கட்டுப்படுத்துகிறது! - Rahul Gandhi
இணையதளச் செய்திப் பிரிவு

கருத்துக்கணிப்பு சொல்வதெல்லாம் உண்மையா ? | TN Election 2026 | TN Election Survey 2026
தினமணி செய்திச் சேவை

#ipl2026 | தோல்வியைச் சந்திக்காத பஞ்சாப்: எழுச்சி பெறாத லக்னௌ! | Punjab Kings | Priyansh Arya |
தினமணி செய்திச் சேவை


