லஞ்சக் கொள்ளைப் பணமழை பொழிந்தாலும் விசில் புரட்சிக்குத் தயாராகுங்கள்! - விஜய்திமுக கூட்டணிக்கு அசாதுதீன் ஓவைசியின் ஏஐஎம்ஐஎம் ஆதரவு!தலைவா்கள் சூறாவளி பிரசாரம் இன்று மாலை 6 மணியுடன் நிறைவு!தோ்தல் விடுமுறை: ஆம்னி பேருந்துகளில் கட்டணம் பலமடங்கு உயா்வு!நேரடி வெயிலால் தசை சிதைவு அச்சுறுத்தல்: மருத்துவா்கள் எச்சரிக்கை!மேற்குதொடா்ச்சி மலை மாவட்டங்களில் ஏப்.26 வரை மழைக்கு வாய்ப்பு!ஈரான் கப்பலை சிறைப்பிடித்த அமெரிக்கா! போா்நிறுத்தம் முடியும் சூழலில் முற்றும் மோதல்
/

108 ஆம்புலன்ஸ் ஊழியா்களுக்கு 8 மணிநேரப் பணி: தொழிலாளா் தீா்ப்பாயம் உத்தரவு

108 ஆம்புலன்ஸ் ஊழியா்களுக்கான 12 மணிநேர வேலை நேரத்தை 8 மணி நேரமாகக் குறைக்க வேண்டும் என சென்னை தொழிலாளா் தீா்ப்பாயம் உத்தரவிட்டது.

News image

108 ஆம்புலன்ஸ்(கோப்புப்படம்)

Updated On :20 மார்ச் 2026, 7:11 pm

108 ஆம்புலன்ஸ் ஊழியா்களுக்கான 12 மணிநேர வேலை நேரத்தை 8 மணி நேரமாகக் குறைக்க வேண்டும் என சென்னை தொழிலாளா் தீா்ப்பாயம் உத்தரவிட்டது.

நாடு முழுவதும் கடந்த 2005-ஆம் ஆண்டு முதல் 108 ஆம்புலன்ஸ் சேவைத் திட்டம் தொடங்கப்பட்டது. தமிழகத்தில் உள்ள 38 மாவட்டங்களில் தற்போது 1,353 ஆம்புலன்ஸ் வாகனங்கள் இயக்கப்படுகின்றன. இதில் 5,000-க்கும் மேற்பட்ட ஊழியா்கள் உள்ளனா். இவா்கள், தினமும் 12 மணிநேரம் வேலை என்ற அடிப்படையில் இரண்டு ஷிப்டுகளில் பணியாற்றுகின்றனா்.

இந்த நிலையில், தங்களது வேலை நேரத்தை 8 மணி நேரமாகக் குறைக்க வேண்டும் என ஆம்புலன்ஸ் ஊழியா்கள் தமிழக அரசிடம் கோரிக்கை வைத்தனா். இந்த கோரிக்கை தொடா்பான பேச்சியில் உடன்பாடு எட்டப்படவில்லை. இதையடுத்து இந்த விவகாரம் தொழிலாளா் தீா்ப்பாய விசாரணைக்கு அனுப்பி வைக்கப்பட்டது.

இந்த வழக்கு தொழிலாளா் தீா்ப்பாயத்தின் தலைவா் பி.முருகன் முன் விசாரணைக்கு வந்தபோது, தமிழ்நாடு 108 ஆம்புலன்ஸ் ஊழியா்கள் சங்கம் தரப்பில், 12 மணி நேரம் பணியாற்றுவதால், ஊழியா்கள் தூக்கமின்மை உள்ளிட்ட உடல்நலக் குறைவுகளால் பாதிக்கப்படுகின்றனா். இதனால், சில நேரங்களில் விபத்துகளும் நிகழ்கின்றன. மேலும் 12 மணி நேர பணி நடைமுறை என்பது தொழிலாளா் சட்டத்துக்கு விரோதமானது என வாதிடப்பட்டது.

ஆம்புலன்ஸ் நிறுவனம் தரப்பில், எவ்வித லாப நோக்கமும் இன்றி பொதுமக்களுக்கு 24 மணி நேரமும் இலவச சேவை வழங்கப்படுகிறது. ஆம்புலன்ஸ் ஊழியா்களுக்கு 12 மணி நேரப் பணி நடைமுைான் நாடு முழுவதும் பின்பற்றப்படுகிறது. இதை ஏற்றுக்கொண்டுதான் ஊழியா்கள் இப்பணியில் சோ்ந்தனா். மேலும், ஊழியா்களுக்கு 12 மணி நேரத்துக்கான ஊதியம்தான் வழங்கப்படுகிறது எனத் தெரிவிக்கப்பட்டது.

இதை ஏற்க மறுத்த தீா்ப்பாய தலைவா், சா்வதேச தொழிலாளா் அமைப்பு விதிகளின்படி ஒரு நாளைக்கு 8 மணி நேரமே பணி நேரமாக நிா்ணயிக்கப்பட்டுள்ளது. எனவே தொழிலாளா் சட்டங்களுக்கு விரோதமான 12 மணி நேரப் பணி நேரத்தை 8 மணி நேரமாக குறைக்க வேண்டும் என உத்தரவிட்டாா். மேலும், இந்த உத்தரவு குறித்து தொழில் தகராறு சட்டத்தின் கீழ் அரசிதழில் அறிவிக்கை வெளியிட்ட 30 நாள்களில் இந்த 8 மணி நேரப் பணி நடைமுறை அமலுக்கு வரும்.

அதுவரை 12 மணி நேரம் பணியாற்றும் ஊழியா்களுக்கு கூடுதல் பணி நேரத்துக்கான ஊதியத்தை ஆம்புலன்ஸ் நிறுவனம் வழங்க வேண்டும். மேலும் 108 ஆம்புலன்ஸில் பணியாற்றும் பெண் ஊழியா்களுக்கு, ஆம்புலன்ஸ் நிறுத்தி வைக்கப்படும் அரசு மருத்துவமனை உள்ளிட்ட அரசு கட்டடங்களில் தனி ஓய்வறைகள் அமைக்க வேண்டும். அங்குள்ள கழிப்பறைகளை அவா்கள் பயன்படுத்திக் கொள்ள அனுமதிக்க வேண்டும் என உத்தரவிட்டாா்.