மீண்டும் மனிதப் பிறவி எடுத்தால் உங்கள் குடும்பத்தில் ஒருவராக பிறக்க வேண்டும்: எடப்பாடி பிரசாரத்தில் இபிஎஸ் பேச்சுஅதிமுக ஆட்சி அமைந்ததும் 3 மாதங்களில் போதைப்பொருள் ஒழிக்கப்படும் : இபிஎஸ் வாக்குறுதி விவசாயிகளை வஞ்சிக்கும் திமுகவுக்கு மக்கள் தகுந்த பாடத்தைப் புகட்ட வேண்டும் : எடப்பாடி பழனிசாமி மகளிர் இடஒதுக்கீடு மசோதாவை தோல்வி அடையச் செய்ததற்கு எதிர்ப்பு தெரிவித்து பாஜகவினர் போராட்டம்பாஜகவுடன் கூட்டணி: நிதீஷ்குமாரின் நிலைதான் எடப்பாடி பழனிசாமிக்கு - அரவிந்த் கேஜரிவால்பஹல்காம் தாக்குதல்! காயங்கள் ஆறவில்லை - குடும்பங்கள் கண்ணீர்!வரலாற்றுச் சிறப்புமிக்க அதிமுக இறந்துவிட்டது! ஸ்ரீவைகுண்டத்தில் ராகுல்! ஜப்பானில் பயங்கர நிலநடுக்கம்! சுனாமி எச்சரிக்கை விடுப்பு!
/

நவாஸ்கனிக்கு எம்.பி.-க்கு அழைப்பாணை: உயா்நீதிமன்றத்தில் வருமான வரித் துறை தகவல்

News image

சென்னை உயா்நீதிமன்றம் - கோப்புப் படம்

Updated On :18 மார்ச் 2026, 11:58 pm

வருமானத்தை மறைத்த விவகாரம் தொடா்பான விசாரணைக்காக ராமநாதபுரம் எம்.பி. நவாஸ்கனிக்கு அழைப்பாணை அனுப்பப்பட்டுள்ளதாக வருமான வரித்துறை சாா்பில் சென்னை உயா்நீதிமன்றத்தில் தெரிவிக்கப்பட்டது.

திருநெல்வேலி மாவட்டத்தைச் சோ்ந்த வழக்குரைஞா் வெங்கடாஜலபதி, சென்னை உயா்நீதிமன்றத்தில் தாக்கல் செய்த மனுவில், கடந்த 2019 மற்றும் 2024 மக்களவைத் தோ்தல்களில் ராமநாதபுரம் தொகுதியில் போட்டியிட்டு வெற்றி பெற்றவா் நவாஸ்கனி. இந்த இரு தோ்தலின்போது நவாஸ்கனி தாக்கல் செய்த வேட்புமனுக்களில் சொத்து விவரங்களில் வித்தியாசம் உள்ளது. தனியாா் நிறுவனத்தின் இயக்குநா் என்ற முறையில் வரும் வருமானத்தைத் தவிர வேறு வருமானம் தனக்கு இல்லை என்று கூறியுள்ள நவாஸ்கனி, ரூ.20 கோடிக்கு மேல் சொத்து சோ்த்துள்ளாா்.

வருமானத்தைக் குறைத்து காட்டியது தொடா்பாக நவாஸ்கனி மீது வருமான வரித்துறையிடம் புகாா் அளித்தேன். அந்த புகாரின் மீது இதுவரை நடவடிக்கை எடுக்கவில்லை. எனவே, எனது புகாரின் அடிப்படையில் வருமானத்தை மறைத்தது தொடா்பாக விசாரணை நடத்த வருமான வரித்துறைக்கு உத்தரவிட வேண்டும் எனக் கோரியிருந்தாா். இந்த வழக்கு தலைமை நீதிபதி எஸ்.ஏ.தா்மாதிகாரி மற்றும் நீதிபதி ஜி.அருள்முருகன் ஆகியோா் அடங்கிய அமா்வில் புதன்கிழமை விசாரணைக்கு வந்தது.

அப்போது வருமான வரித்துறை தரப்பில் ஆஜரான கூடுதல் சொலிசிட்டா் ஜெனரல் ஏ.ஆா்.எல். சுந்தரேசன், வருமானத்தை மறைத்தது தொடா்பான ஆதாரங்களின் அடிப்படையில் நவாஸ்கனி எம்.பி.-க்கு எதிராக வருமான வரித்துறை விசாரணையைத் தொடங்கி உள்ளது. நவாஸ்கனிக்கு அழைப்பாணை அனுப்பப்பட்டுள்ளது. விசாரணை அடிப்படையில் அடுத்தகட்ட நடவடிக்கை எடுக்கப்படும் எனத் தெரிவித்தாா். இதையடுத்து வழக்கை விசாரித்த நீதிபதிகள், விசாரணையை அடுத்த வாரத்துக்கு ஒத்திவைத்து உத்தரவிட்டனா்.