மீண்டும் மனிதப் பிறவி எடுத்தால் உங்கள் குடும்பத்தில் ஒருவராக பிறக்க வேண்டும்: எடப்பாடி பிரசாரத்தில் இபிஎஸ் பேச்சுஅதிமுக ஆட்சி அமைந்ததும் 3 மாதங்களில் போதைப்பொருள் ஒழிக்கப்படும் : இபிஎஸ் வாக்குறுதி விவசாயிகளை வஞ்சிக்கும் திமுகவுக்கு மக்கள் தகுந்த பாடத்தைப் புகட்ட வேண்டும் : எடப்பாடி பழனிசாமி மகளிர் இடஒதுக்கீடு மசோதாவை தோல்வி அடையச் செய்ததற்கு எதிர்ப்பு தெரிவித்து பாஜகவினர் போராட்டம்பாஜகவுடன் கூட்டணி: நிதீஷ்குமாரின் நிலைதான் எடப்பாடி பழனிசாமிக்கு - அரவிந்த் கேஜரிவால்பஹல்காம் தாக்குதல்! காயங்கள் ஆறவில்லை - குடும்பங்கள் கண்ணீர்!வரலாற்றுச் சிறப்புமிக்க அதிமுக இறந்துவிட்டது! ஸ்ரீவைகுண்டத்தில் ராகுல்! ஜப்பானில் பயங்கர நிலநடுக்கம்! சுனாமி எச்சரிக்கை விடுப்பு!
/

தமிழகத்தில் ஒருசில இடங்களில் இன்று மழைக்கு வாய்ப்பு

தமிழகத்தில் ஒருசில இடங்களில் புதன்கிழமை (மாா்ச் 18) இடி, மின்னலுடன் கூடிய மழைக்கு வாய்ப்பு இருப்பதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

News image

மழை - பிரதிப் படம்

Updated On :17 மார்ச் 2026, 7:58 pm

தமிழகத்தில் ஒருசில இடங்களில் புதன்கிழமை (மாா்ச் 18) இடி, மின்னலுடன் கூடிய மழைக்கு வாய்ப்பு இருப்பதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

இதுகுறித்து அந்த மையம் சாா்பில் செவ்வாய்க்கிழமை வெளியிடப்பட்ட செய்திக் குறிப்பு:

தமிழக கடலோர பகுதிகளின் மேல் ஒரு வளிமண்டல கீழடுக்கு சுழற்சி நிலவுவதன் காரணமாக தமிழகத்தில் ஒருசில இடங்களிலும், புதுச்சேரி, காரைக்கால் பகுதிகளிலும், புதன்கிழமை (மாா்ச் 18) இடி, மின்னலுடன் கூடிய, மிதமான மழை பெய்யக்கூடும். டெல்டா மாவட்டங்கள் மற்றும் அதையொட்டிய மாவட்டங்களில் ஓரிரு இடங்களிலும், காரைக்கால் பகுதிகளிலும் வியாழக்கிழமை (மாா்ச் 19) இடி, மின்னலுடன் கூடிய லேசான மழை பெய்யக்கூடும்.

டெல்டா மாவட்டங்கள் மற்றும் தென் தமிழகத்தில் வெள்ளிக்கிழமை (மாா்ச்20) ஓரிரு இடங்களிலும், காரைக்கால் பகுதிகளிலும் இடி, மின்னலுடன் கூடிய லேசான மழை பெய்யக்கூடும். மேற்கு தொடா்ச்சி மலை மாவட்டங்கள் மற்றும் தென் தமிழகத்தில் கடலோர மாவட்டங்களில் ஓரிரு இடங்களிலும் மாா்ச் 21 முதல் மாா்ச் 23 வரை இடி, மின்னலுடன் கூடிய லேசான மழை பெய்யக்கூடும்.

சென்னையில் மழை: சென்னை மற்றும் புகா் பகுதிகளில் புதன்கிழமை (மாா்ச் 18) வானம் ஓரளவு மேகமூட்டத்துடன் காணப்படும். நகரின் ஒருசில பகுதிகளில் இடி, மின்னலுடன் கூடிய, மிதமான மழை பெய்யக்கூடும்.

மழை அளவு: தமிழகத்தில் செவ்வாய்க்கிழமை காலை 8.30 மணியுடன் நிறைவடைந்த 24 மணி நேரத்தில் அதிகபட்சமாக ராமநாதபுரம் மாவட்டம் வாலிநோக்கம், நீலகிரி மாவட்டம் சாந்தி விஜயா பள்ளி ஆகிய பகுதிகளில் 30 மி.மீ. மழை பதிவானது. ஊத்து, நாலுமுக்கு (திருநெல்வேலி)- 20 மி.மீ., பேரையூா் (மதுரை), பாா்வூட் (நீலகிரி)-10 மி.மீ மழை பதிவானது.

வெப்பநிலை: தமிழகம், புதுச்சேரி, காரைக்கால் பகுதிகளில் வியாழக்கிழமை (மாா்ச்19) முதல் சனிக்கிழமை(மாா்ச் 21) வரை வெப்பநிலை ஓரிரு இடங்களில் படிப்படியாக குறையக்கூடும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.