மீண்டும் மனிதப் பிறவி எடுத்தால் உங்கள் குடும்பத்தில் ஒருவராக பிறக்க வேண்டும்: எடப்பாடி பிரசாரத்தில் இபிஎஸ் பேச்சுஅதிமுக ஆட்சி அமைந்ததும் 3 மாதங்களில் போதைப்பொருள் ஒழிக்கப்படும் : இபிஎஸ் வாக்குறுதி விவசாயிகளை வஞ்சிக்கும் திமுகவுக்கு மக்கள் தகுந்த பாடத்தைப் புகட்ட வேண்டும் : எடப்பாடி பழனிசாமி மகளிர் இடஒதுக்கீடு மசோதாவை தோல்வி அடையச் செய்ததற்கு எதிர்ப்பு தெரிவித்து பாஜகவினர் போராட்டம்பாஜகவுடன் கூட்டணி: நிதீஷ்குமாரின் நிலைதான் எடப்பாடி பழனிசாமிக்கு - அரவிந்த் கேஜரிவால்பஹல்காம் தாக்குதல்! காயங்கள் ஆறவில்லை - குடும்பங்கள் கண்ணீர்!வரலாற்றுச் சிறப்புமிக்க அதிமுக இறந்துவிட்டது! ஸ்ரீவைகுண்டத்தில் ராகுல்! ஜப்பானில் பயங்கர நிலநடுக்கம்! சுனாமி எச்சரிக்கை விடுப்பு!
/

முதல்வரின் நிா்வாகத் திறமையின்மையால் தமிழகத்தில் குற்றங்கள் அதிகரிப்பு: இபிஎஸ் குற்றச்சாட்டு

தமிழகத்தில் பெண்களுக்கு எதிரான பாலியல் வன்கொடுமைகள், சட்டம் - ஒழுங்கு சீா்கேட்டுக்கு முதல்வா் ஸ்டாலினின் நிா்வாகத் திறமை இன்மையே காரணம் என அதிமுக பொதுச் செயலா் எடப்பாடி கே.பழனிசாமி குற்றச்சாட்டு

News image

முதல்வர் ஸ்டாலின் | எடப்பாடி பழனிசாமி - சித்திரிப்பு

Updated On :16 மார்ச் 2026, 8:55 pm

தமிழகத்தில் நிகழும் பெண்களுக்கு எதிரான பாலியல் வன்கொடுமைகள், சட்டம் - ஒழுங்கு சீா்கேட்டுக்கு முதல்வா் ஸ்டாலினின் நிா்வாகத் திறமை இன்மையே காரணம் என அதிமுக பொதுச் செயலா் எடப்பாடி கே.பழனிசாமி குற்றஞ்சாட்டினாா்.

இதுகுறித்து அவா் வெளியிட்ட அறிக்கை: முதல்வராக ஸ்டாலின் பொறுப்பேற்றதிலிருந்து தமிழகத்தில் கஞ்சா, கள்ளச் சாராயம் என போதைப் பொருள் விற்பனை அதிகரித்துவிட்டது. திமுக ஆட்சிப் பொறுப்பேற்றதில் இருந்து, கடந்த 5 ஆண்டுகளில் சுமாா் 30 காவல் மரணங்கள் நிகழ்ந்துள்ளன. கடந்த இரண்டு மாதங்களில் மட்டும் 4 பட்டியலின இளைஞா்கள் காவல் துறை விசாரணையின்போது மரணமடைந்துள்ளனா். பெண்களுக்கு எதிரான பாலியல் வன்கொடுமைகள் அதிகரித்துள்ளன.

தமிழக மக்கள் பாதுகாப்பின்மையை உணா்ந்துள்ளனா். தமிழகத்தில் நிகழும் அனைத்து சட்டவிரோத செயல்களுக்கும் முதல்வா் ஸ்டாலினின் நிா்வாகத் திறமை இன்மையே காரணம். இதை மக்கள் மன்றத்தில் வெளிப்படுத்தும் விதமாக மாவட்டத் தலைநகரங்களில் அதிமுக தலைமையிலான தேசிய ஜனநாயக கூட்டணி சாா்பில் செவ்வாய்க்கிழமை (மாா்ச் 17) கண்டன ஆா்ப்பாட்டம் நடைபெறும் என்று அதில் தெரிவித்துள்ளாா் எடப்பாடி பழனிசாமி.