தலைவா்கள் சூறாவளி பிரசாரம் இன்று மாலை 6 மணியுடன் நிறைவு!தோ்தல் விடுமுறை: ஆம்னி பேருந்துகளில் கட்டணம் பலமடங்கு உயா்வு!நேரடி வெயிலால் தசை சிதைவு அச்சுறுத்தல்: மருத்துவா்கள் எச்சரிக்கை!மேற்குதொடா்ச்சி மலை மாவட்டங்களில் ஏப்.26 வரை மழைக்கு வாய்ப்பு!ஈரான் கப்பலை சிறைப்பிடித்த அமெரிக்கா! போா்நிறுத்தம் முடியும் சூழலில் முற்றும் மோதல்
/

எல்பிஜி நிலையங்கள் மூடல்! ஆட்டோ சேவை முடங்கும் அபாயம்!

எல்பிஜி நிலையங்கள் மூடப்படுவது பற்றி...

News image

கோப்புப்படம் - EPS

Updated On :11 மார்ச் 2026, 7:47 am

தமிழ்நாட்டில் ஆட்டோக்கள், வாடகை கார்களுக்கு விநியோகிக்கப்படும் எல்பிஜி எரிவாயு நிலையங்கள் படிப்படியாக மூடப்பட்டு வருகின்றன.

மத்திய கிழக்கு போர் காரணமாக வளைகுடா நாடுகளில் இருந்து இந்தியாவுக்கு இறக்குமதி செய்யப்படும் எரிப்பொருள்கள் முடங்கியுள்ளன.

வளைகுடா நாடுகளில் இருந்து இந்தியாவுக்கு எரிப்பொருள்கள் கொண்டு வரப்படும் ஹோர்முஸ் நீரிணை வழித்தடத்தை கடந்த 10 நாள்களாக ஈரான் மூடியுள்ளது. இதனால் கையிருப்பில் இருக்கும் எரிவாயு, பெட்ரோல், டீசல்கள் படிப்படியாக குறைந்து வருகின்றன.

முதல்கட்டமாக வணிகப் பயன்பாட்டுக்கு விநியோகிக்கப்படும் சமையல் சிலிண்டர்களை நிறுவனங்கள் நிறுத்திவைத்திருக்கும் நிலையில், 5 நட்சத்திர உணவகங்கள் முதல் டீக்கடைகள், தட்டுக்கடைகள் வரை படிப்படியாக மூடப்பட்டு வருகின்றன.

இந்த நிலையில், சென்னை, கோவை உள்ளிட்ட முக்கிய நகரங்களில் இன்று காலைமுதல் ஆட்டோ, வாடகை கார்களுக்கு விநியோகிக்கப்படும் எல்பிஜி நிலையங்கள் மூடப்பட்டு வருகின்றன.

நகரின் சில பகுதிகளில் மட்டுமே எல்பிஜி நிலையங்கள் திறக்கப்பட்டு வரும் நிலையில், மணிக் கணக்கில் ஆட்டோக்களும், கார்களும் வரிசையில் நிற்கின்றன.

படிப்படியாக எல்பிஜி நிலையங்கள் அனைத்தும் மூடப்படும் பட்சத்தில் ஆட்டோ சேவைகள் முடங்கும் அபாயம் ஏற்பட்டுள்ளது. பெட்ரோல் மூலம் இயங்கும் ஆட்டோக்களின் கட்டணம் பல மடங்கு உயர வாய்ப்புள்ளது.

Summary

LPG bunks closed! Auto services at risk of being disrupted!

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.