விளாத்திகுளம் அருகே 12 ஆம் வகுப்பு மாணவி பாலியல் வன்கொடுமை செய்யப்பட்டு தலை துண்டித்துக் கொடூரமான முறையில் கொல்லப்பட்டுள்ளார்.
தூத்துக்குடி மாவட்டம் குளத்தூர் காவல் நிலையத்திற்குட்பட்ட வேடநத்தம் கிராமத்தில் 12 ஆம் வகுப்பு பயிலும் மாணவி, இயற்கை உபாதைக்காக நேற்று மாலை காட்டுப் பகுதிக்குச் சென்றுள்ளார். அப்பகுதியிலுள்ள குடியிருப்புகளில் கழிவறை இல்லாததால், காட்டுப்பகுதிக்குச் சென்றுள்ளார்.
நீண்ட நேரமாகியும் மாணவி திரும்பாததால், பெற்றோர்கள், உறவினர்கள் தேடியும் கிடைக்காததால், காவல் நிலையத்தில் புகாரளித்துள்ளனர்.
இதனிடையே, வேடநத்தம் அருகே உள்ள காட்டுப்பகுதியில் இளம்பெண் சடலம் துண்டாக வெட்டப்பட்டு கிடப்பதாக தகவல் கிடைத்துள்ளது.
தொடர்ந்து விசாரணை மேற்கொண்ட காவல் துறையினர், அந்த உடல் காணாமல்போன மாணவி எனத் தெரியவந்துள்ளது. அவர் பாலியல் வன்கொடுமை செய்யப்பட்டு பின்னர் தலை துண்டித்துக் கொல்லப்பட்டுள்ளதாக காவல் துறை விசாரணையில் தெரியவந்துள்ளது.
கொலை செய்த குற்றவாளியை கண்டுபிடிக்க வலியுறுத்தி, கொல்லப்பட்ட மாணவியின் உறவினர்களும், குடும்பத்தினரும் சாலைமறியலில் ஈடுபட்டனர். இதனால் அப்பகுதியில் பரபரப்பு நிலவியது.
மாணவி பாலியல் வன்கொடுமை செய்யப்பட்டு கொல்லப்பட்ட சம்பவத்துக்கு திமுக எம்.பி. கனிமொழி, மாநில பாஜக முன்னாள் அண்ணாமலை உள்ளிட்ட பல்வேறு அரசியல் கட்சித் தலைவர்கள் கண்டனம் தெரிவித்துள்ளனர்.
Summary
Class 12 student sexually assaulted and murdered in Vilathikulam
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது

விளாத்திகுளம் மாணவி கொலை வழக்கு: கைதானவரின் பிணை ரத்து

மாணவி விஷம் அருந்தி உயிரிழப்பு: போலீஸாா் விசாரணை
பெண் தலை துண்டித்துக் கொலை: கணவா் கைது

குளத்தூா் அருகே 12 ஆம் வகுப்பு மாணவி கொலை: குற்றவாளிகளை பிடிக்க 6 தனிப்படைகள் அமைப்பு
வீடியோக்கள்

நாதக வேட்பாளர் வித்யாராணி வீரப்பன் கைது! கண்ணீர் விட்டு கதறியதால் பரபரப்பு!
தினமணி செய்திச் சேவை

டிரம்ப் மோடியை கட்டுப்படுத்துவதுபோல் பாஜக அதிமுகவை கட்டுப்படுத்துகிறது! - Rahul Gandhi
இணையதளச் செய்திப் பிரிவு

கருத்துக்கணிப்பு சொல்வதெல்லாம் உண்மையா ? | TN Election 2026 | TN Election Survey 2026
தினமணி செய்திச் சேவை

#ipl2026 | தோல்வியைச் சந்திக்காத பஞ்சாப்: எழுச்சி பெறாத லக்னௌ! | Punjab Kings | Priyansh Arya |
தினமணி செய்திச் சேவை



