இயக்குநரும், தயாரிப்பாளருமான தக்காளி சீனிவாசன் உடல்நலக்குறைவால் பெங்களூரில் செவ்வாய்க்கிழமை (மார்ச் 10) காலமானார்.
1980 காலகட்டத்தில் தமிழ்த்திரையுலகில் இயக்குநர், நடிகர், தயாரிப்பாளர் எனப் பன்முகத்தன்மை கொண்ட தக்காளி சீனிவாசன் இசையமைப்பாளராகவும் பணியாற்றியுள்ளார்.
திகில் மற்றும் கொலைக் குற்றங்கள் தொடர்பான மர்மக்கதைகளை தயாரித்து பிரபலமான தக்காளி சீனிவாசன் இவர்கள் வருங்காலத் தூண்கள், மனசுக்குள் மத்தாப்பு, நாளைய மனிதன், அதிசய மனிதன் போன்ற படங்களைத் தயாரித்துள்ளார்.
இவர் ஜென்ம நட்சத்திரம், விட்னஸ், அசோகவனம் உள்ளிட்ட திரைப்படங்களையும் இயக்கியுள்ளார். நாளைய மனிதன், அதிசய மனிதன், ஜென்ம நட்சத்திரம், ஃபிட்னஸ் உள்ளிட்ட சில படங்களுக்கு இசையமைப்பாளராகவும் பணியாற்றியுள்ளார்.
கமல்ஹாசனின் சூரசம்ஹாரம் உள்ளிட்ட சில படங்களிலும் நடித்துள்ள சீனிவாசன் உடல்நலக்குறைவால் மறைந்ததைத் தொடர்ந்து திரையுலகினரும், ரசிகர்களும் அவரது மறைவுக்கு இரங்கல் தெரிவித்து வருகின்றனர்.
இவரது இறுதிச் சடங்குகள் நாளை (மார்ச் 11) பெங்களூரில் நடைபெறும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
Summary
Director and producer Tomato Srinivasan passed away in Bengaluru on Tuesday (March 10) due to ill health.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது

இளைஞா் விஷமருந்தி தற்கொலை

இயக்குநர் பாரதிராஜாவின் நிலைமை என்ன?

அதிமுக- திமுக இடையேதான் போட்டி: இயக்குநா் சுந்தா்.சி

ஜோயா அக்தர் வெளியிட்ட புதிய படத்தின் அறிவிப்பு!
வீடியோக்கள்

நாதக வேட்பாளர் வித்யாராணி வீரப்பன் கைது! கண்ணீர் விட்டு கதறியதால் பரபரப்பு!
தினமணி செய்திச் சேவை

டிரம்ப் மோடியை கட்டுப்படுத்துவதுபோல் பாஜக அதிமுகவை கட்டுப்படுத்துகிறது! - Rahul Gandhi
இணையதளச் செய்திப் பிரிவு

கருத்துக்கணிப்பு சொல்வதெல்லாம் உண்மையா ? | TN Election 2026 | TN Election Survey 2026
தினமணி செய்திச் சேவை

#ipl2026 | தோல்வியைச் சந்திக்காத பஞ்சாப்: எழுச்சி பெறாத லக்னௌ! | Punjab Kings | Priyansh Arya |
தினமணி செய்திச் சேவை


