லஞ்சக் கொள்ளைப் பணமழை பொழிந்தாலும் விசில் புரட்சிக்குத் தயாராகுங்கள்! - விஜய்திமுக கூட்டணிக்கு அசாதுதீன் ஓவைசியின் ஏஐஎம்ஐஎம் ஆதரவு!தலைவா்கள் சூறாவளி பிரசாரம் இன்று மாலை 6 மணியுடன் நிறைவு!தோ்தல் விடுமுறை: ஆம்னி பேருந்துகளில் கட்டணம் பலமடங்கு உயா்வு!நேரடி வெயிலால் தசை சிதைவு அச்சுறுத்தல்: மருத்துவா்கள் எச்சரிக்கை!மேற்குதொடா்ச்சி மலை மாவட்டங்களில் ஏப்.26 வரை மழைக்கு வாய்ப்பு!ஈரான் கப்பலை சிறைப்பிடித்த அமெரிக்கா! போா்நிறுத்தம் முடியும் சூழலில் முற்றும் மோதல்
/

தமிழ்நாட்டின் 6 மாநிலங்களவை உறுப்பினர்கள் யார்யார்? முழு விவரம்!

தமிழ்நாட்டின் 6 மாநிலங்களவை உறுப்பினர்கள் பற்றி...

News image

தம்பிதுரை, திருச்சி சிவா, அன்புமணி - ANI

Updated On :5 மார்ச் 2026, 5:28 am

தமிழ்நாட்டில் காலியாகவுள்ள 6 மாநிலங்களவை இடங்களுக்கு போட்டியிடுபவர்களின் முழுப் பட்டியல் வெளியாகியுள்ளது.

திமுகவில் இருந்து இருவர், அதிமுக, காங்கிரஸ், பாமக, தேமுதிக ஆகிய கட்சிகளில் இருந்து தலா ஒருவர் போட்டியின்றி தேர்வு செய்யப்பட வாய்ப்புள்ளது.

தமிழ்நாட்டிலிருந்து மாநிலங்களவைக்கு தேர்ந்தெடுக்கப்பட்ட 6 உறுப்பினர்களின் பதவிக்காலம் வரும் ஏப்ரல் 2 ஆம் தேதியுடன் நிறைவடைகிறது.

இதில், திமுக சார்பில் திருச்சி சிவா, என்.ஆர். இளங்கோ, அந்தியூர் செல்வராஜ், கனிமொழி சோமு, அதிமுகவின் தம்பிதுரை மற்றும் தமிழ் மாநில காங்கிரஸ் தலைவர் ஜி.கே. வாசன் ஆகியோரின் பதவிக்காலம் முடிவடைகிறது.

இந்த நிலையில், தமிழ்நாடு உட்பட நாட்டில் 10 மாநிலங்களில் காலியாக உள்ள 37 மாநிலங்களவை இடங்களுக்கு மார்ச் 16 ஆம் தேதி தேர்தல் நடைபெறும் என தேர்தல் ஆணையம் அறிவித்துள்ளது.

மாநிலங்களவை உறுப்பினர் பதவிக்கான வேட்புமனுத் தாக்கல் இன்றுடன் நிறைவடையவுள்ளது.

தமிழ்நாட்டில் காலியாகவுள்ள 6 இடங்களில் எம்.எல்.ஏ.க்கள் எண்ணிக்கையின் அடிப்படையில் 4 இடங்கள் திமுகவுக்கும் 2 இடங்கள் அதிமுகவுக்கும் கிடைக்கும்.

திமுக கூட்டணியில் தேமுதிகவுக்கு ஒரு மாநிலங்களவை இடமும், காங்கிரஸுக்கு ஒரு மாநிலங்களவை இடமும் ஒதுக்கப்பட்டது. அதிமுக தரப்பில் பாமகவுகு ஒரு இடம் ஒதுக்கப்பட்டது.

இந்த நிலையில், அந்தந்தக் கட்சிகள் தங்களின் வேட்பாளர்களின் பெயர்களை அறிவித்துள்ளனர்.

திமுகவின் திருச்சி சிவா, பேராசிரியர் கான்ஸ்டன்டைன் ரவீந்திரன், அதிமுக தம்பிதுரை, காங்கிரஸ் கிறிஸ்டோபர் திலக், பாமக அன்புமணி, தேமுதிக எல்.கே. சுதீஷ் ஆகியோர் போட்டியிடுகின்றனர்.

தம்பிதுரை 5 முறை மக்களவை உறுப்பினராகவும், அதில், இருமுறை மக்களவை துணைத் தலைவராகவும், மத்திய அமைச்சராகவும் பதவி வகித்துள்ளார். 2019 மக்களவைத் தேர்தலில் காங்கிரஸின் ஜோதி மணியிடம் தோல்வியடைந்த நிலையில், 2020-ல் மாநிலங்களவைக்கு தேர்ந்தெடுக்கப்பட்டார்.

திருச்சி சிவா தொடர்ந்து 6-வது முறையாக மாநிலங்களவைக்கு தேர்வாகவுள்ளார்.பாமகவின் அன்புமணி 3-வது முறையாக தேர்வாகவுள்ளார். இவர் மத்திய அமைச்சராக இருந்துள்ளார்.

பேராசிரியர் கான்ஸ்டன்டைன் ரவீந்திரன், கிறிஸ்டோபர் திலக், எல்.கே. சுதீஷ் ஆகியோர் முதல்முறையாக மாநிலங்களவைக்கு செல்லவுள்ளனர்.

Summary

Who are the 6 Rajya Sabha members from Tamil Nadu? Full details!

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.