தலைவா்கள் சூறாவளி பிரசாரம் இன்று மாலை 6 மணியுடன் நிறைவு!தோ்தல் விடுமுறை: ஆம்னி பேருந்துகளில் கட்டணம் பலமடங்கு உயா்வு!நேரடி வெயிலால் தசை சிதைவு அச்சுறுத்தல்: மருத்துவா்கள் எச்சரிக்கை!மேற்குதொடா்ச்சி மலை மாவட்டங்களில் ஏப்.26 வரை மழைக்கு வாய்ப்பு!ஈரான் கப்பலை சிறைப்பிடித்த அமெரிக்கா! போா்நிறுத்தம் முடியும் சூழலில் முற்றும் மோதல்
/

காங்கிரஸின் கிறிஸ்டோபர் திலக் வேட்புமனு தாக்கல்!

மாநிலங்களவைத் தேர்தலில் போட்டியிட காங்கிரஸ் வேட்பாளர் கிறிஸ்டோபர் திலக் வேட்புமனு தாக்கல் செய்துள்ளது பற்றி...

News image

கிறிஸ்டோபர் திலக் வேட்புமனு தாக்கல்

Updated On :5 மார்ச் 2026, 7:51 am

மாநிலங்களவைத் தேர்தலில் போட்டியிட திமுக ஆதரவுடன் காங்கிரஸ் கட்சி வேட்பாளர் கிறிஸ்டோபர் திலக், முதல்வர் மு.க. ஸ்டாலின் முன்னிலையில் இன்று(மார்ச் 5) வேட்புமனு தாக்கல் செய்தார்.

திமுக கூட்டணியில் காங்கிரஸ் கட்சிக்கு 28 தொகுதிகளுடன் ஒரு மாநிலங்களவை இடம் வழங்கப்பட்ட நிலையில் காங்கிரஸ் வேட்பாளர் கிறிஸ்டோபர் திலக் சென்னை தலைமைச் செயலகத்தில் முதல்வர் மு.க. ஸ்டாலின் முன்னிலையில் இன்று வேட்புமனுவை தாக்கல் செய்தார்.

காங்கிரஸ் தேர்தல் பொறுப்பாளர் கிரிஷ் சோடங்கர், தமிழாக்கி காங்கிரஸ் கமிட்டித் தலைவர் செல்வப்பெருந்தகை உள்ளிட்ட நிர்வாகிகள் உடனிருந்தனர்.

திருச்சியைச் சேர்ந்த கிறிஸ்டோபர் திலக் காங்கிரஸ் கட்சியின் வடகிழக்கு மாநில பொறுப்பாளர் பதவியில் உள்ளார். இவர் பதற்றமான சூழ்நிலையில் மணிப்பூர், நாகலாந்து மாநிலங்களில் காங்கிரஸ் சார்பில் களப்பணியாற்றியவர், ராகுல் காந்திக்கு நெருக்கமானவர் என்று கூறப்படுகிறது.

மாநிலங்களவைத் தேர்தல்

தமிழ்நாட்டிலிருந்து மாநிலங்களவைக்குத் தேர்ந்தெடுக்கப்பட்ட திமுகவின் திருச்சி சிவா, என்.ஆர். இளங்கோ, அந்தியூர் செல்வராஜ், கனிமொழி சோமு, அதிமுகவின் தம்பிதுரை மற்றும் தமிழ் மாநில காங்கிரஸ் தலைவர் ஜி.கே. வாசன் ஆகியோரது பதவிக்காலம் வரும் ஏப்ரல் 2 ஆம் தேதியுடன் நிறைவடைகிறது.

இதையடுத்து தமிழ்நாடு உள்பட நாட்டில் 10 மாநிலங்களில் காலியாக உள்ள 37 மாநிலங்களவை இடங்களுக்கு மார்ச் 16 ஆம் தேதி தேர்தல் நடைபெறுகிறது. மாநிலங்களவை உறுப்பினர் பதவிக்கான வேட்புமனுத் தாக்கல் இன்றுடன் நிறைவடைகிறது.

தமிழ்நாட்டில் காலியாகவுள்ள 6 இடங்களில் எம்.எல்.ஏ.க்கள் எண்ணிக்கையின் அடிப்படையில் 4 இடங்கள் திமுகவுக்கும் 2 இடங்கள் அதிமுகவுக்கும் கிடைக்கும்.

இதன்படி அதிமுக சார்பில் தம்பிதுரையும் பாமகவுக்கு ஒரு இடம் வழங்கப்பட்ட நிலையில் அன்புமணியும் போட்டியிடுகின்றனர். இருவரும் இன்று அதிமுக பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமி முன்னிலையில் வேட்புமனு தாக்கல் செய்தனர்.

தொடர்ந்து திமுக சார்பில் திருச்சி சிவா, பேராசிரியர் கான்ஸ்டன்டைன் ரவீந்திரன் இருவரும் முதல்வர் மு.க. ஸ்டாலின் முன்னிலையில் இன்று தங்களது வேட்புமனுவை தாக்கல் செய்தனர்.

தொடர்ந்து காங்கிரஸ் சார்பில் கிறிஸ்டோபர் திலக் வேட்புமனு தாக்கல் செய்த நிலையில் திமுக கூட்டணியில் தேமுதிக சார்பில் எல்.கே.சுதீஷ் வேட்புமனு தாக்கல் செய்யவுள்ளார்.

Summary

Congress candidate Christopher Tilak files nomination for rajya sabha elections

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.